என் மலர்

  நீங்கள் தேடியது "Mettur Dam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • பவானி மார்க்கெட் பகுதியோரம் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

  பவானி:

  காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

  இதனால் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. நேற்று மாலை முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்க தொடங்கியதால் ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்று ஓரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை செய்யப்பட்டது.

  இந்நிலையில் பவானி மார்க்கெட் பகுதியோரம் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்த பொதுமக்கள் அருகில் உள்ள முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மின்சார டிரான்ஸ்பார்மரை வெள்ளம் சூழ்ந்தது. ஆனாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. முகாம்களில் தங்கி வைக்கப்பட்டுள்ள ஒரு சிலர் தங்களது வீடுகளுக்கு வெள்ளத்தில் சென்று வருவதால் அசம்பாவிதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மின்சார துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
  • ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

  மேட்டூர்:

  கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

  இதையடுத்து 2 அணைகளில் இருந்தும் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கலில் நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 50 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்தது.

  இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 23-வது நாளாக தடை நீடிக்கிறது.

  இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

  ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 46 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று மேலும் அதிகரித்து 51 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 27 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 50 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

  இதனால் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரில் பெரும் பகுதி அப்படியே அணையில் இருந்து வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போதும் 120.11 அடியாக நீடிக்கிறது. இதனால் அணை கடல் போல காட்சி அளிக்கிறது.

  இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கிறார்கள். மேலும் இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அந்த தண்ணீர் முழுவதும் அணையில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட உள்ளது . இதனால் காவிரி கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
  • மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் 120.10 அடியாக நீடிக்கிறது.

  மேட்டூர்:

  கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதனால் 2 அணைகளில் இருந்தும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விநாடிக்கு 1.31 லட்சம் கன அடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

  இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடந்த 16-ந்தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது. குறிப்பாக அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

  இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்தது. இதனால் கடந்த 26-ந்தேதி 16 கண் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

  தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

  நேற்று முன்தினம் விநாடிக்கு 23 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு 31 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் கடந்த 26-ந்தேதி மூடப்பட்ட உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் மீண்டும் நேற்று முதல் திறக்கப்பட்டு அதன் வழியாக 7 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

  இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து அணைக்கு விநாடிக்கு 42 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 41 ஆயிரத்து 300 கன அடி வீதம் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளன.

  அதாவது நீர்மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி, 16 கண் மதகுகள் வழியாக 18 ஆயிரம் கன அடி, கால்வாய் வழியாக 300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன.

  மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் 120.10 அடியாக நீடிக்கிறது.

  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து எந்த நேரத்திலும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் வருவாய்த்துறை சார்பில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  தாழ்வான பகுதிகளில் குடியிருந்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 21-வது நாளாக தடை நீடிக்கிறது.
  • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.

  மேட்டூர்:

  கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பியதால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் தமிழகத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

  இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல் வருகிறது. ஒகேனக்கலில் தற்போது 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

  இதையடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 21-வது நாளாக தடை நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

  ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 19 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

  அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 500 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 22 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

  மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரில் பெரும் பகுதி அப்படியே வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 5 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் அணை கடல் போல காட்சி அளிக்கிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மேட்டூர் அணைக்கு நேற்று காலை 16 ஆயிரத்து 364 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 19 ஆயித்து 500 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
  • அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

  மேட்டூர்:

  கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பியதால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் தமிழகத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

  தற்போது 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல் வருகிறது. ஒகேனக்கல்லில் நேற்று காலை வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 20 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது.

  இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 20-வது நாளாக தடை நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

  ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 16 ஆயிரத்து 364 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 19 ஆயித்து 500 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

  அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 19 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

  மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் கடல் போல காட்சி அளிக்கிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கிறார்கள். ஆடி அமாவாசையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணையை பார்வையிட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது.
  • ஆடி அமாவாசையான இன்று காலை முதலே மேட்டூர், பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.

  மேட்டூர்:

  கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியதால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் தமிழகத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

  தற்போது 2 அணைகளில் இருந்தும் 16 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல் வருகிறது.

  ஒகேனக்கலில் நேற்று16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 17 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

  இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

  இதையடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரிகரைக்கு செல்லவும் 19-வது நாளாக தடை நீடிக்கிறது.

  இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

  ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 16 ஆயிரத்து 204 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 16 ஆயிரத்து 364 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

  அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையில் இருந்து மொத்தம் 16 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

  மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் அணை கடல்போல காட்சியளிக்கிறது. ஆடி அமாவாசையான இன்று காலை முதலே மேட்டூர் மற்றும் பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

  அவர்கள் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து வருகிறார்கள். மேலும் மேட்டூர் அணையையும் பார்வையிட்டு வருகிறார்கள். இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 15 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
  • 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

  மேட்டூர்:

  கர்நாடகா மற்றும் கேரளாவில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

  தற்போது 2 அணைகளில் இருந்தும் 16 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஒனேக்கலுக்கும் நீர்வரத்து சரிந்துள்ளது. ஒகேனக்கலில் இன்று காலை 16 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது.

  ஆனாலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரிகரைக்கு செல்லவும் 18 -வது நாளாக தடை நீடிக்கிறது.

  இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

  ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 16 ஆயித்து 204 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

  அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 15 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

  மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 120 அடியாக இருந்தது. இன்றும் நீர்மட்டம் அதே அளவில் நீடித்தது . அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளதால் மேட்டூர் அணை கடல் போல காட்சி அளிக்கிறது. இதனை ஏராளமானோர் திரண்டு பார்த்து வருகிறார்கள். இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் குறையும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடிக்கும் கீழ் சரிய வாய்ப்புள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
  • நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம் 120.06 அடியாக இருந்த நிலையில் இன்று காலை மேலும் சரிந்து 120 அடியானது.

  மேட்டூர்:

  கர்நாடகா மற்றும் கேரளாவில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

  தற்போது 2 அணைகளில் இருந்தும் 25 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது. ஒகேனக்கல்லில் தற்போது 30 ஆயிரம் கன அடிக்கும் குறைவாகவே தண்ணீர் வருகிறது.

  ஆனாலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 17 -வது நாளாக தடை நீடிக்கிறது.

  இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

  ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 28 ஆயிரத்து203 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

  அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 19 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம் 120.06 அடியாக இருந்த நிலையில் இன்று காலை மேலும் சரிந்து 120 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் குறைய வாய்ப்புள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒகேனக்கலில் தற்போது 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.
  • மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 120.30 அடியாக இருந்த நிலையில் இன்று காலை மேலும் சரிந்து 120.06 அடியானது.

  மேட்டூர்:

  கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் தமிழக-கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கலுக்கு வருகிறது.

  ஒகேனக்கலில் தற்போது 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

  நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரிகரைக்கு செல்லவும் 16 -வது நாளாக தடை நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

  ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 33 ஆயிரத்து 681 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 28 ஆயிரத்து 203 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

  அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 33 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 33 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

  மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 120.30 அடியாக இருந்த நிலையில் இன்று காலை மேலும் சரிந்து 120.06 அடியானது. கடல் போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணையையும், காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீரையும் பார்க்க விடுமுறை நாளான நேற்று ஏராளமானோர் மேட்டூர் அணை மற்றும் காவிரி கரையில் திரண்டிருந்தனர். இதையொட்டி கூடுதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரிகரைக்கு செல்லவும் 14-வது நாளாக தடை நீடிக்கிறது.
  • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.

  மேட்டூர்:

  கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் தமிழக-கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கலுக்கு வருகிறது.

  ஒகேனக்கலுக்கு நேற்று முன்தினம் மாலை 28 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 43 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

  நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரிகரைக்கு செல்லவும் 14-வது நாளாக தடை நீடிக்கிறது. பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

  ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 35 ஆயிரத்து 237 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

  அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 37 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையில் இருந்து மொத்தம் மொத்தம் 37 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

  மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 120.49 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 120.25 அடியாக சரிந்தது. விடுமுறை நாளான இன்று கடல் போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணையையும், காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரையும் பார்க்க ஏராளமானோர் மேட்டூர் அணை மற்றும் காவிரி கரையில் திரண்டுள்ளனர். இதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒகேனக்கல் காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
  • மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120.49 அடியாக இருந்தது.

  மேட்டூர்:

  கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

  இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 80 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 50 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஆனாலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

  நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரிகரைக்கு செல்லவும் 13-வது நாளாக தடை நீடிக்கிறது. பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

  ஒகேனக்கல் காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 74 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

  அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியிலும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 36 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

  மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120.49 அடியாக இருந்தது. அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் கடல் போல காட்சி அளிக்கிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கிறார்கள். மேலும் காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீரையும் பார்க்க ஏராளமானோர் காவிரி கரையில் தினமும் திரண்டு பார்வையிட்டு வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo