search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kadambur raju"

    கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று அனுப்பி வைத்தார். #ADMK #kadamburRaju
    மதுரை:

    தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை உலுக்கி எடுத்த கஜா புயல் பாதிப்புக்கு புதுக்கோட்டை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    வீடு மற்றும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்களுக்கு உதவும் வகையில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் பணியாற்றி வருகிறது.

    முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக உணவு உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர்ராஜூ ரூ. 40 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை சேகரித்து 5 வாகனங்களில் இன்று தஞ்சை மற்றும் திருவாருர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, திரவியம், எம்.எஸ்.பாண்டியன், நிர்வாகிகள் சோலைராஜா, பரவை ராஜா, முத்துராமலிங்கம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பிரிட்டோ, தமிழ்செல்வன், அரவிந்தன், ஜெயரீகன், கே.வி.கே. கண்ணன், பார்த்திபன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK #KadamburRaju
    கருணாநிதி உடல் அடக்கம் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். #ministerkadamburraju

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் காவலனாக, தமிழினத்தின் தலைவராக, தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக, சுயமரியாதைக்காக தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்திட்ட மாபெரும் தலைவர் கலைஞர்.

    தனது 95-வது வயதில் மரணமடைந்த தலைவர் கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கி நாங்கள் பிச்சை போட்டோம் என அநாகரீகமாக, அவதூறாக பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

    தனது 14 வயதில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியவர். அன்று முதல் இறுதி மூச்சுவரை தமிழ் சமுதாயத்திற்காக வாழ்ந்தவர் தலைவர் கலைஞர். தனது 45- வது வயதில் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்றவர். 13 முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றவர். 5 முறை தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்று நவீன தமிழகத்தின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியவர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, சிறுபாண்மை மக்களின் பாதுகாப்பிற்காக, சமூகநீதியை உறுதிப்படுத்துவதற்காக சமரசமில்லாமல் போராடி வெற்றி கண்டவர். நம் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்தை பெற்று தந்தவர்.

    மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி என்ற மகத்தான கொள்கையை உருவாக்கியவர். மத்தியில் கூட்டணி ஆட்சியை உருவாக்கிய தளகர்த்தர்களில் முதன்மையானவர். கூட்டணி ஆட்சியில் ஜனாதிபதிகளை, பிரதமர்களை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.

    தேசம் முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட மாபெரும் தலைவருக்கு மெரினாவில் உள்ள அண்ணா சமாதியின் அருகில் அடக்கம் செய்ய இடம் தர மறுத்தது அ.தி.மு.க அரசு. சென்னை உயர் நீதிமன்றம் கலைஞரின் சிறப்பை அங்கீகரித்து மெரினாவில் இடம் ஒதிக்கித்தர உத்தரவை பிறப்பித்தது.

    உண்மை இவ்வாறிருக்க, அரசியலும், வரலாறும் தெரியாமல் அமைச்சர் என்ற அந்தஸ்தை மறந்து அருகதையற்ற முறையில் பேசுவதை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ministerkadamburraju

    அ.தி.மு.க. மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி., அ.தி.மு.க தொண்டர்களோடு எப்போதும் நாங்கள் இருப்போம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். #ministerkadamburraju

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் சிவன்கோவில் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட இணை செயலாளர் கவுரி, துணை செயலாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. இதுவரை பெற்ற வெற்றிகள் அனைத்தும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் கிடைத்தது. இனிமேல் பெறும் வெற்றிதான் நாம் பெறும் வெற்றி. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் நமக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்தனர். அ.தி.மு.க. தேர்தலில் தோற்றாலும், நாம்தான் தோற்றோம். மக்கள் தோற்கடிக்கவில்லை என்று கூறுபவர் ஜெயலலிதா.

    மக்களை ஒருபோதும் வசைபாடாதவர். தற்போது 1½ ஆண்டுகளாக ஜெயலலிதா வழியில் ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க.வுக்கு செக் வைத்து உள்ளோம். தற்போது அழகிரியால், தி.மு.க.வுக்கு குடைச்சல் வந்து விட்டது. தி.மு.க.வுக்கு இன்று முதல் சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற ஒரு அணி உள்ளது. அ.தி.மு.க. கரை வேட்டியை கட்டிக் கொண்டு அம்மா ஆட்சி இருக்கக்கூடாது என்கிறார்கள். அவர்களை ஆண்டவன் பார்த்துக் கொள்வார். ஜெயலலிதா ஆன்மா, துரோகிகளை தண்டிக்காமல் விடாது. பலபிரச்சினைகளை தாண்டி ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மாவும், இறைவன் அருளும் உள்ளது.

    அ.தி.மு.க. மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. ஆகையால் நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் வாக்காளர்களை சேர்க்க வேண்டும். தேர்தலின் போது பிரசாரங்களை எப்படி செய்ய வேண்டும் என்று விளக்குவோம். தொண்டர்களுக்கு தேவையானதை செய்வோம். தொண்டர்களோடு எப்போதும் நாங்கள் இருப்போம்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

    கூட்டத்தில் மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், ஒன்றிய விவசாய அணி தலைவர் வி.பி.ஆர்.சுரேஷ், தொழில்சங்க செயலாளர் டாக் ராஜா, பகுதி செயலாளர் முருகன், தலைமை கழக பேச்சாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ministerkadamburraju

    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றிபெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #kadamburraju #admk

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் வங்கி சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி வங்கி சேவையை தொடங்கி வைத்தார். விழாவில் கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் அச்சையா, நே‌ஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் சொக்கலிங்கம், தபால் துறை உதவி கண்காணிப்பாளர்கள் முருகன், வசந்தி சிந்துதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:

    இந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்குள், மாமன்னர் பூலித்தேவன் நினைவு மாளிகையை புதுப்பிப்பதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவில் நடைபெற இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் அரசியலில் அனுபவமே இல்லாமல் பேசி வருகிறார்.

    இதுவரை எந்த துறையிலாவது லஞ்சம், ஊழல் நடந்தது என்று அவரால் நிரூபிக்க முடிந்ததா? அவர் அரசியலுக்கு வர தயாராக இருந்தால், எந்த குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் கூற வேண்டும். ஆதாரம் இல்லாமல் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் இதுவரை நடந்த 11 தேர்தல்களில் 9 முறை அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எனவே அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறுவது உறுதி. திருவாரூர் தொகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டதால் அக்கட்சி வெற்றி பெற முடிந்தது. இனி அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #kadamburraju #admk

    சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு பொதுமக்களின் கருத்தினை கேட்டு, அவர்களின் ஒப்புதலை பெற்றுதான் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #chennaisalemgreenway

    கோவில்பட்டி:

    தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தென்மண்டல விவசாயிகள் மாநாடு கோவில்பட்டி மந்தித்தோப்பில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

    மாநாட்டில் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உற்பத்தி செலவில் இருந்து 50 சதவீதம் கூடுதல் லாபம் பெற வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையின்படி இத்திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும், விவசாயிகளின் நகைக்கடன் உள்பட அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    சத்துணவு திட்டத்திற்கு முட்டை வழங்கிய நிறுவனத்தில் சோதனை தான் நடைபெற்றுள்ளது. குற்றம் நிருபிக்கப்பட்டதாக அர்த்தமில்லை, இந்த பிரச்சினையின் காரணமாக தற்போது நடைபெற்ற டெண்டரில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை, என்ன நடைமுறை பின்பற்றபடுமோ, அது பின்னபற்றபடுவதாக அந்த துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு 90 சதவீத மக்களுக்கு நிவாரணம் மற்றும் நிலம் எடுப்பு முறையாக நடைபெற்றுள்ளது. மக்களின் கருத்தினை கேட்டு, அவர்களின் ஒப்புதலை பெற்றுதான் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தி.மு.க.வும் இந்த சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, நிலஎடுப்பு முறையாக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அது முறையாக எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #chennaisalemgreenway

    ×