search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    நத்திங் போனுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் எப்போ கிடைக்கும் தெரியுமா ?
    X

    நத்திங் போனுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் எப்போ கிடைக்கும் தெரியுமா ?

    • நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடல் போன் 1 சமீபத்தில் விற்பனைக்கு வந்தது.
    • இந்த மாடலுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்குவது பற்றி அந்நிறுவனம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

    நத்திங் போன் 1 ஆண்ட்ராய்டு 13 அப்டேட் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் வழங்கப்பட இருப்பதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஸ்மார்ட்போனில் உள்ள மென்பொருளை முதலில் சரி செய்ய முடிவு செய்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து நத்திங் போன் 1 மாடலுக்கு அடுத்தடுத்து மென்பொருள் அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    முதல் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது முதல் நத்திங் நிறுவனம் ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்த செய்யும் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.


    "போன் 1 பயனர் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து கடினமான உழைப்பை கொடுத்து வருகிறோம். ஆண்ட்ராய்டு 13 -ஐ பொருத்தவரை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் நத்திங் போன் பயனர்கள், இதனை பெறுவர்."

    "புது அப்டேட் வெளியிடும் முன் நத்திங் ஹார்டுவேருக்கு இணையாக மென்பொருள் அனுபவத்தை வழங்க முடிவு செய்து இருக்கிறோம். இது பற்றிய கூடுதல் தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்படும்," என தனியார் நிறுவனத்திற்கு அளித்த அறிக்கையில் நத்திங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த வாரம் வெளியிடப்பட்ட நத்திங் ஓஎஸ் 1.1.3 அப்டேட்டில் அந்நிறுவனம் ஸ்மார்ட்போனில் ஏராளமான புது அம்சங்கள், பிழை திருத்தங்கள், செயல்திறன் மேம்பாடு மற்றும் கேமரா மேம்படுத்தல் போன்றவற்றை வழங்கி இருக்கிறது. இந்த அப்டேட் 64.33 எம்பி அளவு கொண்டது ஆகும்.

    Next Story
    ×