search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kenya"

    கென்யாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் தைவான் சுற்றுலா பயணியை நீர்யானை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    நைரோபி:

    கென்யாவின் தலைநகர் நைரோபி அருகே நைவாசா என்ற ஏரியில் நீர்யானைகள் சரணாலயம் உள்ளது. இது மலைக்கு இடையில் அமைந்துள்ளது.

    தைவானை சேர்ந்த சுற்றுலா பயணி சங் மிங் சாங் (66) என்பவர் அங்கு சென்று இருந்தார். வனவிலங்கு சரணாலயத்தை சுற்றிப் பார்த்தார்.

    பின்னர் மலையின் உயரமான இடத்தில் இருந்து நீர் யானைகளை போட்டோ எடுத்தார். அப்போது கால் தவறி நீர்யானைகள் இருந்த குளத்துக்குள் விழுந்து விட்டார். இதனால் ஆவேசம் அடைந்த நீர்யானை அவரை கடித்து குதறியது. வலி தாங்க முடியாமல் அவர் அலறினார்.

    உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மீட்டனர். இருந்தும் மார்பில் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 6 பேர் நீர்யானைகளால் கடித்து கொல்லப்பட்டுள்ளனர்.
    துபாயில் நடைபெற்றுவரும் கபடி மாஸ்டர்ஸ் தொடரில் இந்தியா 50-15 என்ற புள்ளிக்கணக்கில் கென்யாவை வீழ்த்தியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvKEN #KENvIND

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் மூன்று லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில், இன்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, கென்யாவை எதிர்கொண்டது.

    தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்களை பிடிக்க முடியாமல் கென்யா வீரர்கள் திணறினர். அதேசமயம் இந்திய வீரர்கள் கென்யா வீரர்களை அவுட் ஆக்கி புள்ளிகளை தட்டிச்சென்றனர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 29-5 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 21 புள்ளிகளும், கென்யா 10 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 50-15 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈரான் 57-27 என அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvKEN #KENvIND
    துபாயில் நடைபெற்றுவரும் கபடி மாஸ்டர்ஸ் தொடரில் இந்தியா 48-19 என்ற புள்ளிக்கணக்கில் கென்யாவை வீழ்த்தியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvKEN #KENvIND

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் நேற்று தொடங்கியது. அறிமுக ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் மோதின. 

    தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்களை பிடிக்க முடியாமல் கென்யா வீரர்கள் திணறினர். அதேசமயம் இந்திய வீரர்கள் கென்யா வீரர்களை அவுட் ஆக்கி புள்ளிகளை தட்டிச்சென்றனர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 27-9 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 21 புள்ளிகளும், பாகிஸ்தான் 10 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 48-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈரான் 54-24 என அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 25-ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிகள் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளன.  #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvKEN #KENvIND
    இண்டர்காண்டினெண்டல் கால்பந்து கோப்பையில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் மெஸ்சி சாதனையை சமன் செய்துள்ளார் சுனில் சேத்ரி. #SunilChhetri #Messi
    மும்பை:

    கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பை போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலந்து, கென்யா, சீனா தைபே ஆகிய அணிகள் மோதின. தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா - கென்யா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. 

    இந்த போட்டியில் இந்தியா 2--0 என்ற கோல்கணக்கில் வென்று காண்டினெண்டல் கால்பந்து கோப்பையை வென்றது. 
    கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்து இந்திய வெற்றிக்கு வித்திட்டார்.

    இந்த 2 கோல்களுடன் சேர்ந்து சுனில் சேத்ரி கால்பந்து போட்டிகளில் மொத்தம் 64 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் அர்ஜெண்டினாவுக்காக ஆடிய மெஸ்சியின் 64 கோல்கள் என்ற மைல்கல்லை சமன் செய்துள்ளார்.

    போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோ 81 கோல்கள் அடித்து  முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #SunilChhetri #Messi
    இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில், இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. #INDvKEN #IntercontinentalCup
    மும்பை:

    கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது. 4 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தன.

    இதையடுத்து கோல் வித்தியாசம் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    மும்பையில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-கென்யா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.



    ஆட்டத்தின் தொடக்கத்தில் 8வது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, 29-வது நிமிடத்தில் சுனில் சேத்ரி 2வது கோலையும் அடித்தார். இதையடுத்து, இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.



    அதன்பின், தொடர்ந்து ஆடிய கென்யா அணி இறுதி வரை கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து, இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி கென்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. #INDvKEN #IntercontinentalCup
    கென்யா அணியுடனான கால்பந்து போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. #Chhetri100 #INDvKEN #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup

    புதுடெல்லி:

    இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

    இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் மோதின. இது இந்திய அணியின் கேப்டன் சுனில் செத்ரியின் 100-வது சர்வதேச போட்டியாகும். இந்த போட்டியில் செத்ரிக்கு ஆதரவளிக்க ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண வந்தனர். இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டது.

    இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டட்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் கேப்டன் சுனில் செத்ரி கோல் அடித்தார். இது அவரின் 60-வது சர்வதேச கோலாகும். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. 



    அதைத்தொடர்ந்து 71-வது நிமிடத்தில் ஜேஜே ஒரு கோல் அடித்தார். அதன்பின் கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்தில் சுனில் செத்ரி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

    இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 7-ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. #Chhetri100 #INDvKEN #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup 
    நியூசிலாந்து உடனான இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து போட்டியில் கென்யா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. #KENvNZL #IntercontinentalCup

    மும்பை:

    இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் தென்னாபிரிக்கா கலந்துகொள்வதாக இருந்தது. இருப்பினும் அந்த அணி கலந்துகொள்ள முடியாத காரணத்தினால் கென்யா அணி சேர்க்கப்பட்டது.

    நேற்று நடைபெற்ற அறிமுக ஆட்டத்தில் சுனில் செத்ரியின் ஹாட்ரிக் கோலினால் இந்தியா, 5-0 என சீன தைபே அணியை வீழ்த்தியது. இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கென்யா - நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியின் 42-வது நிமிடத்தில் நியூசிலாந்து அணியின் சர்பிரீத் சிங் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 45-வது நிமிடத்தில் கென்யா அணியின் கிளிப்டன் மிஹெசோ அயிசி கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டம் 1-1 என சமனானது.



    இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் கென்யா அணியின் மைக்கெல் ஒவெல்லா ஒரு கோல் அடித்தார். நியூசிலாந்து அணியினர் இறுதி வரை முயன்றும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் கென்யா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் கென்யா - இந்தியா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #KENvNZL #IntercontinentalCup
    கென்யாவில் அணை உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. #KenyaDamBurst
    நைரோபி:

    ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நாகுரு பகுதியில் உள்ள படேல் அணையில் நேற்று முன்தினம் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் அங்குள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள வீடுகள், விளை நிலங்கள் வெள்ளத்தால் மூழ்கின.

    முதல் கட்டமாக 41 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பேரிடர் ஆணையம் தெரிவித்தது.



    இந்நிலையில், கென்யாவில் அணை உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. 

    இதுதொடர்பாக பேரிடர் மீட்பு அதிகாரிகள் கூறுகையில், நாகுரு பகுதியில் உள்ள படேல் அணையில் உடைப்பு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் மாயமாகி உள்ளனர் என தெரிவித்தனர். #KenyaDamBurst
    கென்யாவின் நாகுரு பகுதியில் அணை உடைந்ததன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். #KenyaDamBurst
    நைரோபி:

    ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நாகுரு பகுதியில் உள்ள படேல் அணையில் நேற்று நள்ளிரவு திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள வீடுகள், விளை நிலங்கள் வெள்ளத்தால் மூழ்கின.



    இதுவரை 41 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. வீடுகளை இழந்தவர்கள் தற்போது தற்காலிக முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
    ×