search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி- தேனி மாவட்டத்தில் இன்று பல தனியார் பள்ளிகள் அடைப்பு
    X
    தனியார் பள்ளி அடைக்கப்பட்டு இருந்த காட்சி

    கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி- தேனி மாவட்டத்தில் இன்று பல தனியார் பள்ளிகள் அடைப்பு

    • தமிழகம் முழுவதும் இன்று தனியார் பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.
    • பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கல்வித்துறை உத்தரவிட்டது.

    தேனி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று அந்த பள்ளி முன்பு போராட்டம் நடைபெற்றது.

    இதில் பள்ளியில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டு அங்கிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று தனியார் பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கல்வித்துறை உத்தரவிட்டது.

    தேனி மாவட்டத்தில் அரசு உத்தரவையும் மீறி பெரும்பாலான தனியார் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தேனி, ஆண்டிப்பட்டி, வருசநாடு, கண்டமனூர், உத்தமபாளையம், சின்னமனூர், பெரியகுளம், போடி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் அடைக்கப்பட்டன.

    இது தொடர்பாக அந்தந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செல்போன் மூலம் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் பல மாணவர்கள் பள்ளிக்கு வந்து விடுமுறை என தெரிந்து மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. விடுமுறை அறிவிப்பு வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அது போன்ற எந்தவித அறிவிப்பும் வராததால் மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர்.

    இதே போல தனியார் நர்சரி பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கின. நேற்று நீட் தேர்வு நடத்தப்பட்ட தனியார் பள்ளியில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது எனவும் நீட் தேர்வுக்காக வகுப்பறைகள் மாற்றப்பட்டதால் இந்த விடுமுறை என்றும், நாளை வழக்கம் போல் பள்ளி இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×