search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nobel Prize"

    மருத்துவத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு இரண்டு பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #NobelPrize #NobelPrizeForMedicine
    ஸ்டாக்ஹோம்:

    இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் ஜேம்ஸ் பி.ஆலீசன், ஜப்பானைச் சேர்ந்த தசுகோ ஹோன்ஜோ ஆகியோருக்கு மருத்துவ நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட உள்ளது.


    நோயெதிர்ப்பு மருத்துவ வல்லுநர்களான இவர்கள் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவ கண்டுபிடிப்பிற்காக இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 5-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம்  தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. #NobelPrize #NobelPrizeForMedicine
    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்ய என்னுடன் கைகோர்க்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார். #BJP #PMModi #TamilisaiSoundararajan
    சென்னை:

    நாடு முழுவதும் சுமார் 10 கோடி மக்கள் பயன்பெரும் வகையிலான தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று ஜார்கண்டில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஏற்கனவே இருந்த முதலமைச்சர் காப்பீடு திட்டம், இந்த தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துடன் இணைக்கப்பட்டது. 

    இந்நிலையில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில், “உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் மோடியை 2019-ம் ஆண்டின் நோபல் பரிசுக்கு தேர்வு செய்ய அனைவரும் என்னுடன் கைகோர்க்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார். 


    இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தோ-கரீபியன் எழுத்தாளர் வி.எஸ் நைபால் லண்டனில் வயோதிகம் காரணமாக காலமானார். #VSNaipaul
    லண்டன்:

    கரீபியன் தீவில் ஒன்றான டிரினாட் நகரில் 1932-ம் ஆண்டு பிறந்த வி.எஸ் நைபாலின் முழுப்பெயர் சர் விதியாதர் சுராஜ்பிரசாத் நைபால் என்பதாகும். இவரது தந்தை சீபிரசாத் நைபாலின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அங்கு குடியேறியவர்கள் ஆவார். 

    பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துள்ள நைபால், 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1971-ம் ஆண்டு ‘இன் ஏ ப்ரீ ஸ்டேட்’ என்ற புத்தகத்துக்கான அவருக்கு புக்கர் விருது வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு ‘ஏ ஹவுஸ் பார் மிஸ்டர். பிஸ்வாஸ்’ என்ற புத்தகத்துக்காக அந்தாண்டு நோபல் பரிசு நைபாலுக்கு வழங்கப்பட்டது.

    இந்தியாவில் இருந்து கரீபியன் நாட்டில் குடியேறிவர்களை பற்றி இந்த புத்தகம் பேசியது. இந்நிலையில், 85 வயதான அவர் லண்டனில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். நைபாலின் மறைவுக்கு சர்வதேச அளவிலான பல எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    பாலியல் குற்றச்சாட்டுகளால் இந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உலகின் மிகசிறந்த நோபல் பரிசுக்கு மாற்றாக புதிய பரிசு திட்டத்தை ஸ்வீடன் நாட்டு கல்வியாளர்கள் அறிவித்துள்ளனர்.
    ஸ்டாக்ஹோம்:

    உலகளாவிய அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் தொடர்பாக இணையம் வழியாக பதிவு செய்யும்  #MeToo பிரசார இயக்கம் சமீபத்தில் மேற்கத்திய நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இந்த பிரசாரத்தின்போது, நோபல் பரிசுக்குரியவர்களை தேர்வு செய்யும் தலைமை குழுவில் நீண்டகாலமாக இடம்பெற்றிருந்த பிரான்ஸ் நாட்டு பிரமுகர் ஒருவர் 18 பெண்களை கற்பழித்தும், பாலியல் ரீதியாக அத்துமீறியும் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

    சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்கப்படும் என நோபல் அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அவப்பெயர் களையப்பட விசாரணை நடத்தி முடிக்க வேண்டியுள்ளதால் 2018-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

    சுமார் 70 ஆண்டுகளாக மதிப்புக்குரியவர்களை பெருமைப்படுத்திவந்த நோபல் பரிசு நிறுத்தப்படுவதாக வெளியான அறிவிப்பு, ஸ்வீடன் நாட்டு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், சிறந்த படைப்பாளிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட கூடாது என்ற எண்ணம் மேலோங்கியது.

    இதன் விளைவாக  இந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உலகின் மிகசிறந்த நோபல் பரிசுக்கு மாற்றாக புதிய பரிசு திட்டத்தை ஸ்வீடன் நாட்டு கல்வியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 107 கல்வியாளர்கள் ஒன்றுசேர்ந்து, நோபல் பரிசுக்கு இணையான ஒரு புதிய பரிசை உருவாக்கவும், இந்த ஆண்டிலேயே அந்த பரிசுக்கான நபரை தேர்ந்தெடுத்து வழங்கிடவும் திட்டமிட்டுள்ளனர்.

    குறிப்பாக, உலகின் மிகசிறந்த ஜனநாயக நாடான ஸ்வீடனில் இலக்கியத்துக்கான உயர் பரிசை வழங்காமல் இருக்க முடியாது என தீர்மானித்த இவர்கள் ஒரு லட்சத்து 13 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொண்ட பணமுடிப்புடன் கூடிய புதிய பரிசு ஒன்றை நிர்மாணித்துள்ளனர்.

    இந்த பரிசுக்கான இரு நூலாசிரியர்களை தேர்வு செய்து பரிந்துரைக்குமாறு ஸ்வீடன் நாட்டில் உள்ள அனைத்து நூலகர்களையும் இவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.


    எந்த நாட்டை சேர்ந்த, எந்த மொழியில் எழுதிய நூலாசிரியராக இருந்தாலும், அவர் கடந்த பத்தாண்டு காலத்தில் எழுதிய நூலாக பரிந்துரைக்கப்படும் நூல் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

    முன்னர் நோபல் பரிசுக்கானவர்களை தேர்வு செய்வதில் மிகவும் ரகசியமான மற்றும் மர்மமான நடைமுறைகள் கடைசிநேரம் வரை கடைபிடிக்கப்படுவதாக பரவலான கருத்து நிலவுகிறது.

    இதற்கு நேர்மாறாக, இந்த புதிய பரிசுக்குரிய நபர்களை தேர்வு செய்வதில் மிகுந்த வெளிப்படைத்தன்மை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் நூலாசிரியரின் பெயர்கள் வரும் 8-ம் தேதிக்குள் தேர்வு குழுவுக்கு அனுப்பி  வைக்க வேண்டும். இந்த படைப்புகள் தொடர்பாக ஸ்வீடன் மற்றும் வெளிநாடுகளில் வாழும் மக்கள் ஆன்லைன் வழியாக பொது வாக்கெடுப்பில் கலந்துகொண்டு சிறந்த நூல் எது? என்று கருத்து தெரிவிப்பார்கள்.

    தலைசிறந்த பதிப்பாளர்கள், இலக்கியத்துறை பேராசியர்கள், கலாசாரத்துறை பத்திரிகையாளர்கள், நூல் விமர்சகர்கள் உள்ளிட்ட குழுவினரால் இந்த வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்ற படைப்புகளும், படைப்பாளிகளும் இறுதி செய்யப்பட்டு, அரைஇறுதி சுற்றுக்கு இரு பெண் எழுத்தாளர்கள் மற்றும் இரு ஆண் எழுத்தாளர்களும் வரிசைப்படுத்தப்படுவார்கள்.

    அவர்களில் ஒருவருக்கு நோபல் பரிசுக்கு இணையான இந்த புதிய பரிசு அளிக்கப்படும். இதற்கான அறிவிப்பு ஆண்டுதோறும் நோபல் பரிசுக்கான அறிவிப்பு வெளியாகும் அதே அக்டோபர் மாதம் 14-ம் தேதி வெளியாகும்.

    இதேபோல், பரிசளிப்பு விழாவும் வழக்கமான டிசம்பர் 10-ம் தேதி ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பரிசுக்குரியவர்களை தேர்வு செய்யும் நோபல் கமிட்டி  குழுவினர் மீது உள்நாட்டு ஊடகங்களில் கடந்த மே மாதம் எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக இந்த அமைப்பின் முதல் நிரந்தர செயலாளராக பதவிவகித்த ஒரு பெண்மணி உள்பட ஆறுபேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தது நினைவிருக்கலாம்.  #Nobelprotest #Swedishintellectuals #newliteratureprize 
    தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படாது என நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் தெரிவித்துள்ளார். #NobelPrizeforLiterature #LarsHeikensten #NobelPrizepostponed

    ஸ்டாக்ஹோம்:

    உலக அளவில் சிறந்த இலக்கியப் படைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த பரிசை அறிவிக்கும் ஸ்வீடிஷ் அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினர் காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது பாலியல் புகார் எழுந்தது.

    இதன் காரணமாக இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய நோபல் பரிசு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான பரிசுடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இலக்கிய படைப்புகளுக்கான நோபல் பரிசு தேர்வுக்குழுவிலிருந்த உறுப்பினர்கள் பலர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினர். 



    இந்நிலையில், 2018-ம் ஆண்டு மட்டுமின்றி 2019-ம் ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன், "தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு வழங்குவது சாத்தியமில்லை", என்று தெரிவித்துள்ளார். #NobelPrizeforLiterature #LarsHeikensten #NobelPrizepostponed
    ×