search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பில்கேட்ஸ்"

    • மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • அகமதாபாத்தில் அமைக்கப்பட்ட ஒற்றுமை சிலையை பில் கேட்ஸ் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினார்.

    அகமதாபாத்:

    மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை சிலையை பில் கேட்ஸ் நேற்று பார்வையிட்டு, அஞ்சலி செலுத்தினார்.

    இதுதொடர்பாக பில் கேட்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஈர்க்கக்கூடிய ஒற்றுமை சிலையைப் பார்வையிட அழைத்தமைக்கு நரேந்திர மோடிக்கு நன்றி. இது ஒரு பொறியியல் அதிசயம் மற்றும் சர்தார் பட்டேலுக்கு ஒரு பெரிய அஞ்சலி. இது உள்ளூர் பழங்குடி சமூகங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பை உருவாக்குவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள செய்தியில், இதைப் பார்த்ததில் மகிழ்ச்சி! ஒற்றுமை சிலையில் உங்கள் அனுபவத்தை நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி. இனி வரும் காலங்களில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் அதைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • கொரோனா கட்டுப்பாடு தளர்ந்த நிலையில் 4 வருடத்திற்குப் பிறகு பில்கேட்ஸ் சீனா வருகை
    • அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்அதிபரை சீன அதிபர் சந்திக்க இருப்பது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது

    அமெரிக்க மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன்  அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான பில் கேட்ஸ் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்.

    கோவிட் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகு சீனாவிற்கு பல மேற்கத்திய தலைவர்கள் வருகை புரிகின்றனர். அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் சீனாவிற்கு கடந்த வாரம் வந்திருந்தார். கடந்த மார்ச் மாதம் சீனாவின் பீஜிங் நகருக்கு வந்திருந்த ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், சீனாவுடன் ஆப்பிள் நிறுவனத்திற்கும் ஒரு இணைதிறனுடைய உறவுமுறை நிலவுவதாக குறிப்பிட்டிருந்தார்.

    அதேபோல் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சென்ற 3 வருடங்களில் முதல்முறையாக வருகை தந்தார். சீனாவில் விரிவான வணிக ஆர்வமுடைய மஸ்க், சீன ஷாங்காய் நகரில் உள்ள டெஸ்லாவின் மிகப்பெரிய தொழிற்சாலையில் தமது பணியாளர்களை சந்தித்தார்.

    இப்பொழுது உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான அமெரிக்காவின் பில் கேட்ஸ் வருகை தந்துள்ளார். அமெரிக்க நாட்டு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஞாயிறன்று சந்திக்க இருக்கும் பின்னணியில் இது மிகவும் முக்கிய சந்திப்பாக பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை:-

    மலேரியா மற்றும் காசநோய் ஒழிப்பிற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்காக சீனாவிற்கு இந்த அறக்கட்டளை 50 மில்லியன் டாலர் வழங்கும். கேட்ஸ், பீஜிங் நகராட்சி மற்றும் ட்சிங்குவா பல்கலைகழகம் இணைந்து உருவாக்கிய உலகளாவிய ஆரோக்கியத்திற்கான மருந்து கண்டுபிடிப்பு நிறுவனம் (GHDDI) எனப்படும் அமைப்பிற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும்.

    மலேரியா மற்றும் காசநோய் போன்ற பெரும்பாலான உலகின் ஏழை மக்களை தாக்கும் நோய்கள் ஒழிப்பிற்காக எடுக்கப்படும் உயிர்காக்கும் சிகிச்சை முறைகள் மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான வழிமுறைகளுக்கு இந்த தொகை உறுதுணையாக இருக்கும். உலகளாவிய ஆரோக்கியத்திற்கான மருந்து கண்டுபிடிப்பு நிறுவனத்தில் பேசிய பொழுது கேட்ஸ், மலேரியா மற்றும் காசநோய் ஒழிப்பிற்காக சீனா எடுக்கும் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

    சீனாவிற்குள் வறுமை ஒழிப்பிலும், ஆரோக்கிய மேம்பாட்டிலும் அந்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் சவால்களை சமாளிக்க சீனாவால் பெரிய பங்காற்ற முடியும் என்றும் கேட்ஸ் தெரிவித்திருக்கிறார்.

    பில் கேட்ஸ் கடைசியாக 2019-ம் வருடம் வந்திருந்தபோது சீன முதல் பெண்மணி பெங்க் லியுவானை சந்தித்து தமது அறக்கட்டளை மூலமாக ஹெச்.ஐ.வி./எய்ட்ஸ் தடுப்பிற்காக செய்யப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து அவரிடம் பேசினார்.

    சீன நாட்டு அதிபருடன் வெளிநாட்டு தலைவர் ஒருவர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

    • பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரத்மர் பேசினார்.
    • மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

    நியூயார்க்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அக்டோபர் 3-ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

    இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

    பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை வெற்றியடைய செய்யும் நோக்கில், பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது. நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.

    இதனை முன்னிட்டு மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் கோடீசுவரரான பில்கேட்ஸ், பிரதமர் மோடிக்கு டுவிட்டர் வழியே தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடியின் தலைமைத்துவத்திற்கு அடிக்கடி புகழாரம் தெரிவித்து வரும் அவர், வெளியிட்டுள்ள செய்தியில், மன் கி பாத் நிகழ்ச்சியானது துப்புரவு, சுகாதாரம், மகளிரின் பொருளாதாரத்திற்கு அதிகாரமளித்தல் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளுடன் தொடர்புடைய பிற விசயங்கள் ஆகியவற்றில் சமூகத்தினர் தலைமையிலான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு ஊக்குவித்து வருகிறது. 100-வது நிகழ்ச்சிக்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார். 

    • நாம் கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்தால் என்ன சாத்தியம் என்பதையும் காட்டுகிறது.
    • பிரதமர் மோடி கூறியது போன்று சிறுதானிய உணவுகள் சிறப்பானவை.

    புதுடெல்லி :

    அமெரிக்காவில் இருந்து 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், "பில்கேட்சை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். முக்கியமான விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினேன். சிறப்பானதும், நீடித்து நிலைத்து நிற்கக்கூடியதுமான கிரகத்தை உருவாக்குவதற்கான அவரது பணிவும், ஆர்வமும் தெளிவாகத் தெரிகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மோடியுடனான தனது சந்திப்பு குறித்து பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதி இருப்பதாவது:-

    உலகம் எண்ணற்ற சவால்களைச் சந்திக்கும்போது, ஆற்றல் மிக்கதும், ஆக்கப்பூர்வமானதுமான இடமான இந்தியாவுக்கு வந்திருப்பது உத்வேகம் அளிக்கிறது.

    கொரோனா பெருந்தொற்றால் கடந்த 3 ஆண்டுகளாக நான் பெரிதான அளவில் பயணங்கள் மேற்கொள்ளவில்லை. இருந்தபோதும், பிரதமர் மோடியுடன் கொரோனா தடுப்பூசி உருவாக்கம் பற்றியும், இந்தியாவில் சுகாதாரத்துறையில் முதலீடுகள் செய்வது குறித்தும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தேன்.

    இந்தியா உயிர்காக்கும் சாதனங்களை உருவாக்குவதுடன், அவற்றை வழங்குவதிலும் சிறந்து விளங்குகிறது. அதன் பொது சுகாதார அமைப்பு 220 கோடிக்கும் மேலான தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. 'கோவின்' என்ற திறந்தவெளி தளத்தையும் உருவாக்கி உள்ளது. இது தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மக்கள் நேரம் ஒதுக்கிப்பெறுவதற்கும் துணை நிற்கிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு டிஜிட்டல் வடிவ சான்றிதழ்களையும் வழங்கியது.

    இந்த கோவின் தளம் உலகுக்கு ஒரு மாடலாகத் திகழும் என்று பிரதமர் மோடி நம்புகிறார். நானும் அதை ஒப்புக்கொள்கிறேன்.

    இந்தியாவில் கொரோனா காலத்தில் 30 கோடி மக்களுக்கு அவசர கால டிஜிட்டல் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 20 கோடி பேர் பெண்கள் ஆவார்கள்.

    இந்தியா நிதிச்சேர்க்கைக்கு முன்னுரிமை அளித்ததுடன், ஆதார் என்னும் டிஜிட்டல் அடையாள அமைப்பில் முதலீடு செய்ததும், டிஜிட்டல் வங்கித்துறையில் புதிய தளங்களை உருவாக்கியதும்தான் இதைச் சாத்தியமாக்கியது.

    இந்த ஆண்டு 'ஜி-20' அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது குறித்தும் பிரதமர் மோடியுடன் விவாதித்தேன். இங்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகள் நாட்டை எவ்வாறு வளர்ச்சி அடையச்செய்து உலகுக்கு பயன் அளிக்கிறது என்பதை காட்டுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. பிற நாடுகள் அவற்றைப் பின்பற்றவும் உதவுகிறது.

    பிரதமர் மோடியுடனான எனது உரையாடல், இந்தியா சுகாதாரம், வளர்ச்சி, காலநிலை மாற்றம் ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், முன் எப்போதையும் விட மிகுந்த நம்பிக்கை அளித்தது. நாம் கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்தால் என்ன சாத்தியம் என்பதையும் காட்டுகிறது. இந்தியா இந்த முன்னேற்றத்தைத் தொடரும் என்றும், அதன் கண்டுபிடிப்புகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் என்றும் நான் நம்புகிறேன்.

    பிரதமர் மோடி கூறியது போன்று சிறுதானிய உணவுகள் சிறப்பானவை. அவை தண்ணீர் சிக்கனமானவை, வெப்பத்தை தாங்கக்கூடியவை.

    மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த பெண்களின் வளைகாப்பு விழாவில் நான் சிறுதானிய கிச்சடி சாப்பிட்டேன். அருமையாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியுள்ளார்

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு.  மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்த படம் சர்காரு வாரி பாட்டா. இந்த படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் சமீபத்தில்  திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மகேஷ் பாபுவின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


    பில்கேட்ஸை சந்தித்த மகேஷ் பாபு

    இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபுவும் அவரது மனைவி நம்ரதாவும் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனருமான பில்கேட்ஸை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

    இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள மகேஷ் பாபு, " பில்கேட்ஸை சந்திக்கும் மகிழ்ச்சியான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதுவரை உலகம் பார்த்த மிகச் சிறந்த தொலைநோக்கு சிந்தனையாளர்களில் ஒருவர். ஆனாலும் மிக எளிமையான மனிதர். இவர் உண்மையில் ஒரு உத்வேகம்" என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ×