search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swedish intellectuals"

    பாலியல் குற்றச்சாட்டுகளால் இந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உலகின் மிகசிறந்த நோபல் பரிசுக்கு மாற்றாக புதிய பரிசு திட்டத்தை ஸ்வீடன் நாட்டு கல்வியாளர்கள் அறிவித்துள்ளனர்.
    ஸ்டாக்ஹோம்:

    உலகளாவிய அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் தொடர்பாக இணையம் வழியாக பதிவு செய்யும்  #MeToo பிரசார இயக்கம் சமீபத்தில் மேற்கத்திய நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இந்த பிரசாரத்தின்போது, நோபல் பரிசுக்குரியவர்களை தேர்வு செய்யும் தலைமை குழுவில் நீண்டகாலமாக இடம்பெற்றிருந்த பிரான்ஸ் நாட்டு பிரமுகர் ஒருவர் 18 பெண்களை கற்பழித்தும், பாலியல் ரீதியாக அத்துமீறியும் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

    சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்கப்படும் என நோபல் அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அவப்பெயர் களையப்பட விசாரணை நடத்தி முடிக்க வேண்டியுள்ளதால் 2018-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

    சுமார் 70 ஆண்டுகளாக மதிப்புக்குரியவர்களை பெருமைப்படுத்திவந்த நோபல் பரிசு நிறுத்தப்படுவதாக வெளியான அறிவிப்பு, ஸ்வீடன் நாட்டு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், சிறந்த படைப்பாளிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட கூடாது என்ற எண்ணம் மேலோங்கியது.

    இதன் விளைவாக  இந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உலகின் மிகசிறந்த நோபல் பரிசுக்கு மாற்றாக புதிய பரிசு திட்டத்தை ஸ்வீடன் நாட்டு கல்வியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 107 கல்வியாளர்கள் ஒன்றுசேர்ந்து, நோபல் பரிசுக்கு இணையான ஒரு புதிய பரிசை உருவாக்கவும், இந்த ஆண்டிலேயே அந்த பரிசுக்கான நபரை தேர்ந்தெடுத்து வழங்கிடவும் திட்டமிட்டுள்ளனர்.

    குறிப்பாக, உலகின் மிகசிறந்த ஜனநாயக நாடான ஸ்வீடனில் இலக்கியத்துக்கான உயர் பரிசை வழங்காமல் இருக்க முடியாது என தீர்மானித்த இவர்கள் ஒரு லட்சத்து 13 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொண்ட பணமுடிப்புடன் கூடிய புதிய பரிசு ஒன்றை நிர்மாணித்துள்ளனர்.

    இந்த பரிசுக்கான இரு நூலாசிரியர்களை தேர்வு செய்து பரிந்துரைக்குமாறு ஸ்வீடன் நாட்டில் உள்ள அனைத்து நூலகர்களையும் இவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.


    எந்த நாட்டை சேர்ந்த, எந்த மொழியில் எழுதிய நூலாசிரியராக இருந்தாலும், அவர் கடந்த பத்தாண்டு காலத்தில் எழுதிய நூலாக பரிந்துரைக்கப்படும் நூல் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

    முன்னர் நோபல் பரிசுக்கானவர்களை தேர்வு செய்வதில் மிகவும் ரகசியமான மற்றும் மர்மமான நடைமுறைகள் கடைசிநேரம் வரை கடைபிடிக்கப்படுவதாக பரவலான கருத்து நிலவுகிறது.

    இதற்கு நேர்மாறாக, இந்த புதிய பரிசுக்குரிய நபர்களை தேர்வு செய்வதில் மிகுந்த வெளிப்படைத்தன்மை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் நூலாசிரியரின் பெயர்கள் வரும் 8-ம் தேதிக்குள் தேர்வு குழுவுக்கு அனுப்பி  வைக்க வேண்டும். இந்த படைப்புகள் தொடர்பாக ஸ்வீடன் மற்றும் வெளிநாடுகளில் வாழும் மக்கள் ஆன்லைன் வழியாக பொது வாக்கெடுப்பில் கலந்துகொண்டு சிறந்த நூல் எது? என்று கருத்து தெரிவிப்பார்கள்.

    தலைசிறந்த பதிப்பாளர்கள், இலக்கியத்துறை பேராசியர்கள், கலாசாரத்துறை பத்திரிகையாளர்கள், நூல் விமர்சகர்கள் உள்ளிட்ட குழுவினரால் இந்த வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்ற படைப்புகளும், படைப்பாளிகளும் இறுதி செய்யப்பட்டு, அரைஇறுதி சுற்றுக்கு இரு பெண் எழுத்தாளர்கள் மற்றும் இரு ஆண் எழுத்தாளர்களும் வரிசைப்படுத்தப்படுவார்கள்.

    அவர்களில் ஒருவருக்கு நோபல் பரிசுக்கு இணையான இந்த புதிய பரிசு அளிக்கப்படும். இதற்கான அறிவிப்பு ஆண்டுதோறும் நோபல் பரிசுக்கான அறிவிப்பு வெளியாகும் அதே அக்டோபர் மாதம் 14-ம் தேதி வெளியாகும்.

    இதேபோல், பரிசளிப்பு விழாவும் வழக்கமான டிசம்பர் 10-ம் தேதி ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பரிசுக்குரியவர்களை தேர்வு செய்யும் நோபல் கமிட்டி  குழுவினர் மீது உள்நாட்டு ஊடகங்களில் கடந்த மே மாதம் எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக இந்த அமைப்பின் முதல் நிரந்தர செயலாளராக பதவிவகித்த ஒரு பெண்மணி உள்பட ஆறுபேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தது நினைவிருக்கலாம்.  #Nobelprotest #Swedishintellectuals #newliteratureprize 
    ×