search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manipur"

    அவதூறான செய்திகள் மற்றும் வீடியோக்களை பரவுவதை தடுக்கும் வகையில் மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் அடுத்த 5 தினங்களுக்கு இண்டர்நெட்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. #Internet
    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தின் உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ரகுமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவியதன் மூலம் அடிதடி மற்றும் வன்முறைகள் ஏற்பட்டன. இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது.

    எனவே, இதுபோன்ற அவதூறான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பரவுவதை தடுக்கும் வகையில் இன்று முதல் அடுத்த ஐந்து தினங்களுக்கு மொபைல் இண்டர்நெட்சேவை தடை செய்யப்பட்டு உள்ளது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்ப்டுகிறது என தெரிவித்துள்ளது. #Internet 
    மணிப்பூர் மாநிலத்தின் இந்தியா - மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இன்று மாலை 4.4 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. #ManipurEarthquake

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தின் இந்தியா - மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இன்று மாலை 4:37 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    பூமிக்கடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருப்பதாக இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. #ManipurEarthquake
    வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். #AssamFlood #NEflood

    கவுஹாத்தி:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அசாம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. அசாம் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு நகரங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. கவுகாத்தி நகரின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பேரிடர் மீட்புக் குழுவினர் செய்து வருகின்றனர்.



    இந்நிலையில், இந்த மழையினால் இதுவரை 12 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 6 பேரும், அசாம் மாநிலத்தில் 3 பேரும், திரிபுராவில் 3 பேரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 500க்கு மேற்பட்டோர் வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். #AssamFlood #NEflood
    கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்பதால் பாஜக ஆட்சியமைக்க கவர்னர் அழைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளது. #KarnatakaCM #ManipurCongress
    இம்பால் :

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 37 இடங்களிலும் வென்றன.

    பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், தனிப்பெரும் கட்சி நாங்களே எனவே எங்களையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என எடியூரப்பா அம்மாநில கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்தார்.

    குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்தனர். திடீர் திருப்பமாக நேற்றிரவு எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.



    இந்நிலையில், தனிப்பெரும் கட்சி என்று கூறி கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது போல, மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் தெரிவித்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்காமல் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களை வைத்துள்ள கட்சி ஆட்சியமைக்கலாம் என அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் நாங்களே தனிப்பெரும் கட்சி எனவே நாளை மதியம் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளோம்.

    கடந்த முறை தனிப்பெரும் கட்சியாக இருந்தும் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு எதன் அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது? என்பதற்கான விளக்கத்தையும் கவர்னர் ஜக்திஷ் முக்ஹியிடம் கேட்க உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

    மணிப்பூர் சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 28 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியை புறம் தள்ளிவிட்டு 21 தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க அப்போதைய மணிப்பூர் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    #KarnatakaCMRace #ManipurCongress
    மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #NewChiefJustices
    புது டெல்லி:

    ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதிகள் இருவர் மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய சட்ட அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-

    ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் ராமலிங்கம் சுதாகர் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமது யாகூப் மிர் மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாற்றப்பட்டதை அடுத்து, அதே நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அலோக் அராதே தற்காலிக தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். #NewChiefJustices
    ×