search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kulasekarapattinam Mutharamman Temple"

    • பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • இன்று இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆடிக்கொடை விழா நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்கியது. இரவு10 மணிக்கு வில்லிசை நடைபெற்றது. நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முத்தாரம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    பகல் 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், இரவு 8 மணிக்கு வில்லிசை, 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு சிற்றுண்டி அன்னதானம், 9 மணிக்கு சிறப்பு மகுடம், 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், வில்லிசை, அன்னதானம், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ளது ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில்.
    • ஆடிகொடை விழா இன்று தொடங்கி 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் ஆடிகொடை விழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று இரவு 8 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை, இரவு 10 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள், காலை 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், காலை 10 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், 11.15 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.

    மேலும் இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு 8 மணிக்கு வில்லிசை, இரவு 9 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள், இரவு 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் மற்றும் சிறப்பு மகுடம் குறவன், குறத்தி, கரகாட்டம் நடைபெறுகிறது.

    3-ந் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு மகுடம், காலை 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், 11.30 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையரும் தக்காருமான சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • குலசேகரன்பட்டினத்தில் உள்ளது ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில்.
    • ஆடி மாத கொடை விழா ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்ற திருவிழாவாகும். இந்த கோவிலில் ஆடி மாத கொடை விழா வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதையொட்டி 1-ந் தேதி இரவு 8 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை, இரவு 10 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2-ந்தேதி காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 10 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்திருத்தல், 11.15 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு 8 மணிக்கு வில்லிசை, 9 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள், 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் மற்றும் சிறப்பு மகுடம், குறவன்-குறத்தி, கரகாட்டம் நடைபெறுகிறது.

    3-ந்தேதி காலை 9 மணிக்கு சிறப்பு மகுடம், காலை 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், 11.30 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    ஆடி கொடை விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், தக்காருமான சங்கர், செயல் அலுவலர் இராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்து உள்ளனர்.

    குலசேகரன்பட்டினம் சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆசியாவிலேயே அதிகமான பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து கலந்துகொண்டதை சிறப்பிக்கும் வகையில் விருதுக்கான சான்றிதழ்கள் கோவில் நிர்வாக அலுவலரிடம் வழங்கப்பட்டது. #Kulasekarapattinam #MutharammanTemple
    குலசேகரன்பட்டினம்:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கி, 21-ந் தேதி நிறைவு பெற்றது. விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபட்டனர்.

    இந்த நிலையில் ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’, ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய அமைப்புகள் சார்பில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வேடம் அணிந்து வந்த பக்தர்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது.

    இதில் ஆசியாவிலேயே அதிகமான பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தெரியவந்தது. இதை அங்கீகரிக்கும் விதமாக வழங்கும் விருதுக்கான சான்றிதழ்களை அந்த அமைப்பினர், கோவில் நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியனிடம் வழங்கினர். கோவிலுக்கு வேடம் அணிந்து வந்த பக்தர்களின் எண்ணிக்கை பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.  #Kulasekarapattinam #MutharammanTemple
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது.
    குலசேகரன்பட்டினம்:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்தனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவில் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் தங்கியிருந்து வழிபட்டு வருகின்றனர். அவர்கள் தினமும் ஒரு வேளை மட்டும் பச்சரிசி உணவு சாப்பிட்டு விரதம் இருந்து வருகின்றனர்.

    விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, சிவன், விஷ்ணு, பிரம்மன், விநாயகர், முருகபெருமான், கிருஷ்ணர், ராமர், லட்சுமணர், சுடலைமாடன், அனுமார் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடங்களையும், முனிவர், அரசர், போலீஸ்காரர், செவிலியர், நரிக்குறவர், அரக்கன், சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிந்தனர்.



    ஒவ்வொரு ஊரிலும் வேடம் அணிந்த பக்தர்கள் குழுக்களாக வாகனங்களில் ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூலித்து வருகின்றனர். தசரா குழுக்கள் சார்பில் கரகாட்டம், மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. விரதம் இருந்து காப்பு அணிந்த சில பக்தர்கள் தசரா திருவிழாவின் கடைசி சில நாட்கள் மட்டும் வேடம் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, கோவிலில் செலுத்துவார்கள். இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    10-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். #tamilnews
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதி உலா, 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து நேர்த்திக்கடனாக பல்வேறு நாட்கள் விரதம் இருந்து, காளி வேடம் அணியும் பக்தர்களுக்கு கோவில் பூசாரி காப்பு அணிவித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தினமும் இரவு 9 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    முதலாம் நாளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்திலும், 2-ம் நாளில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் கோலத்திலும், 3-ம் நாளில் ரி‌ஷப வாகனத்தில் பார்வதி கோலத்திலும், 4-ம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்திலும், 5-ம் நாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் கோலத்திலும், 6-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்திலும், 7-ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்திலும், 8-ம் நாளில் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்திலும், 9-ம் நாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்திலும் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    10-ம் நாளான வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. 11-ம் நாளான 20-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு அம்மன் தேரில் பவனி வருதல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.

    12-ம் நாளான 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையுடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் தினமும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு மகுட இசை, 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, 6 மணிக்கு கரகாட்டம், இரவு 7 மணிக்கு வில்லிசை, 8 மணிக்கு பக்தி இசை நடக்கிறது.

    இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு அணிவிக்கப்படுகிறது.

    நாளை (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதி உலா நடக்கிறது. காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து நேர்த்திக்கடனாக பல்வேறு நாட்கள் விரதம் இருந்து, காளி வேடம் அணியும் பக்தர்களுக்கு கோவில் பூசாரி காப்பு அணிவிப்பார்.

    காப்பு அணிவிக்கப்பட்ட பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு சென்று, அங்குள்ள கோவில் அருகில் தசரா பிறையில் தங்கி விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு காப்பு அணிவிப்பார்கள். காப்பு அணிவிக்கப்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூல் செய்து 10-ம் நாள் இரவில் கோவிலில் வழங்குவார்கள்.

    விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தினமும் இரவு 9 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முதலாம் நாளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்திலும், 2-ம் நாளில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் கோலத்திலும், 3-ம் நாளில் ரி‌ஷப வாகனத்தில் பார்வதி கோலத்திலும், 4-ம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்திலும்,

    6-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மகி‌ஷாசுரமர்த்தினி கோலத்திலும், 7-ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்திலும், 8-ம் நாளில் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்திலும், 9-ம் நாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்திலும் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    10-ம் நாளான வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகி‌ஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. 11-ம் நாளான 20-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு அம்மன் தேரில் பவனி வருதல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 12-ம் நாளான 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையுடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் மாலையில் கோவில் வளாகத்தில் உள்ள சவுந்திரபாண்டிய நாடார்-தங்கக்கனி அம்மாள் கலையரங்கில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், பட்டிமன்றம், பாவைக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா இன்று இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்குகிறது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு பெயர் பெற்ற திருத்தலமாகும். இங்கு வருடம் தோறும் ஆடிக்கொடை விழா சிறப்பாக நடைபெறும். இந்த வருட கொடை விழா இன்று (30-ந் தேதி) இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு வில்லிசை நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 7 மணி, காலை 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும் நடக்கிறது. காலை 11 மணி, இரவு 11 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு பூஜையுடன் கும்பம் தெரு வீதி உலா செல்லுதல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10 மணி, இரவு 10 மணிக்கு வில்லிசை மற்றும் மகுட இசையும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

    வருகிற 1ந்தேதி (புதன் கிழமை) காலை 9 மணிக்கு மகுட இசை, 10 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெரு வீதி செல்லுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது.

    கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையரும் கோவில் தக்காருமான ரோஜாலி சுமதா, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், கோவில் ஆய்வாளர் பகவதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    முத்தாரம்மன் கோவில் கொடை விழா வருகிற 30-ந் தேதி இரவு 9 மணிக்கு மாக்காப்பு, தீபாராதனையுடன் தொடங்குகிறது.

    உடன்குடி:

    குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு பெயர் பெற்ற திருத்தலமாகும். இங்கு வருடம் தோறும் ஆடிக் கொடை விழா நடைபெறும். இந்த வருட கொடைவிழா வருகிற 30-ந் தேதி இரவு 9 மணிக்கு மாக்காப்பு, தீபாராதனையுடன் தொடங்குகிறது. இரவு 10 மணிக்கு வில்லிசை நடக்கிறது.

    31-ந் தேதி காலை 7 மணி, 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, பகல் 11 மணி, இரவு 11 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு பூஜையுடன் கும்பம் தெரு வீதி உலா செல்லுதல், காலை 10 மணி, இரவு 10 மணிக்கு வில்லிசை மற்றும் மகுட இசை, பகல் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    1-ந் தேதி காலை 9 மணிக்கு மகுட இசை, 10 மணிக்கு வில்லிசை, காலை 11 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெரு வீதி செல்லுதல், பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது.

    கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையரும் கோவில் தக்காருமான ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், ஆய்வாளர் பகவதி மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    ×