search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meeting"

    • ஒழுங்குமுறை சட்டவிதிகளின்படி தொழிலை பதிவு செய்ய வலியுறுத்தல்
    • சுற்றுலா பயணிகளிடம் நம்பகதன்மை உருவாக்க வேண்டுகோள்

    ஊட்டி,

    ஊட்டி தமிழ்நாடு ஓட்டல் அரங்கில் தமிழக சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா தொழில் முனைவோர் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல் மேலாளர் குணேஷ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அப்போது டூர் ஆபரேட்டர்கள், டிராவல் ஏஜெண்டுகள் ஆகியோர் ஒழுங்குமுறை சட்டவிதிகளின்படி தங்களின் தொழிலை பதிவு செய்ய வேண்டும். மேலும் உரிய அங்கீகாரம் தருவதன்மூலம் சுற்றுலா பயணிகளிடம் நம்பகதன்மை உருவாக்க வேண்டும் என்பவை தொடர்பாக கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

    நீலகிரி மாவட்ட மேக்சி கேப்-டிராவல் ஏஜெண்டுகள் உரிமையாளர் சங்க தலைவர் குலசேகரன், செயலாளர் நித்தின்சேகர், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் இம்பாலாபாபு, பிரீத்திரவி, பவானிரமேஷ், இம்பீரியல் நஞ்சுண்டன், ஸ்டேன்லி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
    • மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்த தாவது;- பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொ கை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 332 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யது முகம்மது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை குழு அமைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் ஏ.பி. மகாலில் ஏற்பாட்டில் நடைபெற்றது.
    • அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    திருச்சி

    மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை குழு அமைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் ஏ.பி. மகாலில் பகுதி செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் அவைத்தலைவர் அய்யப்பன், ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன், தொழிற்சங்க மண்டல செயலர் ஜெகதீசன், விவசாய அணி செயலாளர் கருடா நல்லேந்திரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் மீரான், பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ் மாமன்ற உறுப்பினர் அரவிந்தன், தில்லை நகர் பகுதி செயலாளர் முஸ்தபா, பீடி பிரிவு சகாபுதீன், என்ஜினியர் இப்ராம்ஷா, கலிலுல்ரகுமான், ஜோதிவாணன், பாலாஜி, மகாதேவன், ஷாஜஹான், வட்டசெயலாளர்கள் பொன்.அகிலாண்டம், ராமமூர்த்தி, ராஜ்மோகன் வெற்றிவீரன்.மலைக்கோட்டை ஜெகதீசன், கதிர்வேல். ஜெயகுமார்.சிங்கமுத்து, ராமநாதன் புகலேந்திரன், கார்த்திகேயன். கே.சக்திவேல், சந்தோஷ்ராஜ், பாசறை குமார், இசக்கி அம்மாள், முருகன், நவமணி, ரத்தினம். குவைத் மனோகர் ரவிசங்கர், கதிரவன், எல்.ஐ.சி.பெரியண்ணன், பொம்மாசி பாலமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தில்லை நகர் பகுதி சார்பாக மாநகர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் பகுதி செயலாளர் .எம். ஆர்.ஆர் முஸ்தபா, ஜங்ஷன் பகுதி சார்பாக சண்முகா மகாலில் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி ஏற்பாட்டிலும் நடைபெற்றது.

    • அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெமினா ஓட்டலில் அ.ம.மு.க. தலைவர் கோபால் தலைமையில் நடைபெற்றது.
    • அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை வகித்தார்.

    திருச்சி

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெமினா ஓட்டலில் அ.ம.மு.க. தலைவர் கோபால் தலைமையில் நடைபெற்றது.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை வகித்தார். இந்த செயற்குழு கூட்டத்தில் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள் ரெங்கசாமி, செந்தமிழன், சண்முகவேல், மாணிக்கராஜா, அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் ராஜசேகரன், மகேந்திரன், பொருளாளர் எஸ்.கே. செல்வம், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர் சரஸ்வதி, அ.ம.மு.க. அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், தேர்தல் பிரிவு செயலாளர்கள் பார்த்திபன், குமரேசன் உள்ளிட்ட அமைப்புச் செயலாளர்கள், 150 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், காசி மகேஸ்வரன், மாவட்ட அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, வக்கீல் சரவணன், பாசறை ஜான் கென்னடி, ஒன்றிய செயலாளர் சண்முகம், பெஸ்ட் கே பாபு, சிறுபான்மை பிரிவு பகுருதீன், பகுதி செயலாளர்கள் செல்வம் என்ற பன்னீர் பாண்டியன், வேதாத்ரி நகர் பாலு, நாகநாதர் சிவக்குமார், வெங்கட்ரமணி, சதீஸ்குமார்,தனசிங் மதியழகன், தருண், மீரான், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக தண்ணீர் நிறுத்துவது குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புகழிமலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் மற்றும் புகழூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்ட பொதுப்பணித் துறையின் நீர்வளத் துறை சார்பில் புகளூர் வாய்க்கால் மற்றும் பாபுலர் முதலியார் வாய்க்காலில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக தண்ணீர் நிறுத்துவது குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் குணசேகரன் தலைமை வைத்தார். குளித்தலை நீர்வளத்துறையின் ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல் முன்னிலை வைத்தார். நீர்வளத்துறை ஆற்றுப் பாதுகாப்பு பிரிவு உதவி பொறியாளர் கார்த்திக் வரவேற்றார்.

    நொய்யல் முதல் வாங்கல் வரை பாயும் விவசாய பாசன வாய்க்கால்களான புகழூர் வாய்க்கால், பாப்புலர் முதலியார் வாய்க்கால்களில் மதகுகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது நீர்வளத்துறை அதிகாரிகள் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் புகழூர் வாய்க்கால் மற்றும் பாபுலர் முதலியார் வாய்க்காலில் பராமரிப்பு பணிக்காக பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்படும். அதன் பின்னர் புகழூர் மற்றும் பாப்புலர் வாய்க்கால்களில் மதகுகள் மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    அதற்கு விவசாயிகள் தற்பொழுது பாசனத்திற்கு விடப்பட்டுள்ள தண்ணீரை நிறுத்தினால் விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்படும் அதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே வரும் மே , ஜூன் மாதங்களில் புகழூர் மற்றும் பாபுலர் முதலியார் வாய்க்காலில் தண்ணீரை நிறுத்திவிட்டு பணிகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனைகளை தெரிவித்தனர்.

    கூட்டத்தில் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் மற்றும் புகழூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.


    • கருத்துக் கேட்பு கூட்டம் குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.
    • கல் குவாரிக்கான திட்ட அறிக்கையில் சரியான தகவல்களை அதிகாரிகள் தயார் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் நொய் யல் அருகே குப்பம் மற்றும் வேட்டமங்கலம் இடங்களில் கல்குவாரி அமைக்க திட்டமி டப்பட்டு ள்ளது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சைபுதீன் தலைமை வகித்தார். மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதி காரி ஜெயலட்சுமி முன் னிலை வகித்தார்.

    கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப் புத்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்த னர்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும் போது,

    கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்கு வாரிகள் செயல்பட்டு வரு கிறது. மாவட்டத்தில் செயல் படும் ஒரு சில கல்குவாரி களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கு கூடுதலாக வெட்டி எடுக்கப் பட்டு வருவதை அதிகா ரிளால் கண்டறியப்பட்டுள் ளது.

    கல்குவாரிகளில் வெடி வெடிப்பதற்கான நேரத்தை பின் பின்பற்றுவது கிடை யாது. கல்குவாரிகளில் போர்டு வைக்க வேண்டும் ஆனால் அவற்றை பல்வேறு கல் குவாரி நிறுவனங்கள் செயல்படுத்துவது இல்லை.

    பரமத்தி ஒன்றியம் முழு வதும் சட்ட விரோ தமாக இயங்கும் கல்கு வாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்த்து வருகிறது.

    சுருக்க அறிக்கையில் முழுமையான விபரங்கள் எதுவும் இல்லை. கல் குவாரிக்கான திட்ட அறிக்கையில் சரியான தகவல்களை அதிகாரிகள் தயார் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

    • வாக்கு சாவடி முகவர்களுக்கு வாக்காளர் சேர்த்தல், நீக்கம் பதிவு செய்ய அதற்கான படிவத்தினை வழங்கினார்.
    • நவம்பர் மாதம் வருகிற 4 ,5 மற்றும் 18 ,19 ஆகிய தேதிகளில் புதிய வாக்காளர்களை சேர்த்தல் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற இருக்கிறது

    குளித்தலை 

    கரூர் மாவட்டம், குளித்தலை மேற்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் கூட்டம் ராஜேந்திரம் தனியார் மகாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை தாங்கி வாக்கு சாவடி முகவர்களுக்கு வாக்காளர் சேர்த்தல், நீக்கம் பதிவு செய்ய அதற்கான படிவத்தினை வழங்கினார்.

    மாவட்ட அமைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமணி தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்,

    கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் நவம்பர் மாதம் வருகிற 4 ,5 மற்றும் 18 ,19 ஆகிய தேதிகளில் புதிய வாக்காளர்களை சேர்த்தல் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற இருக்கிறது, பொய்யாமணி, இனுங்கூர், குமாரமங்கலம், வதியம், கே. பேட்டை ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று அன்று நடைபெறும் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாமில் முனைப்போடு செயல்பட்டு புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்க்க பாடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதில் ஒன்றிய கவுன்சிலர் சந்திரமோகன், ஒன்றிய அவை தலைவர் செழியன், பொருளாளர் ரங்கநாதன், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஜெகநாதன், பாஸ்கர், இளம் கதிர் மற்றும் தகவல் தொழில்நுட்பாடிய உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி லோகநாதன் நன்றி கூறினார்.

    • ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
    • மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் விக்ரம பாண்டியன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆசைமணி கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைத்தல் பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அறிவு, மாவட்ட துணை செயலாளர் பிச்சமுத்து, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வராஜ், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சாமிநாதன், விவசாய அணி மாவட்ட செயலாளர் குணசேகரன்,

    ஒன்றிய பொருளாளர் நலமுத்து மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஜெயராமன், பேரவை இணை செயலாளர் தேவா மற்றும் இந்த கூட்டத்திற்கு இரவாங்குடி பாப்பாக்குடி ஏ.என்.பேட்டை, பட நிலை, காடுவெட்டி உள்ளிட்ட கிராமத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி செயலாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

    • கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு குழு கூட்டம் நடைபெற்றது
    • 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கூட்–டு–றவு வார விழா கொண்டாடுவதை முன்னிட்டு நடைபெற்றது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் 70-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் க.பாண்டியன் தலைமையில் குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கூட்டுறவு வார விழா கொண்டாடுவதை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்களில் கொடியேற்றுதல், மரக்கன்று நடுதல், ரத்த தான முகாம், கால்நடை சிகிச்சை முகாம், பள்ளி மாணவ, மாணவி–களுக்கு கவிதைப்பேட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, துறை பணியாளர்களுக்கு விளையாட்டுப்போட்டி நடத்துவது. மற்றும் இறுதிநாள் அன்று சிறந்த சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
    • கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

    அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள பர்லியார் ஊராட்சி சார்பில் கோடமலை ஒசட்டி பகுதியில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சுசீலா தலைமைதாங்கினார்.

    துணைத்தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதிஅளிக்கப்பட்டது.

    மேலும் கூட்டத்தில் பங்கேற்ற தோட்டக்கலை துறை அதிகாரிகள் மங்குஸ்தான் உள்ளிட்ட 5 வகை பழக்கன்றுகள், தேயிலை நாற்றுகள் ஆகியவை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

    ஒரு ஏக்கருக்கு மேல் உள்ள தேயிலை தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஸ்பிங்லர் கருவி மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.

    உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டுஆவணத்தான்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆவணத்தான்கோட்டை கிராம ஊராட்சியில், உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கலந்துகொண்டார்.

    மேலும் இந்த கிராம சபைக் கூட்டத்தில்,சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்,சமுதாய முதலீட்டு நிதியின்கீழ், பயனாளிகளுக்கு கடனுதவிகளையும் மற்றும் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையின் சார்பில்,மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு மா,பலா,நெல்லி உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    பின்னர்,மாவட்ட கலெக்டர்,அறந்தாங்கி வட்டாரம், ஆவணத்தான்கோட்டை மேற்கு குழந்தைகள் மையத்தில் பயிலும் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .இம்மையத்தில் குழந்தைகளுக்கான இருப்பிட வசதி,கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் இம்மையத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்வுகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன்,உதவி இயக்குநர் இளங்கோ தாயுமானவன்,துணை இயக்குநர் நமச்சிவாயம்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேலன், இந்திராகாந்தி, ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயமணி கருணாநிதி,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கரூர் மாவட்டம் 66 ஊராட்சி மன்றங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட சுமார் 66 ஊராட்சி மன்றங்களில் உள்ளாட்சி தேர்தல் தினவிழா கிராம சபை கூட்டம் நடைபெற்றது, பெரும்பாலான கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி செயலர் சாந்தி கலந்து கொண்டார்.

    அனைத்து கிராம சபை கூட்டங்களில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், சொத்து வரி வீட்டு வரி செலுத்துதல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×