காதலர் தின ஸ்பெஷல் - ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ்-க்கு விசேஷ சலுகை அறிவித்த நத்திங்!

நத்திங் நிறுவன ஸ்மார்ட்போன் மற்றும் இயர்பட்ஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நத்திங் போன் (2) மாடல் பற்றிய தகவலை நத்திங் நிறுவனர் கார்ல் பெய் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.
காதலர் தின ஸ்பெஷல் - ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ்-க்கு விசேஷ சலுகை அறிவித்த நத்திங்!
Published on

நத்திங் நிறுவனம் தனது சாதனங்களுக்கு காதலர் தினத்தை ஒட்டி விசேஷ சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. நத்திங் போன் (1) மற்றும் இயர் (ஸ்டிக்) உள்ளிட்ட மாடல்களுக்கு காதலர் தின சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

நத்திங் போன் (1) மாடல் நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் ஒரே ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். இது கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இயர் (ஸ்டிக்) மாடல் நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் இரண்டாவது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். இது கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

இரு சாதனங்களும் பிரத்யேக டிசைன், க்ளிஃப் இண்டர்ஃபேஸ் கொண்டிருக்கின்றன. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் பிரத்யேக டுவிஸ்டிங் சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது. நத்திங் போன் (1) மாடல் டிரான்ஸ்பேரண்ட் டிசைன், எல்இடி ஸ்ட்ரிப்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் பிராசஸர், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலில் 12.6mm டைனமிக் டிரைவர்கள், க்ளியர் வாய்ஸ் தொழில்நுட்பம், மூன்று HD மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன.

காதலர் தினத்தை ஒட்டி நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் தற்போது ரூ. 6 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 8 ஆயிரத்து 499 ஆகும். அந்த வகையில் நத்திங் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கு ரூ. 1500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போன்று நத்திங் போன் (1) மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மூன்று வித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் நத்திங் போன் (1) தற்போது ரூ. 26 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com