search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mantra"

    • கடம் புறப்பாடு கோவிலை வலம் வந்து கோபுர விமானத்திற்கு வந்தடைந்தது.
    • கருடன் வட்டமிட விமா–னத்தில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    முற்காலத்தில் சப்தம் மற்றும் அஷ்ட நாகங்களில் ஒன்றான ராஜநாகமான கார்கோடகன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவபெருமானை பூஜித்து பாபவிமோசனம் பெற்ற தலம் என்பதால் இத்தலம் கார்க்கோடகன்குடி என்று வழங்கப்பட்டு, பின்னர் மருவி தற்போது கோடங்குடி என அழைக்கப்படுகிறது.

    1951-ஆம் ஆண்டு காஞ்சி பெரியவர் வந்து வழிபட்ட சிறப்புக்குரிய தலமான இக்கோயிலில் கடைசியாக 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    15 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்ட மிடப்பட்டு, திருப்பணிகள் தொடங்கி நிறைவுற்றது. இதையடுத்து, புதன்கிழமை காலை விக்னேஸவர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது.

    கும்பாபிஷேக தினமான நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடு கோயிலை வலம் வந்து கோபுர விமானத்திற்கு வந்தடைந்தது.

    விக்னேஷ் சிவாச்–சாரியார் தலைமையில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க கருடன் வட்டமிட விமா–னத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    பின்னர் கருவறையில் உள்ள கார்கோடகநாதர் சிவலிங்கதிற்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில் ஆலய அர்ச்சகர் கனேச சிவம் குருக்கள், ஐ.ஏ.எஸ். ஜெயந்தி ரவி, ராமமூர்த்தி ஐயர், சுந்தரேசர் ஐயர், ஆகியோர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்து இருந்தார். ஊராட்சி மன்ற தலைவர், கவிஞர் ராதா கிருஷ்ணன், தீயணைப்பு துறை கோட்ட அலுவலர் முத்துகுமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    • கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டது.
    • கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.

    கும்பகோணம்:

    108 வைணவ தலங்களில் 3-வது தலமாக கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவில் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் முழங்க கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா நாட்களான தினமும் சாமி விதி உலா நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது.

    • யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை விமான கும்பத்தை அடைந்தனர்.
    • வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க இரண்டு கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, ஆறுபாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ ஓம் சக்தி மா காளியம்மன் கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கடந்த 9ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து மறுநாள் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேக தினமான நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.

    அங்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க இரண்டு கோவில்களுக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் விழா குழுவினர்கள் ரெத்தினசபாபதி சிவநேசன், தென்னரசு, சீனு, செந்தில், பழநிவேல், கலியமூர்த்தி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன்.
    • இந்த மந்திரத்தை 11 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும்.

    திங்கட்கிழமை அம்பாளின் வழிபாட்டுக்கு உகந்த தினம் மட்டுமல்லாமல் சந்திரனின் வழிபாட்டுக்கும் மிகவும் உகந்த தினம். அதனால் திங்கட்கிழமைகளில் சந்திரனுக்குரிய இந்த மந்திரத்தை ஒவ்வொரு வாரமும் மறக்காமல் 11 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும்.

    திங்கட்கிழமைகளில் மட்டுமல்லாமல் பெளர்ணமி, வளர்பிறை தினங்கள், மூன்றாம் பிறை போன்ற சந்திரனுக்கு விசேஷமான தினங்களிலும் சொல்லி வரலாம். அப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் சந்திரனுக்குரிய தோஷங்கள் எல்லாம் விலகி ஓடும்.

    திங்கட்கிழமைகளில் சொல்ல வேண்டிய சந்திரன் ஸ்லோகம்

    'பத்ம த்வாஜய வித்மஹே

    ஹேம ரூபாய தீமஹி

    ஸ்ரீ வேங்கடலாசலபதி தந்நஸ் ஸோம ப்ரசோதயாத்'

    இந்த மந்திரத்தை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் கை, கால்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, பூஜை அறையில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி,வானில் சந்திரனைப் பார்த்து விட்டு, பின்னர் உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிக்கும் முன்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபத்தை நெல் பரப்பி அதன்மீது வைக்க வேண்டும். பின்னர் வெண்பொங்கல் நைவேத்தியம் படைத்து, 108 எண்ணிக்கையில் மல்லிகை பூவைக் கொண்டு வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து, சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

    ஒவ்வொருவருக்குமே அவரவர் ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன். எனவே தாயின் சாபம் பெற்றவர்கள், தாயை நல்ல முறையில் பேணி பாதுகாக்காதவர்கள், அவசியம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் விரதம் இருந்து சந்திரனை வழிபடுவது நல்ல பலன்களை அள்ளி தரும்.

    • ஐயப்பனை தர்ம சாஸ்தா என்று நம்முடைய புராணங்கள் கொண்டாடுகின்றன.
    • இந்த மந்திரத்தைத் தினமும் 11 முறை சொல்லி வழிபாடு நடத்த வேண்டும்.

    ஐயப்பனை வணங்கி காயத்ரி மந்திரத்தைத் தினமும் 11 முறை சொல்லி வந்தால் மன வலிமை அதிகரிக்கும். மனதிலிருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். ஐயப்ப மலைக்கு மாலை போட்டவர்கள் மட்டுமல்ல, எல்லோருமே இந்த மந்திரத்தை சொல்லலாம். தினமும் சொல்ல முடியாவிட்டாலும் புதன் கிழமைகளில் காலையும் மாலையும் இந்த மந்திரத்தைச் சொல்லி ஜெபிக்க வேண்டும். அப்படி செய்தால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம்முடன் துணையாக இருந்து நம்மை ஐயப்பன் காத்தருளுவார்.

    தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்:

    ஓம் பூதாதி பாய வித்மஹே

    மஹா தேவாய தீமஹி

    தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

    இந்த மந்திரத்தைத் தினமும் 11 முறை சொல்லி வழிபாடு நடத்த வேண்டும்.

    சபரிமலை நாதனை, சபரிகிரி வாசனை, ஐயன் ஐயப்ப சுவாமியை அவரின் மகா மந்திரத்தை ஜெபித்து வழிபட்டு வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். ஐயப்பன் அருளையும் ஆசியையும் வளத்தையும் அள்ளித் தருவார்.

    மகா மந்திரம்:

    பூதநாத ஸதானந்தா

    சர்வ பூத தயாபரா

    ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ

    சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

    • இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து சொல்லி வரவேண்டும்.
    • உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும்.

    ஓம் வெங்கட நாதாய வித்மஹே

    ஸச் சித்தானந்தாய தீமஹி

    தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத்

    ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம்.

    காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ராகவேந்திரர் ஸ்வாமியின் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, தூபங்கள் கொளுத்தி, வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவார் ஸ்ரீ ராகவேந்திரர்.

    இம்மந்திரத்தை உண்மையான பக்தியுடன் உரு ஜெபித்து அவரை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

    உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும். இவர்களை நாம் எல்லோரும் தூய்மையான இதயத்துடன் சரணடையும் போது நமக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர்.

    • தெரிந்த, தெரியாத எதிரிகளின் சதியில் இருந்து நம்மை காத்து ரட்சிக்கும் சக்தி அன்னை ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியிடம் உள்ளது.
    • இந்த மந்திரத்தை ஜபிக்க துவங்கும் முன்பு பிள்ளையாரை வணங்கிவிட்டு ஜெபிக்கவும்.

    ஹரிஓம் பஹவதி

    ஆதிபகவதி அனாதரட்சகி,

    அகிலத்தையாண்ட ப்ரமாண்ட நாயகியே,

    ஆனந்த தாண்டவி ரேணுகா பரமேஸ்வரி தாயே,

    ஆதிமுதல்வியே ஹரியையும் அயனையும்

    படைத்த அமுதவல்லித்தாயே,

    அண்டசராசரம் யாவும் துதிக்கும்

    ரேணுகா பரமேஸ்வரித்தாயே,

    பண்ணிருகரனையும் பாசாங்குசதாசனையும்,

    ஈன்ற ரேணுகா பரமேஸ்வரித்தாயே,

    ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ரிவ்வும் மவ்வும்,

    ஓங்காரி றீங்காரி, வாவா வாவா,

    வந்தருள் புரிகுவாய் ஸ்வாஹ.

    ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க ஆரமித்து பின் ஒரு மண்டல காலம் வரை இதை தினமும் ஜபிப்பது நல்லது. இந்த மந்திரத்தை ஜபிக்க துவங்கும் முன்பு பிள்ளையாரை வணங்கிவிட்டு ஜெபிக்கவும்.

    ×