search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madhura"

    • நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார்.
    • ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன்.

    கிருஷ்ணரின் எட்டு வடிவ கோலங்கள்

    கிருஷ்ண பரமாத்மா மொத்தம் 8 வகையாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம் சந்தான கோபால கிருஷ்ணர் கோலமாகும்.

    தவழும் கோலத்தில் இருப்பவர் பாலகிருஷ்ணன்.

    நர்த்தனம் புரிபவர் காளிங்க கிருஷ்ணன் ஆவார்.

    ராதையுடன் நிற்பவர் ராதா கிருஷ்ணன்.

    ருக்மணி, சத்யபாமாவுடன் இருப்பவர் முரளீதரன்.

    அஷ்டபுஜங்களை உடையவர் மதனகோபால்.

    கோவர்த்தனகிரியை தூக்கிப் பிடிக்கும் கோலத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோவர்த்தனதாரி ஆவார்.

    அர்ச்சுனனுக்கு கீதை உபதேசிக்கும் கோலத்தில் இருப்பவர் பார்த்தசாரதி.

    கிருஷ்ணரை இப்படி எந்த கோலத்திலும் வழிபடலாம்.

    ஆனால் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணரின் காலடி சுவட்டை கோலமாக வரைந்து வழிபட்டால், வீடே கோகுலமாக மாறி விட்டதுபோன்ற பக்தி உணர்வு நம் மனதில் ஆழமாக பதிந்து விடும்.

    • இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.
    • அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும்.

    கிருஷ்ண ஜெயந்தி-கிருஷ்ணரை வழிபடும் முறை

    சரி கிருஷ்ண பரமாத்மாவை மிக எளிமையாக வழிபடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் விரதம் இருக்க வேண்டும்.

    பகலில் விரதம் இருக்க வேண்டும்.

    இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.

    மறுநாள் மீண்டும் கிருஷ்ணரை பூஜித்து வழிபட்டு, அன்னதானம் செய்ய வேண்டும்.

    அதன் பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    கிருஷ்ணருக்கு பூக்களை அர்ப்பணிக்கும்போது மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.

    அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும்.

    ஸ்ரீ கிருஷ்ணரை மூன்று முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மிகவும் மகிமை வாய்ந்தது.

    அதன் ஆற்றல் அளவிட முடியாதது.

    எனவே சுதர்சன சக்கரத்தையும் மறக்காமல் வழிபட வேண்டும்.

    • ஒவ்வொரு கையும் ஒரு ஆயுதம் ஏந்திய தெய்வமாக வானத்தில் தோன்றினாள்.
    • இதற்கிடையில் கோகுலத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    துர்க்கையாக மாறிய பெண் குழந்தை

    எட்டாவது குழந்தையை அழிக்க வேண்டும் என சிறைச்சாலைக்கு சென்ற கம்சனிடம், தேவகி, "கம்சனே, இந்த குழந்தை பெண் குழந்தை , தெய்வீக எச்சரிக்கை சொன்ன ஆண் குழந்தை அல்ல. இந்தக் குழந்தை உங்களுக்கு எப்படித் தீங்கு செய்யும்?" இதனை விட்டுவிடுங்கள் என கலங்கி முறையிட்டாள்.

    ஆனால் கம்சன் அவளை அலட்சியப்படுத்தி, குழந்தையை அவள் மடியில் இருந்து பிடுங்கி, குழந்தையை சிறைச் சுவரில் வீசினான்.

    குழந்தை கீழே விழவில்லை; அதற்கு பதிலாக அவள் பறந்து சென்று எட்டு கரங்களுடன், ஒவ்வொரு கையும் ஒரு ஆயுதம் ஏந்திய தெய்வமாக வானத்தில் தோன்றினாள்.

    அவள், "பொல்லாத கம்சனே! என்னைக் கொல்வதால் உனக்கு எந்தப் பலனும் கிடைக்காது. உன்னை அழிப்பவன் வேறொரு இடத்தில் வளர்கிறான்" என்று கூறி தேவி மறைந்தாள்.

    இதற்கிடையில் கோகுலத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    மன்னன் நந்தனின் மகன் பிறந்ததை அனைவரும் கொண்டாடினர்.

    நந்தன் அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயரிட்டார்.

    அன்று முழுக்க கோகுலம் ஒரு பண்டிகை தோற்றத்தில் இருந்தது.

    தெருக்கள் துடைக்கப்பட்டு, அனைத்து வீடுகளும் கொடிகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டன.

    பசுக்களுக்கு மஞ்சள் பூசி, மயில் தோகை மற்றும் மாலைகள் அணிவித்தனர்.

    கோகுல மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் நடனமாடி, குழந்தை கிருஷ்ணனைப் பார்க்கவும், பரிசுகளை வழங்கவும் நந்தாவின் வீட்டிற்கு திரண்டனர்.

    பகவான் கிருஷ்ணர் பிறந்த கதை, கடவுள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் மற்றும் அன்பானவர் என்பதைக் காட்டுகிறது.

    கம்சனின் துன்மார்க்க ஆட்சியின் போது நடந்ததைப் போல, இந்த உலகில் தீமை தாங்க முடியாததாக மாறும் போதெல்லாம், கடவுள் கிருஷ்ணரைப் போல ஒரு அவதார வடிவில் நம்மைக் காப்பாற்ற வருகிறார்.

    • பகவான் கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவருக்கு ஒரு தெய்வீக செய்தி வந்தது.
    • நதி இரண்டாகப் பிரிந்து தெய்வீக குழந்தைக்கு வழிவிட்டது.

    கிருஷ்ணருக்கு வழிவிட்ட யமுனை

    குழந்தை பிறந்தவுடன், மகாவிஷ்ணு தனது தெய்வீக வடிவில் தோன்றினார், சிறைச்சாலை ஒரு திகைப்பூட்டும் ஒளியால் நிரப்பப்பட்டது.

    தேவகி மற்றும் வசுதேவ் இருவரும் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தனர்.

    கிருஷ்ணர் சிறையில் பிறந்த அதே நேரத்தில், ராணி யசோதா கோகுலத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

    பகவான் கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவருக்கு ஒரு தெய்வீக செய்தி வந்தது,

    "கோகுலத்திற்கு சென்று யசோதாவின் குழந்தைக்கு பதில் இந்த குழந்தையை வைத்துவிட்டு யசோதா நந்தகோபரின் குழந்தையை எடுத்து கொண்டு, இந்தக் குழந்தை பிறந்தது யாருக்கும் தெரியும் முன் நீ திரும்பி வந்துவிடு" என்றார்.

    வாசுதேவர் உடனடியாக அறிவுரையைப் பின்பற்றினார்.

    கைக்குழந்தையுடன் அவர்களை நோக்கிச் செல்லும்போது சிறைக் கதவுகள் தானாகத் திறந்தன.

    தெய்வீக தலையீட்டால் காவலர்கள் ஏற்கனவே தூங்கிவிட்டனர்.

    கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மிகவும் கொந்தளிப்பான யமுனை நதியை வாசுதேவர் நெருங்கினார்.

    வாசுதேவர் ஆற்றங்கரையை அடைந்தவுடன், நதி இரண்டாகப் பிரிந்து தெய்வீக குழந்தைக்கு வழிவிட்டது.

    வாசுதேவர் பத்திரமாக ஆற்றின் எதிர் கரையை அடைந்தார், கோகுல மக்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டார்.

    மன்னன் நந்தா மற்றும் ராணி யசோதாவின் அரண்மனைக்குள் நுழைந்து யசோதாவின் பெண் குழந்தை இடத்தில் ஆண் குழந்தையை வைத்தார்.

    பின்னர் அங்குள்ள பெண் குழந்தையுடன் சிறைக்கு திரும்பினார்.

    வாசுதேவர் பெண் குழந்தையை தேவகியின் அருகில் வைத்தவுடன், சிறைக் கதவுகள் தானாக மூடப்பட்டன.

    காவலாளிகள் இப்போது விழித்திருந்து, பெண் குழந்தையின் அழுகையால் திடுக்கிட்டனர்.

    காவலர்கள் கம்சனிடம் ஓடி சென்று எட்டாவது குழந்தை பிறந்ததை அறிவித்தனர்.

    உடனே, கம்சன் குழந்தையை தூக்கிலிட சிறைச்சாலைக்கு விரைந்தான்.

    • கம்சன் வளர்ந்ததும், தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து, அரசனாக முடிசூடினான்.
    • அவரது சகோதரி தேவகி அரசர் வாசுதேவர் என்பவரை மணந்தார்.

    கிருஷ்ணர் பிறந்த கதை

    நீண்ட காலத்திற்கு முன்பு, பண்டைய இந்தியாவில், உக்ரசேனன் என்ற அரசன் இருந்தான்.

    அவருக்கு இளவரசர் கம்சன் மற்றும் இளவரசி தேவகி என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

    இளவரசர் கம்சன் இயல்பிலேயே கெட்டவர்.

    கம்சன் வளர்ந்ததும், தன் சொந்த தந்தையை சிறையில் அடைத்து, அரசனாக முடிசூடினான்.

    விரைவில், அவரது சகோதரி தேவகி அரசர் வாசுதேவர் என்பவரை மணந்தார்.

    திருமணத்திற்குப் பிறகு, கம்சன் வானத்திலிருந்து ஒரு தெய்வீக அசரீரியைக் கேட்டான்,

    "அரசே! உன் சகோதரியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்லும் அளவுக்கு வளர்வான்" என்று, இதைக் கேட்டு பயந்த கம்சன் தனது சொந்த சகோதரி தேவகி மற்றும் அவரது கணவர், மன்னர் வாசுதேவ் ஆகியோரை உடனடியாக சிறையில் அடைத்து, தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்தான்.

    வருடங்கள் கடந்தன. ஒவ்வொரு முறையும் தேவகி சிறையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது, கம்சன் வந்து குழந்தையைத் தன் கைகளால் கொன்றான்.

    எட்டாவது முறையாக தேவகி கருவுற்றபோது, வசுதேவரின் நண்பன் மன்னன் நந்தனின் மனைவி யசோதாவும் கர்ப்பமாக இருந்தாள்.

    எட்டாவது குழந்தை, பகவான் கிருஷ்ணர், சிறையில் நள்ளிரவில் ராணி தேவகிக்கு பிறந்தார்.

    • மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.
    • ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணா... கிருஷ்ணா என்றால் இன்பம் வரும்

    மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும்.

    ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத் தினத்தை ஆண்டு தோறும் பக்தர்கள் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறார்கள்.

    இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தினம் செப்டம்பர் 6 மற்றும் 7ந் தேதிகளில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று நள்ளிரவு வழிபாடு நடத்துவது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று, அவரது சக்தி ஆயிரம் மடங்கு அதிகரிப்பதாக ஐதீகம்.

    எனவே கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று இரவு, "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்று 108 தடவை அல்லது 1008 தடவை சொல்லி வழிபட்டால் கிருஷ்ண பகவானின் அருள் பரிபூரணமாய் நமக்கு கிடைக்கும்.

    மேலும் கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் "பஜகோவிந்தம்" பாட வேண்டும்.

    ஆதிசங்கரர் தான் சென்ற இடங்களில் எல்லாம் பஜகோவிந்தம் பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார்.

    • இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.
    • இப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. விஜய் சேதுபதி நாயகனாக நடித்த இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில், லண்டனில் இருந்து கொடைக்கானலுக்கு தன் இசைக் குழுவுடன் வரும் "ஜெசி" என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றவர் மதுரா. தற்போது, ஜெர்மனியில் வாழும் இலங்கை தமிழ் பெண்ணான இவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்திருந்த சிறப்பு பேட்டியின் போது பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

    அதில், யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தை பற்றி உங்களது கருத்து என்ன என்ற கேள்விக்கு, என் அம்மாவின் பூர்வீகம் இலங்கை, யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் கதையோ ஈழத் தமிழர்களின் வலியையும் வேதனையையும் சொல்லும் கதை என்பதால் என்னால் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிந்தது, இந்தப் படம் ஈழத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாகவே நான் பார்க்கிறேன். கண்டிப்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும் இது நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாகவும் அமையும் என்று நான் கருதுகிறேன் என்று கூறினார்.



    நடிகர் விஜய் சேதுபதி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்ட போது, தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி. என் முதல் நாள் படப்பிடிப்பில் எனக்கு சற்று தயக்கம் இருந்தது என்னை பார்த்ததும் புரிந்துகொண்டு எனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்து பதட்டத்தை போக்கி எனக்கு ஒரு ஆசனாக இருந்தார். அவருடன் இந்தப் படத்தில் பயணிக்க வாய்ப்பு தந்ததற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    விவேக் அவர்களைப் பற்றி உங்களின் கருத்து, நடிப்பின் மீது ஆர்வம் வந்த பிறகு அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு அவருடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு பேரானந்தம், படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பேசியது பழகியது அனைத்தும் இன்றும் எனக்கு ஞாபகம் வருகிறது.

    எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சிறிய இடைவேளை இருந்தது அப்போது பியானோ அங்கிருந்தது அதில் எனக்கு முதல்வன் படத்தில் இருந்து குறுக்கு சிறுத்தவளே என்ற பாடலை வாசிக்க கற்று கொடுத்தார், அதுமட்டுமல்ல நிறைய இளையராஜா பாடல்களை எங்களுக்கு வாசித்து காண்பித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். ஆனால் அவரின் மறைவு எனக்கு மிகுந்த வேதனையை தந்தது, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரத்தை இழந்து விட்டோமே என்று.



    மேகா ஆகாஷுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து கேட்ட போது, என்னுடைய நடிப்பு பயணத்தில் முதல் நட்சத்திர நடிகையும் எனக்கு நல்ல தோழியும் ஆன மேகா ஆகாஷ் உடன் நடித்ததை நான் பெருமையாக நினைக்கிறேன். எங்களது நட்பு என்றும் நீடிக்கும்.

    சந்திரா ஆர்ட்ஸ் புரொடக்சன் பற்றியும் தயாரிப்பாளர் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் ஜெர்மனியில் இருந்து படப்பிடிப்புக்காக சென்னை வரும்போதெல்லாம் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் அக்கரையாகவும் எனக்கு தேவையான வசதிகளையும் அனைத்தையும் ஒரு புதுமுக நடிகை என்று பார்க்காமல் தாய் வீட்டில் இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய சந்திரா ஆர்ட்ஸ் புரொடக்சனுக்கு மிக்க நன்றி.

    இயக்குனரைப் பற்றியும் அவரது பணியை பற்றியும் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டதற்கு, தமிழ் திரை உலகில் எத்தனையோ கதைகள் இருந்தாலும் தன் முதல் படத்தில் ஈழத் தமிழனின் கதையை ஆழமாகவும் நேர்த்தியாகவும் அழகாக வடிவமைத்து அதில் எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை தந்ததற்கு என்னுடைய இயக்குனருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.


    அவரைப் பற்றியும் அவரின் குடும்பத்தை பற்றியும் பகிர்ந்துகொண்ட அவர், நான் ஜெர்மனி நாட்டில் பெர்லின் மாநகரில் பிறந்தேன் என்னுடைய அப்பா ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் என்னுடைய தாயார் இலங்கையை யாழ்ப்பாண தமிழ் பெண், எனக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர், நான் ஜெர்மன் நாட்டில் வழக்கறிஞருக்கான பட்டப்படிப்பை முடித்து பயிற்சிப்பட்டறையில் கடமை ஆற்றுகின்றேன். என்னுடைய சிறு வயதிலிருந்து தமிழ் மொழி அதை சார்ந்த கலைகளான பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், மிருதங்கம் அனைத்தையும் கற்றுத் தெரிந்தேன் என் கல்லூரி நாட்களில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளும் வாங்கியுள்ளேன்.

    தமிழ் மொழியில் உயர்தர கல்வியை முடித்து ஜெர்மன் பிராங்பேர்ட் நகரில் உள்ள தமிழ் பாடசாலையில் ஆசிரியராகவும் தற்போது பணியாற்றுகிறேன். சுவிட்சர்லாந்து மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறேன், அது மட்டுமல்லாமல் ஜெர்மனில் மூன்று இசை வீடியோக்களில் நடித்துள்ளேன்

    யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்திற்குள் எப்படி வந்தீர்கள் என்ற கேள்விக்கு, ஜெர்மனியில் நான் செய்த மாடலிங் வீடியோக்கள் மற்றும் நான் நடித்த மியூசிக் ஆல்பம் மூலமாக எனக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


    கலைத்துறையில் எப்படி ஆர்வம் வந்தது என்பது குறித்து பேசிய அவர், சிறு வயதிலிருந்தே எனக்கு நடிப்பின் மீதும் நடனத்தின் மீதும் ஈடுபாடு அதிகம் நடிப்பில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு ஆசையாக மாறி அதற்காக அனைத்தையும் கற்றுக் கொண்டேன் அதற்காக கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டிருந்தேன், என்னுடைய ஆசைக்கும் கனவுக்கும் துணையாக நின்ற அத்தனை பேருக்கும் முக்கியமாக என்னுடைய பெற்றோருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் தமிழ் படத்தின் மீது உங்களுக்கு உண்டான புரிதல் பற்றிய கேள்விக்கு, தமிழ் எனக்கு பிறப்பிலிருந்து ஊட்டப்பட்டது, நான் ஒரு தமிழ் பெண், சிறு வயதில் இருந்தே தமிழ் பேசி வளர்ந்ததால் தமிழ் திரைப்படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன், ஆனால் தமிழில் நடிக்கப் போகிறோம் என்றவுடன் தமிழில் எல்லா நடிகர், நடிகைகள் உடைய படத்தை பார்த்து நிறைய கற்றுக்கொள்ளவும் செய்தேன். ரஜினி சார் உடைய மாஸ், கமல் சார் உடைய நடிப்பு, விஜய் சேதுபதி அவர்களுடைய இயல்பான நடிப்பு அனைத்தையும் பார்த்து ரசித்திருக்கிறேன். நான் தமிழ் சினிமாவில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. படத்திற்கும் எனக்கும் ஆதரவு கொடுத்த என் ரசிகர்களுக்கும், தமிழ் மக்கள் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    ×