search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kudankulam Nuclear Power Plant"

    கூடங்குளத்தில் 2-வது அணு உலை இன்று அதிகாலை 2.37 மணிக்கு மீண்டும் இயங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அங்கு 350 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. #KudankulamNuclearPowerPlant
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உடைய 2 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. அதன்மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் பராமரிப்பு பணிக்காக முதலாவது அணு உலையில் கடந்த ஆகஸ்டு மாதம் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    2-வது அணு உலையில் மட்டும் சுமார் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் 2-வது அணு உலையிலும் மின் உற்பத்தி முழுமையாக நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த 8-ந்தேதி வால்வு கோளாறு காரணமாக 2-வது அணு உலையில் திடீரென்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இதனால் கூடங்குளம் அணு மின்சாரம் தமிழகத்துக்கு முற்றிலும் கிடைக்காமல் போனது. இதன் காரணமாக தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் 2-வது அணு உலையை விரைவில் சீரமைத்து மின் உற்பத்தி தொடங்க அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றினார்கள்.

    இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 2.37 மணிக்கு 2-வது அணு உலை மீண்டும் இயங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அங்கு 350 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இன்று மாலை இது 450 மெகாவாட்டாக உயர்த்தப்படும். அதன் பிறகு படிப்படியாக 2 நாளில் மீண்டும் 750 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு தமிழக மின் தொகுப்புக்கு அனுப்பப்படும். இதனால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது.  #KudankulamNuclearPowerPlant
    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணி, பழுது காரணமாக 2 உலைகளிலும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த அணுஉலைகள் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக ஆண்டுக்கு ஒருமுறை நிறுத்தப்படும். அதன்படி முதலாவது அணுஉலை கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. இதனால் அந்த அணுஉலையில் மின் உற்பத்தி நடைபெறவில்லை.

    2-வது அணுஉலையில் மட்டும் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் அந்த அணுஉலையும் கடந்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதி பராமரிப்பு பணிக்காக திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த அணுஉலை 26-ந்தேதி முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    தொடக்கத்தில் 300 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் அது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு ஒரு சில நாட்களில் ஆயிரம் மெகா வாட் மின்உற்பத்தியை எட்டியது. தொடர்ந்து 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பழுது ஏற்பட்டது.

    இதனால் அந்த அணுஉலை உடனடியாக நிறுத்தப்பட்டு பழுதை சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது. அணுமின் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது 2 அணுஉலைகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மின்தடை அபாயம் ஏற்பட்டுள்ளதால் 2-வது அணுஉலை பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஓரிரு நாளில் அது சரி செய்யப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் இன்று காலை நிலவரப்படி மின்சாரம் உற்பத்தி 500 மெகாவாட்டை எட்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #KudankulamNuclearPowerPlant
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த இரு அணு உலைகள் மூலம் தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின் சாரம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி 2-வது அணு உலை வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே முதலாவது அணு உலையிலும் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி நிறுத்தப்பட்டது.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2 அணு உலைகளும் நிறுத்தப் பட்டதால் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. 2-வது அணு உலையில் ஏற்பட்ட பழுது நீக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த பணி முடிவடைந்து 2-வது அணு உலையில் மீண்டும் நேற்று மின்உற்பத்தி தொடங்கியது.

    முதலில் 300 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. அதனை படிப்படியாக அதிகரிக்கும் நடவடிக்கையில் அணுமின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டனர். இன்று காலை நிலவரப்படி 2-வது அணு உலையில் மின்சாரம் உற்பத்தி 500 மெகாவாட்டை எட்டியிருப்பதாக அணுமின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். #KudankulamNuclearPowerPlant

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் ஏற்பட்ட பழுது நீக்கும் பணி முடிவடைந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த இரு அணு உலைகள் மூலம் தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி 2-வது அணு உலை வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே முதலாவது அணு உலையிலும் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி நிறுத்தப்பட்டது.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2 அணு உலைகளும் நிறுத்தப்பட்டதால் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. 2-வது அணு உலையில் ஏற்பட்ட பழுது நீக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த பணி முடிவடைந்து 2-வது அணுஉலையில் மீண்டும் இன்று மின்உற்பத்தி தொடங்கியது.

    முதலில் 300 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. அதனை படிப்படியாக அதிகரிக்கும் நடவடிக்கையில் அணுமின் நிலைய ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


    கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் அணு கழிவுகளை நீக்குவது தொடர்பான வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். #Kudankulamnuclearpowerplant
    புதுடெல்லி:

    கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் அணு கழிவுகளை நீக்குவது தொடர்பாக பூவலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் ஜி.சுந்தரராஜன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அணு கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் மேலும் 2 வாரங்கள் அவகாசம் கோரி எழுத்து வடிவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.  #Kudankulamnuclearpowerplant
    கூடங்குளம் 3-வது அணு உலைக்கான உபகரணங்களை ரஷியா அனுப்பி உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KudankulamNuclearPowerPlant
    சென்னை:

    இந்திய அணுமின் கழகமும், ரஷிய அரசு நிறுவனமான ரொஸாட்டமும் இணைந்து நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின்உற்பத்தி நிறுவனத்தை அமைத்து வருகிறது. தலா 1000 மெகாவாட் திறன்கொண்ட 6 அணு உலைகளில் 2 உலைகள் தற்போது இயங்கி வருகின்றன. 2 அணு உலைகளும் இதுவரை 2,703 கோடியே 30 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன.

    3-வது மற்றும் 4-வது அணு உலைகளின் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி தொடங்கியது. தற்போது இதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கூடங்குளம் 3-வது அணு மின்நிலையத்துக்கு தேவைப்படும் முக்கிய பாகங்களையும், ஏற்கனவே உள்ள முதல் மற்றும் 2-வது அணு மின்நிலையங்களுக்கு தேவையான சில உதிரிபாகங்களையும் ரஷியா அனுப்பி உள்ளது.

    குறிப்பாக அணு உலைகளுக்கு தேவைப்படும் ஈரப்பதம் பிரித்து மறுவெப்பமேற்றி மற்றும் உயர் அழுத்த வெப்பமேற்றி கருவிகளை 3-வது அணு உலைக்காகவும், அணு உலையை குளிரூட்ட உதவும் பம்புகளுக்கான உதிரிபாகங்களை ஏற்கனவே உள்ள இரு அணு உலைகளுக்காகவும் அனுப்பியுள்ளது.

    ஈரப்பதம் பிரித்து மறு வெப்பமேற்றி கருவி 47 டன் எடையும், 7 மீட்டர் உயரமும், 4 மீட்டர் விட்டமும் கொண்டது. உயர்அழுத்த வெப்பமேற்றி கருவி 11 மீட்டர் நீளமும், 120 டன் எடையும் கொண்டது. அணு உலையில் இவை மிக முக்கியமான பகுதி. இங்குதான் உயர்அழுத்த நீராவியால் டர்பைன் இயக்கப்பட்டு வெப்ப ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது.

    கூடங்குளத்தில் அமைய உள்ள 3-வது அணு உலைக்காக பெறப்படும் பாகங்களின் மொத்த எடை ஆயிரம் டன்கள். இந்த இரு பாகங்களும் தலா 8 ஜோடிகள் இடம்பெறும். இந்த கருவிகள் ரஷியாவில் இருந்து கப்பல் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவை ஓரிரு வாரங்களில் கூடங்குளம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். #KudankulamNuclearPowerPlant
    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவில் பணியாளர் சேர்க்கைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.
    மதுரை:

    நெல்லை மாவட்டம் ராதபுரம் தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. அப்பாவு மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    “நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அனல்மின் நிலையம் அமைந்துள்ளது.

    கூடங்குளம் அனல்மின் நிலையம் அமைவதற்கு அப்பகுதி மக்கள் தங்களது நிலங்களை வழங்கினர்.

    கூடங்குளம் அனல்மின் நிலையம் அமைய நிலம் அளித்த பொதுமக்களுக்கு அனல்மின் நிலையத்தில் கல்வி தகுதியின் அடிப்படையில் சி மற்றும் டி பிரிவில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என 12.2.1999 அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த அமைதி கூட்டத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது.

    இந்நிலையில் கூடங்குளம் அனல்மின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவில் பணிபுரிய ஆட்கள் தேவை என இந்தாண்டு ஏப்ரல் 18-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பாணையில் நிலம் அளித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று எதுவும் குறிப்பிடவில்லை.

    கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு நிலம் அளித்தவர்களுக்கு சி மற்றும் டி பிரிவில் வேலை அளிக்கப்படும் என்ற 1999-ம் ஆண்டு ஒப்பந்தப்படி வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்காமல் சி, டி பிரிவில் வேலையாட்கள் தேவை என ஏப்ரல் 18 ல் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.

    மேலும் கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு 1999-ம் ஆண்டு ஒப்பந்தபடி நிலம் அளித்தவர்களுக்கு சி மற்றும் டி பிரிவில் வேலையில் பணியமர்த்த உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம் ஏ.எம்.பஷீர் முகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் அளித்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு 1999-ம் ஆண்டு ஒப்பந்தபடி சி மற்றும் டி பிரிவில் வேலையில் பணியமர்த்த இடைக்கால தடை விதித்தும் இது குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர், கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் வழக்கு விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    கூடங்குளம் 2-வது அணுஉலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணி நிறைவடைந்து நீராவி வெளியேற்று பணிகள் நடப்பதாக அணுமின் நிலைய வளாக இயக்குனர் டி.எஸ்.சவுத்ரி கூறினார்.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணு உலை கட்டுமானப்பணி முடிவடைந்து கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கியது.

    2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதியன்று வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து 2-வது அணு உலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி முதல் 2-வது அணு உலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியது. இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பொதுவாக 300 நாட்களுக்கு மேல் இயங்கிய அணு உலைகள் பராமரிக்கப்படுவது வழக்கம். அதன்படி பராமரிப்பு பணிக்காக 2-வது அணு உலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக 2-வது அணுஉலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிகளில் ரஷியா மற்றும் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தற்போது பணிகள் முடிவடைந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து 2-வது அணுஉலையில் இருந்து நீராவி வெளியேற்றும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. பகல் நேரத்தில் மட்டுமே இந்த பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்கிறார்கள். இந்த பணியின்போது பயங்கர சத்தத்துடன் வெண்புகை வெளியேறும் என்றும், இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் டி.எஸ்.சவுத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2-வது அணுஉலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணி நிறைவடைந்து நீராவி வெளியேற்று பணிகள் நடக்கிறது. பகல் நேரங்களில் சில நிமிடங்கள் மட்டும் நடைபெறும் இந்த சோதனையின்போது அணுஉலையில் இருந்து நீராவி வெளியேறும்.

    அப்போது பயங்கர சத்தத்துடன் அதிகமாக வெண்புகை வெளிப்படும். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். கூடங்குளத்தில் 2 அணுஉலைகள் மூலமும் இதுவரை 26 ஆயிரத்து 776 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நீராவி வெளியேற்றும் பணிகள் நாளையும் நடக்கிறது.

    ×