search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallakurichi"

    • தமிழகம் முழுவதும் இன்று தனியார் பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.
    • பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கல்வித்துறை உத்தரவிட்டது.

    தேனி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று அந்த பள்ளி முன்பு போராட்டம் நடைபெற்றது.

    இதில் பள்ளியில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டு அங்கிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று தனியார் பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கல்வித்துறை உத்தரவிட்டது.

    தேனி மாவட்டத்தில் அரசு உத்தரவையும் மீறி பெரும்பாலான தனியார் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தேனி, ஆண்டிப்பட்டி, வருசநாடு, கண்டமனூர், உத்தமபாளையம், சின்னமனூர், பெரியகுளம், போடி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் அடைக்கப்பட்டன.

    இது தொடர்பாக அந்தந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செல்போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் பல மாணவர்கள் பள்ளிக்கு வந்து விடுமுறை என தெரிந்து மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. விடுமுறை அறிவிப்பு வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அது போன்ற எந்தவித அறிவிப்பும் வராததால் மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர்.

    இதே போல தனியார் நர்சரி பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கின. நேற்று நீட் தேர்வு நடத்தப்பட்ட தனியார் பள்ளியில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது எனவும் நீட் தேர்வுக்காக வகுப்பறைகள் மாற்றப்பட்டதால் இந்த விடுமுறை என்றும், நாளை வழக்கம் போல் பள்ளி இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    • கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக இதுவரை 192 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • வரும் 31-ம் தேதி வரை கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சின்ன சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பை கண்டித்து நடைபெற்று வந்த போராட்டம் நேற்று கலவரமாக மாறியது.

    போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.பாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். அதன்பின், பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பள்ளி பஸ்களுக்கு தீ வைத்தனர். பஸ்கள் கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி புகைமண்டலமாக மாறியது.

    இதைத் தொடர்ந்து, அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.

    இதற்கிடையே, கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த கலவரத்தில் தொடர்புடைய 192 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் மீது கொலை முயற்சியில் ஈடுபடுதல், போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு கலவரக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டதுடன், அந்த பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    மாணவி இறப்பு விவகாரத்தில் என்ன நடந்தது என பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கள்ளக்குறிச்சியில் கலவரம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில் கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் ஆய்வு செய்தார். கள்ளக்குறுச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும், போராட்டம் நடைபெறும் இடத்தில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பொருட்களை சூறையாடினர்.
    • போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சில் காவல்துறை அதிகாரி உள்பட 20 பேர் காயம்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒருதனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பை கண்டித்து நடைபெற்று வந்த போராட்டம் இன்று கலவரமாக மாறியது.

    போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.பாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். பின்னர் பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள்.

    பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பள்ளி பஸ்களுக்கு தீ வைத்தனர். பஸ்கள் கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி புகைமண்டலமாக மாறியது.

    இதையடுத்து அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை அவர்கள் கலைத்தனர். பள்ளி வளாகம் பகுதி தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார் பாளையம்  உள்ளிட்ட பகுதிகளில் வரும் 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    • மறியல் நடந்த சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • திடீரென்று பள்ளிக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்தனர்.

    சின்னசேலம்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தைசேர்ந்தவர் ராமலிங்கம் . இவரது மகள் ஸ்ரீமதி (வயது 17).

    இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒருதனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த 13-ந் தேதி அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்துகுதித்து தற்கொலைசெய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் மாணவியின் உடலை வாங்கவும் மறுத்து விட்டனர்.


    நேற்று மாணவியின் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், விடுதலை சிறுத்தை கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல கூறினார்கள். அதனை அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் மாணவி படித்த சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி முன்பு இன்று காலை மாணவியின் உறவினர்கள் மற்றும் மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

    அவர்கள் மாணவி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினார்கள். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மறியல் நடந்த சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னசேலம் போலீசார் அங்கு விரைந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


    திடீரென்று பள்ளிக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசார் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சரமாரியாக கற்களை வீசினார்கள். உடனே போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர்.

    ஆனால் போலீசார் குறைவாக இருந்ததால் நூற்றுக்கணக்கில் திரண்டு இருந்த போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து கற்களை வீசிய படி போலீசாரை தாக்கினார்கள். இந்த கல் வீச்சில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.பாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். இதனால் போலீசார் பள்ளிக்குள் சென்றனர்.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேனை கவிழ்க்க முயற்சித்தனர். அதன் பின் பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள்.

    பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர். மேலும் போலீஸ் தடுப்புகளுக்கும் தீ வைத்தனர்.

    பள்ளிக்குள் சென்று சூறையாடிய போராட்டக்காரர்கள் அங்கிருந்த பஸ்களின் கண்ணாடிகளை உடைத்தனர். டிராக்டரை கொண்டு பஸ்களை இடித்து சேதப்படுத்தினர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பஸ்சை இயக்கி மற்ற பஸ்கள் மீது மோதவைத்து கவிழ்த்தனர்.

    பின்னர் பள்ளி பஸ்களுக்கு தீ வைத்தனர். பஸ்கள் கொழுந்து விட்டு எரிந்ததால் பள்ளிக்குள் இருந்து கரும் புகை வெளியேறியது. அதே போல் சாலையில் இருந்த போலீஸ் வாகனத்திற்கும் தீ வைத்தனர். இதனால் அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது.


    நேரம் செல்ல செல்ல வன்முறை தீவிரம் அடைந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

    வன்முறையை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். ஆனாலும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

    பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் தொடர்ந்து சூறையாடினார்கள். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். அவர்களை போலீசார் வெளியே விரட்டி அடிக்கும் முயற்சி பலிக்கவில்லை.

    போலீசாரை விட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதிலும் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    போராட்டக்காரர்கள் தொடர்ந்து பள்ளி முன்பும் உள்ளேயும் வன்முறையில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது.

    • பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பொருட்களை அடித்து நொறுக்கி, பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.
    • குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

    சென்னை:

    சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு, மாணவர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இன்று நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதுடன், பள்ளி வளாகத்திற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்தனர். கலவரம் கட்டுக்கடங்காமல் போனதால், தீயணைப்பு வாகனங்கள்கூட உள்ளே வர முடியாத நிலை உள்ளது. போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

    உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கலவரம் கட்டுக்கடங்காமல் போனதால், தீயணைப்பு வாகனங்கள்கூட உள்ளே வர முடியாத நிலை உள்ளது.
    • போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு, மாணவர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இன்று நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதுடன், பள்ளி வளாகத்திற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்தனர். போலீசார் பாதுகாப்பு அளித்தால்தான் உள்ளே சென்று தீயை அணைக்க முடியும். ஆனால், கலவரம் கட்டுக்கடங்காமல் போனதால், தீயணைப்பு வாகனங்கள்கூட உள்ளே வர முடியாத நிலை உள்ளது.

    இதற்கிடையே, போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது:-

    மாணவி எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. மாணவி இறந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக மரணம் என்றே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி மீது தாக்குதல் நடத்த முயன்றதை அடுத்து காவலர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். எனினும், போலீசார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    வன்முறை கண்டிக்கத்தக்கது. கவலரம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ காட்சிகளை வைத்து கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும். புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

    மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். பொருட்களை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    அப்பகுதியில் இருப்பவர்கள் அமைதி காக்க வேண்டும். அமைதியாக போராடுவதாக கூறினார்கள். ஆனால், அவர்கள் திட்டமிட்டு வந்ததுபோல் தெரிகிறது. சமூக வலைத்தளங்களில் யாரும் தவறான தகவல்களை பரப்பவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். 

    • மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் சந்தேகம் எழுப்பப்படுகிறது.
    • நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதியின் மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், பிரேத பரிசேததனை அறிக்கையில், மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுவருகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. போரீசார் மீது கற்களை வீசி தாக்கிய போராட்டக்காரர்கள், பேரிகார்டுகளை உடைத்துக்கொண்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். போலீஸ் வாகனம் தீவைக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

    நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எனினும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதுபோல் சென்று, மீண்டும் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்துகின்றனர். கல்வீச்சு சம்பவத்தில் காவல்துறை தரப்பில் பலர் காயமடைந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. 

    • இறந்துபோன மாணவியின் பிரேத பரிசேதனை அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெற்றோர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பேராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர் அமைப்பினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பொதுமக்களும் களமிறங்கினர். இதனால் சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

     


    ஒருகட்டத்தில் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் நுழைய முயன்றனர். அவர்களை தடுக்க போலீசார் முயற்சி செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பேரிகார்டுகளை உடைத்துக்கொண்டு மாணவர்கள், பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்றனர். கற்களை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் போலீசார் பலர் காயமடைந்தனர். போலீஸ் உயர் அதிகாரி ஒருவரும் காயமடைந்தார். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். வாகனங்களை அடித்து நொறுக்கினர்.




     ஒரு கட்டத்தில் நுழைவு வாயிலை உடைத்துக்கொண்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் போலீசாரும் கற்களை வீசி போராட்டக்காரர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், கலவரத்தை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    • குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்.
    • மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தாயார் பேட்டி.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (16), கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இறந்த மாணவியின் உடல் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

    மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகள், தடயவியல் துறை ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் தமது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், கற்பழித்து கொலை செய்யப் பட்டு இருக்கலாம் அல்லது நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் மாணவியின் ஸ்ரீமதியின் தாயார் குற்றம் சாட்டி உள்ளார்.

    தனியார் பள்ளி மாணவி மர்மமான உயிரிழப்புக்கு நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

    முன்னதாக மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேரணியாக செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போர் களம் போல்  காணப்பட்டது.

    • கள்ளக்குறிச்சியில் 4 சிறுவர்கள் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
    • கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் சென்றபோது அங்கு நின்ற 16 மற்றும் 17 வயதுடைய 4 சிறுவர்கள் பஸ்ஸை நிறுத்துமாறு கை காட்டி உள்ளனர். ஆனால் பஸ் நிற்காமல் சென்றது இதில் ஆத்திரமடைந்த சிறுவர்கள் பஸ்சை துரத்திச் சென்று வழிமறித்து டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆபாசமாக திட்டி, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை பஸ் பக்கவாட்டில் அடித்தனர். இதில் பீர் பாட்டில் உடைந்து சிதறியது. இதில் பஸ்சில் பயணம் செய்த கோயம்புத்தூர் மாவட்டம், செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சீனிவாசன் (வயது 38) என்பவரின் கண்ணில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்துனர் மற்றும் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அந்த 4 நபர்களையும் மடக்கி பிடித்து ஆட்டோவில் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த சீனிவாசன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். 4 சிறுவர்கள் பஸ்சை வழிமறித்து பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கள்ளக்குறிச்சி அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளாம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 65). விவசாயி. இவரது மனைவி பூபதி (60). இவர்கள் அங்குள்ள காட்டுக்கொட்டகையில் வசித்து வந்தனர்.

    நேற்று மாலை பூபதி வயல்வெளிக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது. மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை பூபதி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×