search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mann Ki Baat"

    • பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரத்மர் பேசினார்.
    • மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

    நியூயார்க்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அக்டோபர் 3-ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

    இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

    பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை வெற்றியடைய செய்யும் நோக்கில், பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது. நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.

    இதனை முன்னிட்டு மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் கோடீசுவரரான பில்கேட்ஸ், பிரதமர் மோடிக்கு டுவிட்டர் வழியே தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடியின் தலைமைத்துவத்திற்கு அடிக்கடி புகழாரம் தெரிவித்து வரும் அவர், வெளியிட்டுள்ள செய்தியில், மன் கி பாத் நிகழ்ச்சியானது துப்புரவு, சுகாதாரம், மகளிரின் பொருளாதாரத்திற்கு அதிகாரமளித்தல் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளுடன் தொடர்புடைய பிற விசயங்கள் ஆகியவற்றில் சமூகத்தினர் தலைமையிலான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு ஊக்குவித்து வருகிறது. 100-வது நிகழ்ச்சிக்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார். 

    • பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி வருகிறார்.
    • மன் கி பாத்-100 என்ற ஒருநாள் தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். இதன் 100-வது நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி ஒலிபரப்பாகிறது.

    இந்நிலையில், மன் கி பாத்-100 என்ற ஒருநாள் தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரி அனுராக் தாக்குர், இந்தி நடிகர் அமீர்கான், நடிகை ரவீணா டாண்டன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 100 பிரபலங்கள் கலந்து கொண்டனர். மன் கி பாத் நிகழ்ச்சிகளில் பிரதமர் குறிப்பிட்டு பேசிய சாதனையாளர்களும் பங்கேற்றனர். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

    இந்த நிகழ்ச்ச்சியில் நடிகர் அமீர்கான் பேசியதாவது:

    மன் கி பாத் நிகழ்ச்சி ஒரு தலைவர், பொதுமக்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கான முக்கியமான சாதனம். மக்கள் பிரதமர் மோடியை நம்புகிறார்கள். மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்துகிறார். ஒரு தலைவர் தான் என்ன செய்யப் போகிறேன் என்பதை மக்களிடம் தெரிவித்து, அவர்களின் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் முக்கியம். இது எந்த தலைவருக்கும் அடிப்படை தேவை. இந்நிகழ்ச்சி மக்கள் இயக்கமாக நடக்கிறது. மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.

    • 'மன் கி பாத்' 100-வது பகுதி வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது.
    • 17.6 சதவீதம் பேர் மட்டுமே வானொலியில் கேட்கிறார்கள்.

    புதுடெல்லி :

    பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் 'மன் கி பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகிறார். அதன் 100-வது பகுதி, வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது.

    இந்நிலையில், அரியானா மாநிலம் ரோதக்கில் உள்ள ஐ.ஐ.எம்.மில் படிக்கும் மாணவர்கள், 'மன் கி பாத்' நிகழ்ச்சிக்கான வரவேற்பு குறித்து நாட்டின் 4 பகுதிகளிலும் கருத்து கணிப்பு நடத்தினர். பெரும்பாலானோர், சுயதொழில் செய்பவர்கள் ஆவர்.

    இதில், 100 கோடிக்கு மேற்பட்டோர் ஒருதடவையாவது 'மன் கி பாத்' நிகழ்ச்சியை கேட்டிருப்பது தெரியவந்தது. 41 கோடி பேர் எப்போதாவது கேட்கிறார்கள். 23 கோடி பேர், தொடர்ந்து கேட்கிறார்கள்.

    ஆனால், வெறும் 17.6 சதவீதம்பேர் மட்டுமே வானொலியில் கேட்கிறார்கள். பெரும்பாலானோர் டி.வி. சேனல்களிலும், செல்போன்களிலும்தான் அந்நிகழ்ச்சியை கேட்கிறார்கள்.

    65 சதவீதம் பேர் இந்தியிலும், 18 சதவீதம் பேர் ஆங்கிலத்திலும், 2 சதவீதம் பேர் தமிழிலும் அந்நிகழ்ச்சியை கேட்க விரும்புவதாக தெரிவித்தனர். 73 சதவீதம்பேர், மத்திய அரசின் செயல்பாடுகளில் திருப்தி தெரிவித்தனர்.

    • பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி அடுத்த மாதம் ஒலிபரப்பாக உள்ளது.
    • இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அக்டோபர் 3-ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

    இரண்டாவது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை வெற்றியடைய செய்யும் நோக்கில், பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது. நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.

    • உங்கள் மனதின் ஆற்றலை நீங்கள் அறிவீர்கள்.
    • மக்கள் உறுதியாக இருந்தால் இந்தியாவை நிச்சயம் தூய்மைப்படுத்த முடியும்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாடி வருகிறார்.

    இன்று 98-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உங்கள் மனதின் ஆற்றலை நீங்கள் அறிவீர்கள். அதேபோல் சமூகத்தின் சக்தியுடன் நாட்டின் சக்தி எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை மான் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பார்த்தோம். புரிந்து கொண்டோம், அனுபவித்தோம்.

    சர்தார்பட்டேலின் பிறந்தநாளான ஒற்றுமை நாள் அன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் தேச பக்தி பாடல்கள், தாலாட்டு மற்றும் ரங்கோலி ஆகிய போட்டிகளை பற்றி பேசினோம். இதில் நாடு முழுவதிலும் உள்ள 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் முதியோர் ஆர்வத்துடன் பங்கேற்று 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் அனுப்பப்பட்டன. தாலாட்டு போட்டியில் முதல் பரிசை கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் வென்றுள்ளார். 2-வது பரிசை அசாமின் கம்ரூப் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் கோவாலா வென்றார்.

    ரங்கோலி போட்டியில் முதல் பரிசை வென்ற பஞ்சாப்பை சேர்ந்த கமல் குமார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பகத் சிங் ஆகியோர் முழு ரங்கோலியை உருவாக்கினர். மகாராஷ்டிராவை சேர்ந்த சச்சின் நரேந்திர அவ்சாரி, கோவாவை சேர்ந்த குருதத் வந்தேகர் காந்தி ஆகியோரும் வென்றுள்ளனர்.

    புதுச்சேரியை சேர்ந்த மாலதி செல்வம் பல சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களின் ரங்கோலியை அனுப்பி உள்ளார். தேச பக்தி பாடல் போட்டியில் ஆந்திராவை சேர்ந்த விஜயதுர்கா வெற்றி பெற்றார்.

    சில நாட்களுக்கு முன் இசை மற்றும் கலைத்துறையில் வளர்ந்து வரும் திறமையான கலைஞர்களுக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரங்கார் வழங்கப்பட்டுள்ளது. இதில் வி.துர்கா தேவி பண்டைய நடனமான கரகாட்டத்துக்காக வென்றுள்ளார்.

    கால அவகாசம் காரணமாக விருதுபெற்ற அனைவரையும் பற்றி இங்கு பேச முடியாமல் போகலாம். ஆனால் அவர்களை பற்றி கண்டிப்பாக படிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

    டிஜிட்டல் இந்தியாவின் சக்தியை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்து செல்வதில் பல்வேறு செயலிகள் பெரும் பங்குவகிக்கின்றன. அது போன்ற ஒரு செயலி இ-சஞ்சீவனி.

    சுகாதாரத்துறையின் இ-சஞ்சீவனி திட்டம், டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. இத்திட்டம் மூலம் இதுவரை 10 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். ஏழை மக்களுக்கு உயிர் காக்கும் செயலியாக இ-சஞ்சீவனி மாறி உள்ளது.

    மக்கள் உறுதியாக இருந்தால் இந்தியாவை நிச்சயம் தூய்மைப்படுத்த முடியும். ஒவ்வொருவரும் பிளாஸ்டிக் பைகளை மாற்றி துணி பைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு பொதுமக்கள் (பை...பை) சொல்ல வேண்டும். மக்களின் இந்த முயற்சி எவ்வளவு திருப்தி தரும் என்பதை ஒவ்வொரு வரும் உணறும் காலம் வரும்.

    ஒரு நாட்டில் அழிந்து கொண்டிருக்கும் ஒருவகை பறவை, ஒரு உயிரினம் காப்பாற்றப்பட்டது. அது உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. இப்படி பல பாரம்பரியங்கள் நம் நாட்டில் மறைந்து மக்கள் மனதில் இருந்தும், இதயங்களில் இருந்தும் அழிந்து போயிருந்த போதிலும் இப்போது மக்கள் பங்கேற்ற சக்தியுடன் அவற்றை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஹோலி பண்டிகை சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இதை உள்ளூருக்கான குரல் என்று உறுதியுடன் நாம் விழாவை கொண்டாட வேண்டும்.

    பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்பதற்கு திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

    • 1500 ஆண்டுகள் பழமையான உத்திரமேரூர் கல்வெட்டில் கிராமசபை கூட்டம் குறித்து பொறிக்கப்பட்டுள்ளது.
    • ஜனநாயகம் என்பது நமது நரம்புகளிலும், கலாச்சாரத்திலும் உள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கீ பாத் (மனதின் குருல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்கள் இடையே உரையாற்றி வருகிறார். அவரது 97-வது மன் கீ பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ரேடியோவில் ஒலிபரப்பானது.

    இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியாகும். நாட்டு மக்கள் இடையே பிரதமர் மோடி உரையாடியதாவது:-

    உலகின் மிகபெரிய ஜனநாயக நாடு இந்தியாவாகும். நமது நாடு ஜனநாயகத்தின் தாய் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.

    இந்திய கலாசாரத்தில் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் என்பது நமது நரம்புகளிலும், நமது கலாசாரத்திலும் உள்ளது. இது பல நூற்றாண்டுகளாக நமது செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது.

    இந்தியாவின் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு மேம்பட்டுள்ளது. உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா சிறந்த இடத்தை பெறுவதில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

    நக்சலைட்டுகளால் பாதித்த பகுதிகளில் தவறான பாதையில் செல்லும் இளைஞர்களுக்கு தங்கள் முயற்சியால் சரியான பாதையை காட்டுபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுகள் உலகம் முழுவதையும் வியக்க வைக்கிறது. உத்திரமேரூரில் 1,100-1,200 ஆண்டுகளுக்கு முந்தைய அரசியலமைப்பு குறித்த கல் வெட்டு உள்ளது.

    கிராம சபை எப்படி நடத்த வேண்டும் என்றும், அதில் உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கும் செயல்முறை எப்படி இருக்க வேண்டும் என்றும் இதில் விளக்கப்பட்டுள்ளது.

    மின்சாதனப் பொருட்களை, அதன் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி டன் மின்சாதன கழிவுகள் தூக்கி வீசப்படுவதாக ஐ.நா. தெரிவிக்கிறது. மின் கழிவுகளில் இருந்து சுமார் 17 வகையான விலை மதிப்பற்ற உலோகங்களை பிரித்தெடுக்க முடியும்.

    வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகளின் எண்ணிக்கையை பாதுகாத்த முழு பெருமையும் அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகளை சேரும்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • கொரோனா பரவல் அதிகரிப்பால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார் பிரதமர் மோடி.
    • உலக பொருளாதாரத்தில் நாம் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம் என்றார்.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டின் ஆண்டின் கடைசி மன்கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், கல்வி, வெளியுறவுக் கொள்கை, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றவர்.

    2022-ம் ஆண்டு இந்தியாவுக்கு மிகவும் அற்புதமானது. உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    உலகின் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை காண்கிறோம். நாம் கவனமாக இருக்கவேண்டும் மற்றும் முக கவசம் அணியவேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளில் இருக்கும் மக்கள் கொரோனா விதிகளைப் பின்பற்ற வேண்டும். விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கும் நாட்கள் வைரசால் பாதிக்கப்படுவிடக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    கடந்த சில ஆண்டுகளாக சுகாதாரத் துறையில் பல்வேறு சவால்களை நாம் சமாளித்து வருகிறோம். பெரியம்மை, போலியோ போன்ற நோய்களை இந்தியாவில் இருந்து ஒழித்துவிட்டோம். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் யோகா செய்தால் நல்ல பலன் கிடைக்குமென ஆய்வில் தெரியவந்துள்ளது. நோயாளிகள் தொடர்ந்து யோகா செய்வதால் நோய் மீண்டும் வருவது 18 சதவீதம் குறைக்கப்படுகிறது. மருத்துவ அறிவியலில் யோகாவும் ஆயுர்வேதமும் ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • சோலார் சக்தி மூலம் பெரும் நன்மை ஏற்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
    • காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிவருகிறார்.

    இந்நிலையில், இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    சூரிய சக்தியில் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. சூரிய சக்தியை இந்தியா பெரிய அளவில் பயன்படுத்துகிறது.

    இன்று நாம் மிகப்பெரிய சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டோம். நமது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை சோலார் எரிசக்தி எவ்வாறு மாற்றுகிறது என்பதும் ஆய்வுப் பொருளாகும். சோலார் சக்தி மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

    தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழிலன் என்ற விவசாயி, பிரதமர் குஷூம் யோஜனா திட்டத்தின் பயனை அடைந்துள்ளார். அவரது பண்ணையில் 10 குதிரைத்திறன் கொண்ட சோலார் பம்ப் செட்டை அமைத்துள்ளார். இதன்மூலம் அவர் பண்ணையில் விவசாயத்திற்கு என எதுவும் செலவு செய்வது கிடையாது. விவசாய நிலத்தில் பாசனம் செய்ய அரசின் மின் விநியோகத்தை அவர் நம்பியிருக்கவில்லை.

    இதேபோல் சூரிய சக்தி மூலம் பலர் பயனடைந்துள்ளனர். குஜராத்தின் மோதிரா பகுதியில் பெரும்பாலான வீடுகளில் சோலார் எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சூரிய மின்சக்தி போல் விண்வெளித் துறையிலும் இந்தியா பல சாதனைகளை படைத்துள்ளது. இந்தியாவின் சாதனைகளை உலகம்

    ஆச்சர்யத்துடன் பார்க்கிறது.

    சில தினங்களுக்கு முன் விண்வெளியில் 36 செயற்கைக்கோள்களை இந்தியா நிலைநிறுத்தியது. இந்த சாதனை இந்தியாவிற்கு தீபாவளி பரிசாக அமைந்தது. இந்திய இளைஞர்களுக்காக விண்வெளித்துறை வாய்ப்புகள் திறக்கப்பட்டதும், புரட்சிகரமான மாற்றங்கள் வந்து கொண்டுள்ளன. டிஜிட்டல் துறையிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என தெரிவித்தார்.

    • கால நிலை மாற்ற சவால்களைச் சமாளிக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
    • சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவில் வரும் 28ம் தேதி முக்கியமான நாளாகும்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    காலநிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடற்கரைகளில் சேரும் குப்பைகளும் பிரச்சனையாக உள்ளன. இந்தச் சவால்களைச் சமாளிக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்வது நமது கடமையாகும்.

    சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவில் வரும் 28ம் தேதி முக்கியமான நாளாகும். அன்று பகத்சிங்கின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளுக்கு முன்னதாக, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சண்டிகர் விமான நிலையத்திற்கு ஷாஹீத் பகத் சிங் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 75வது சுதந்திர தின கொண்டாட்டம், பொது மக்களின் இயக்கமாக மாறி உள்ளது.
    • மருத்துவப் பயன் உள்ள தாவரங்களின் ஆராய்ச்சியில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

    மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் இன்று பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட இயக்கம், பொது மக்களின் இயக்கமாக மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.இது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று வருகின்றனர்.

    சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி நம் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள நமது கணக்குகளின் சுயவிவரப் படமாக ஆகஸ்ட் 2 முதல் 15ந் தேதிவரை மூவர்ணக் கொடியை வைக்க வேண்டும்.

    காமன்வெல்த் போட்டியில் டீம் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது பாராட்டக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்று காலத்தில் மருத்துவப் பயன் உள்ள தாவரங்களின் ஆராய்ச்சியில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல ஆரம்பம்.

    இந்த மாதம் மெய்நிகர் ஹெர்பேரியம் துவக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட தாவரங்கள் அல்லது தாவர பாகங்களின் தரவுத்தளம் இதில் உள்ளது, இது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் மற்றும் தொடர்புடைய அறிவியல் தகவல்களும் இதில் கிடைக்கின்றன. இந்த மெய்நிகர் ஹெர்பேரியம் நமது தாவரவியல் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • MyGov அல்லது NaMo App இல் உங்கள் கருத்துகளை பகிரவும்.
    • 1800-11-7800 ஐ டயல் செய்து உங்கள் யோசனைகளைப் பதிவு செய்யவும்.

    பிரதமர் மோடியின் மன் கி பாத் நிழ்ச்சியின் 91-வது பதிவுக்கு யோசனைகள் வழங்கும்படி மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்புவிடுத்துள்ளார். ஜூலை 31-ம் தேதி நடைபெற உள்ள தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்தின் 91-வது எபிசோடில் மக்கள் தங்கள் யோசனைகளையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    கருத்துகளை MyGov மற்றும் NaMo Appல் பகிரலாம் எனவும், அல்லது 1800-11-7800 என்ற எண்ணை டயல் செய்தும் மக்கள் தங்களின் யோசனைகளை பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், " இந்த மாதத்தின் மன் கி பாத் 31-ம் தேதி நடைபெற உள்ளதா ? அவற்றைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். MyGov அல்லது NaMo App இல் உங்கள் கருத்துகளை பகிரவும். 1800-11-7800 ஐ டயல் செய்து உங்கள் யோசனைகளைப் பதிவு செய்யவும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    தொடர்ந்து MyGov ஆப் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வரவிருக்கும் மன் கி பாத் எபிசோடில் பிரதமர் பேச விரும்பும் கருப்பொருள்கள் அல்லது சிக்கல்கள் குறித்து உங்கள் ஆலோசனைகளை எங்களுக்கு அனுப்பவும். இந்த திறந்த மன்றத்தில் உங்கள் கருத்துக்களைப் பகிரவும். அல்லது அதற்கு மாற்றாக 1800-11-7800 என்ற கட்டணமில்லா எண்ணையும் டயல் செய்யலாம். பிரதமருக்கான உங்கள் செய்தியை இந்தி அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்யுங்கள். பதிவு செய்யப்பட்ட சில கருத்துகள் ஒளிபரப்பின் ஒரு பகுதியாக மாறக்கூடும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி மக்களிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
     
    இந்நிலையில், இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. இது 83-வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, அதிகரித்து வரும் கொரோனா தடுப்பூசிகள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×