search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lenovo"

    லெனோவோவின் மோட்டோரோலா பிராண்டு தேர்வு செய்யப்பட்ட சில ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்க துவங்கியிருக்கிறது. #Motorola #AndroidPie



    லெனோவோவின் மோட்டோரோலா பிராண்டு தனது மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே மற்றும் மோட்டோ இசட3 பிளே ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கி வருகிறது. புதிய அப்டேட் முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் துவங்கப்பட்டுள்ளது, விரைவில் மற்ற பகுதிகளிலும் அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆண்ட்ராய்டு பை அப்டேட் ஸ்மார்ட்போன்களில் புதிய வடிவமைப்பு கொண்ட நோட்டிஃபிகேஷன்கள், அடாப்டிவ் பேட்டரி, புதிய யு.ஐ. (யூசர் இன்டர்ஃபேஸ்), மேம்பட்ட ஸ்கிரீன்ஷாட் மற்றும் ஆடியோ கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. முன்னதாக மோட்டோ இசட்3 மற்றும் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு பை அப்டேட் கடந்த மாதம் வழங்கப்பட்டது.



    கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அறிமுகம் செய்து ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் பணிகள் துவங்கி இருக்கிறது. ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் அப்டேட் பற்றி முழு விவரங்கள் வெளியாகவில்லை.

    இதனால் புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் உடன் பாதுகாப்பு அப்டேட் ஏதும் வழங்கப்பட்டிருக்கிறதா என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. பிரேசில் வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்ய ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சிஸ்டம் அப்டேட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு பிரேசில் நாட்டில் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டிருப்பதால், வரும் வாரங்களில் மற்ற பகுதிகளுக்கும் ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
    லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் டூயல் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா சென்சார்களை வழங்கியுள்ளது. #LenovoS5ProGT #smartphone
     


    லெனோவோ நிறுவனம் எஸ்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக அந்நிறுவனத்தின் லெனோவோ எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய லெனோவோ எஸ்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:7:9 ரக டிஸ்ப்ளே, அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் மற்றும் ZUI 10 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 20 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. போர்டிரெயிட் மற்றும் 2X சூம் வசதி வழங்கப்பட்டுள்ளது.
     


    அழகிய செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. கேமரா, சோனி IMX476 சென்சார், 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம், 8 எம்.பி. இரண்டாவது கேமரா, ஏ.ஐ. போர்டிரெயிட் வசதி, 3டி லைட்டிங், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. 

    மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருக்கும் லெனோவோ எஸ்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    லெனோவோ எஸ்5 ப்ரோ ஜி.டி. சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:7:9 டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ZUI 10
    - 20 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX476 சென்சார், f/2.2
    - 8 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்



    லெனோவோ எஸ்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1198 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.12,275), 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1298 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,300) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1498 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.15,350) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    லெனோவோ நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #LenovoZ5ProGT



    லெனோவோ நிறுவனம் இசட்5எஸ் ஸ்மார்ட்போனினை தொடர்ந்து இசட்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. புதிய இசட்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் அதிகபட்சமாக 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரு அம்சங்களை கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை லெனோவோ இசட்5 ப்ரோ பெற்றுள்ளது.

    கார்பன் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள லெனோவோ இசட்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனின் பக்கவாட்டுகளில் ரெட் மற்றும் பிளாக் நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. வெர்ஷனில் அதிகபட்சம் 50 செயலிகளை ஒரே நேரத்தில் திறக்க முடியும்.

    மற்ற அம்சங்களை பொருத்த வரை 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 19:5:9 ரக டிஸ்ப்ளே, ஸ்லைடர் வடிவமைப்பு, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி. ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    பின்புறம் 16 எம்.பி. + 24 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா சோனி சென்சார், 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    லெனோவோ இசட்5 ப்ரோ ஜி.டி. சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 19.5:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
    - 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ZUI 10
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார், f/1.8, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 24 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX576 சென்சார், f/1.8
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - 8 எம்.பி. ஐ.ஆர். இரண்டாவது செல்ஃபி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ, டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    லெனோவோ இசட்5 ப்ரோ ஜி.டி. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி விலை 2698 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.27,780), 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,865), 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3398 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,985) என்றும் டாப்-என்ட் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் 4395 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.45,280) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    லெனோவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி பட்ஜெட் விலையில் புதிய லெனோவோ இசட்5எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #LenovoZ5s #smartphone



    லெனோவோ நிறுவனம் இசட்5எஸ் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. சீனாவில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் ZUI 10 கொண்டிருக்கிறது.

    16 எம்.பி. பிரைமரி கேமரா, டெலிஃபோட்டோ லென்ஸ், 2x சூம் வசதி கொண்ட 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் கேமரா சென்சார் என மூன்று பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இதனுடன் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கும் லெனோவோ இசட்5எஸ் ஸ்மார்ட்போனில் P2i வாட்டர் ரெசிஸ்டண்ட் கோட்டிங் கொண்டுள்ளது.

    3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் புதிய லெனோவோ ஸ்மார்ட்போனில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 



    லெனோவோ இசட்5எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 LTPS டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர் 
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ZUI 10
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, PDAF, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4 
    - 5 எம்.பி. கேமரா, f/2.4
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டிராக் ஆடியோ
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (P2i)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்.பி. டைப்-சி
    - 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    லெனோவோ இசட்5எஸ் ஸ்மார்ட்போன் ஹனி ஆரஞ்சு, கிரே மற்றும் டைட்டானியம் கிரஸ்டல் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1398 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,410), 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1598 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.16,475) என்றும் டாப்-என்ட் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1898 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.19,565) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    லெனோவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த தின்க்பேட் இ480 லேப்டாப் மாடலின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #lenovo #laptop



    மின்னணு பொருட்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக சீனாவைச் சேர்ந்த லெனோவா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் தின்க்பேட் இ480 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

    முந்தைய மாடல்களைக் காட்டிலும் சிறப்பான செயல்திறன், மிகவும் உறுதியான வடிவமைப்பு என கொடுக்கும் பணத்திற்கு தரமான லேப்டாப் மாடலாக புதிய தின்க்பேட் இ480 உள்ளது. 14 இன்ச் அளவில் உருவாக்கப்பட்டு இருக்கும் புது லேப்டாப் விலை இந்தியாவில் ரூ. 57,496 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புது தின்க்பேட் இ480 லேப்டாப் முந்தைய மாடல்களை விட மிகவும் மெல்லியதாகவும், எடை குறைவானதாகவும் உள்ளது. இது கருப்பு நிறத்தில் மிகச் சிறப்பான வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இதன் கீ-போர்டில் ஒளிரும் தன்மை கொண்ட (பேக் லைட்) வசதி இருப்பதால் குறைந்த வெளிச்சத்திலும் செயல்படுத்த முடியும்.



    இதில் கைரேகை சென்சார் தின்க்பேட் லோகோவின் மேல் அழகாக இடம்பெற்றுள்ளது. தற்சமயம் வெளியாகும் லேப்டாப் மாடல்களில் கைரேகை சென்சார் வழங்கப்படும் நிலையில், புது கீ-போர்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த விஷயத்தில் லெனோவா தனது வாடிக்கையாளர்களின் மன நிலையை நன்கு உணர்ந்து தொழில்நுட்பத்தை செயல்படுத்தியுள்ளதைப் பார்க்க முடிகிறது. இதில் உள்ள டிராக் பேட் மிகச் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

    பொதுவாக கீ-போர்ட் மற்றும் டிராக் பேட் ஆகியவை சிறப்பாக இருந்தால் உங்களது டைப்பிங் திறன் மேம்படும். பிழைகளும் குறைவாக இருக்கும். அந்த வகையில் தின்க்பேட் கீ-போர்ட் மற்றும் டிராக் பேட் ஆகியவை மிக வசதியான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

    இதில் 7-வது தலைமுறை கோர் ஐ3 சி.பி.யு. உள்ளது. 4 ஜி.பி. ரேம், 1000 ஜி.பி. ஹெச்.டி.டி. ஸ்பின்னிங் 5400 ஆர்.பி.எம். மற்றும் 8-வது தலைமுறை கோர் ஐ7 மற்றும் 8 ஜி.பி. ரேம் 1 டெரா பைட் ஹெச்.டி.டி. ஸ்பின்னிங் 5400 ஆர்.பி.எம். ஆகியவற்றுடன் கிடைக்கிறது. இதன் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்ட நிலையில் 13 மணி நேரம் தொடர்ந்து செயல்படக் கூடியது.
    லெனோவோ நிறுவனத்தின் ஃபுல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #LenovoZ5Pro #smartphone



    லெனோவோ நிறுவனத்தின் இசட்5 ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. லெனோவோ தலைமை செயல் அதிகாரி சாங் செங் புதிய ஸ்மார்ட்போன் நவம்பர் 1ம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

    புதிய அறிவிப்புடன் ஸ்மார்ட்போனின் டீசரை சாங் செங் வெளியிட்டிருந்தார். இதில் புதிய ஸ்மார்ட்போனில் ஸ்லைடு-அவுட் வடிவமைப்பு கொண்டிருப்பது தெரியவந்துளளது. இந்த வடிவமைப்பு காரணமாக புதிய ஸ்மார்ட்போனில் மெல்லிய பெசல்கள், அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது.



    புதிய ஸ்மார்ட்போன் ஸ்லைடரில் இயர்பீஸ், முன்பக்க கேமராக்கள் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் டூயல் பிரைமரி கேமரா செட்டப், ஏ.ஐ. அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய லெனோவோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுவதை சாங் செங் உறுதி செய்திருக்கிறார்.

    இதுதவிர புதிய லெனோவோ ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனினும் சீனாவின் TENAA வலைதளத்தில் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    லெனோவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #LenovoK9



    லெனோவோ நிறுவனம் கே சீரிசில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. லெனோவோ கே9 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P22 12 என்.எம். பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், ஃபேஸ் அன்லாக் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக் கொண்டிருக்கும் லெனோவோ கே9 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    லெனோவோ கே9 சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
    - பவர் வி.ஆர். GE8320 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. இரண்டாவது கேமரா
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    லெனோவோ கே9 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் லெனோவோ கே9 விலை ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லெனோவோ ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

    லெனோவோ கே9 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து குறைந்த விலையில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை லெனோவோ அறிமுகம் செய்துள்ளது. லெனோவோ ஏ5 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் MT6739 பிராசஸர், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    லெனோவோ ஏ5 ஸ்மார்ட்போன் 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மற்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் பின்புற கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    லெனோவோ ஏ5 சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
    - பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
    - 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    லெனோவோ ஏ5 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.5,999 என்றும் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.6,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லெனோவோ ஏ5 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
    லெனோவோவின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து ஸ்மார்ட்போனின் சிறிய வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #MotoG7



    மோட்டோரோலாவின் புதிய மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக மோட்டோ ஜி6 சீரிஸ் இந்தியாவில் வெளியான நிலையில், அடுத்து மோட்டோ ஜி7, ஜி7 பிளஸ் மற்றும் ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம்.

    மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள் வெளியான நிலையில் ஸ்மார்ட்போனின் வீடியோ லீக் ஆகியுள்ளது. ஏற்கனவே வெளியான விவரங்களை பொருத்த வரை புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் போன்ற டிஸ்ப்ளே நாட்ச் கொண்டிருக்கும் என்றும் பின்புறம் டூயல் கேமரா அமைப்பு கொண்டிருப்பது தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து வெளியான படங்களில் மோட்டோ ஜி7 மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுவரை லீக் ஆகியிருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் லீக் ஆன வீடியோவை கீழே காணலாம்..,


    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான லெனோவோ அக்டோபர் 16-ம் தேதி புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Lenovo #smartphone

     

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான லெனோவோ இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    அக்டோபர் 16-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் லெனோவோ தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. லெனோவோ வெளியிட்டிருக்கும் அழைப்பிதழில் தி கில்லர் ரிட்டன்ஸ் என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் கே சீரிஸ் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    முன்னதாக ஆகஸ்டு 2017-இல் லெனோவோ கே8 நோட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் கே சீரிஸ் மாடலாக இருக்கும் என தகவல் வெளியாகிறது. எனினும் இசட்5 ஸ்மார்ட்போனின் ரீ-பிரானட் வெர்ஷனை லெனோவோ அறிமுகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

    லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சீன சந்தையில் அறிமுகமானது.



    லெனோவோ இசட்5 சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த ZUI 3.9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, PDAF
    - 8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3300 எம்ஏஹெச் பேட்டபி ஃபாஸ்ட் சார்ஜிங்

    லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் அரோரா புளு, பிளாக் மற்றும் இன்டிகோ புளு நிறங்களில் கிடைக்கிறது. லெனோவோ இசட்5 பிளாக் 64 ஜிபி விலை 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,625), அரோரா மற்றும் இன்டிகோ புளு நிறம் கொண்ட 64 ஜிபி மாடல் 1399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,670) என்றும் 128 ஜிபி மாடல் 1799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.18,870) என நிர்ணயம் செய்யப்பட்டது.
    லெனோவோ நிறுவனத்தின் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி கொண்ட ஸ்மார்ட் பேன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Lenovo



    லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் பேன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெனோவோ HX03W கார்டியோ பிளஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட் பேன்ட் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, 0.96 இன்ச் OLED ஸ்கிரீன் கொண்டுள்ளது.

    புதிய ஸ்மார்ட் பேன்ட் உடன் மேம்படுத்தப்பட்ட லெனோவோ லைஃப் ஃபிட்னஸ் ஆப் வழங்கப்படுகிறது. இந்த செயலியில் உணவு கட்டுப்பாடு குறித்த விவரம், உடற்பயிற்சி மற்றும் தனிப்பட்ட விளையாட்டுக்கள் சார்ந்த பரிந்துரை உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

    மேலும் இந்த செயலியில் ரியல் டைம் டிராக்கர் இருப்பதால், பிழைகளை சரி செய்து நடவடிக்கைகளுக்கான முடிவுகளை பகிர்ந்து கொள்ள முடியும்.



    லெனோவோ HX03W கார்டியோ பிளஸ் சிறப்பம்சங்கள்

    - 0.96 இன்ச் 128x32 பிக்சல் OLED டிஸ்ப்ளே
    - இதய துடிப்பு, நடை, தூரம், உடலில் எரிக்கப்பட்ட கலோரிகள், உறக்கம் உள்ளிட்டவற்றை டிராக் செய்யும்
    - கால் ரிமைன்டர்கள் மற்றும் நோட்டிஃபிகேஷன், சைலன்ட் அலாரம்
    - ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் டிராக்கர், கைரோ சென்சார், வைப்ரேஷன் மோட்டார்
    - வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP68)
    - ப்ளூடூத்
    - ஆன்ட்ராய்டு 4.4 மற்றும் அதன்பின் வெளியான சாதனங்களில் வேலை செய்யும்
    - பத்து நாட்கள் வரையிலான பேட்டரி

    லெனோவோ HX03W கார்டியோ பிளஸ் ஃபிட்னஸ் பேன்ட் பிளாக், ரெட் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட் பேன்ட் விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    லெனோவோ நிறுவனத்தின் HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
     



    லெனோவோ நிறுவனம் HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன் லெனோவோ நிறுவனத்தின் HX03 கார்டியோ மற்றும் HX03F ஸ்பெக்ட்ரா பேன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் OLED மோனோக்ரோம் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    இந்த டிஸ்ப்ளே ஆக்டிவிட்டி, நேரம், தேதி மற்றும் பல்வேறு தகவல்களை வழங்குகிறது. இதில் இதய துடிப்பு சென்சார் வழங்கப்படாத நிலையில், 60 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 8 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய HX06, பில்ட்-இன் ஸ்டான்டர்டு யுஎஸ்பி போர்ட் கொண்டிருக்கிறது. 

    இதை கொண்டு நேரடியாக கம்ப்யூட்டர் அல்லது யூஎஸ்பி சார்ஜர் மூலம் மிக எளிமையாக சார்ஜ் செய்ய முடியும். இதற்கு எவ்வித கூடுதல் கேபிள்களும் தேவைப்படாது.



    லெனோவோ HX06 ஆக்டிவ் ஸ்மார்ட்பேன்ட் சிறப்பம்சங்கள்:

    - 0.87 இன்ச் 128x32 பிக்சல் OLED டிஸ்ப்ளே
    - ஸ்டெப்கள், தூரம், எரிக்கப்பட்ட கலோரிக்கள், உறக்கம் உள்ளிட்டவற்றை டிராக் செய்யும்
    - அழைப்பு ரிமைன்டர்கள், நோட்டிஃபிகேஷன்கள்
    - இன்ஃபர்மேஷன் ரிமைன்டர், சைலன்ட் அலாரம்
    - கைரோ சென்சார், வைப்ரேஷன் மோட்டார்
    - வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP67)
    - எடை: 20 கிராம்
    - ப்ளூடூத் 4.2 LE
    - ஆன்ட்ராய்டு 4.4 மற்றும் அதற்கும் புதிய இயங்குதள சாதனங்களில் பயன்படுத்த முடியும்
    - ஐஓஎஸ் 8.0 மற்றும் அதற்கும் புதிய இயங்குதள சாதனங்களில் பயன்படுத்த முடியும்
    - 60 எம்ஏஹெச் பேட்டரி

    லெனோவோ HX06 ஸ்மார்ட்பேன்ட் கருப்பு நிறம் கொண்டிருப்பதோடு, மாற்றக்கூடிய ரிஸ்ட் ஸ்டிராப்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் லெனோவோ HX06 ஸ்மார்ட்பேன்ட் விலை ரூ.1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மோட்டோரோலா இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மோட்டோ இ5 பிளஸ் வெளியீடு குறித்த டீசர் பதிவிடப்பட்டு இருக்கிறது.




    மோட்டோ இ5 டீசர்களை தொடர்ந்து மோட்டோரோலா இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மோட்டோ இ5 பிளஸ் டீசர் பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக பேட்டரி சார்ந்த பிரச்சனைகள் குறித்த வீடியோவை அந்நிறுவன ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.

    தற்சமயம் மோட்டோ இ5 பிளஸ் வெளியீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதே நிகழ்வில் மோட்டோ இ5 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மூன்றாம் தரப்பு விற்பனையாளர் நிர்ணயித்திருக்கும் விலை என்பதால் இது அதிகாரப்பூர்வ விலை கிடையாது

    முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது, எனினும் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டது. அறிமுக நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் மட்டும் வெளியிடப்படும் என்றும் மோட்டோ இ5 மற்றும் மோட்டோ இ5 பிளஸ் மாடல்கள் ஆசிய பசிபிக், ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.



    மோட்டோ இ5 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி, 1440x720 பிக்சல் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ், PDAF
    - 8 எம்பி பிரைமரி கேமரா, செல்ஃபி ஃபிளாஷ்
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - டர்போ பவர் சார்ஜிங் வசதி

    ஐரோப்பாவில் மோட்டோ இ5 பிளஸ் விலை EUR 149 (இந்திய மதிப்பில் ரூ.13,495) என நிர்ணயம் செய்யப்பட்டது.
    ×