search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery theft"

    வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மங்களமேடு:

    மங்களமேட்டையை அடுத்துள்ள சின்னாறு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 32). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இவரும், இவரது குடும்பத்தினரும் நேற்று முன்தினம் மதியம் துறையூரில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்கநிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை கோவிந்தராஜ் வீட்டின் அருகே உள்ளவர்கள் கோவிந்தராஜின் வீட்டை பார்த்தபோது அதன் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    மேலும் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டனர். இதுகுறித்து அவர்கள், கோவிந்தராஜிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்த நிலையில், பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் இதுகுறித்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    கோவில்களில் நடைபெறும் காதுகுத்து, திருமண நிகழ்ச்சிகளில் நகை திருடும் பெண் வடபழனியில் சிக்கினார்.

    சென்னை:

    வடபழனி முருகன் கோவிலில் நடைபெறும் காதுகுத்து நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைக்கு போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகை பையுடன் காணாமல் போனது.

    இதுபற்றி வடபழனி உதவி கமி‌ஷனர் ஆரோக்ய பிரகாசம், இன்ஸ்பெக்டர் பாலுச்சாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். கோவிலில் உள்ள 2 கேமராக்களை ஆய்வு செய்த போது பட்டுச்சேலை உடுத்தி நகைகளை அணிந்தபடி சுற்றித்திரிந்த பெண் ஒருவர் சிக்கினார். அவர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    அந்த பெண்ணை பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அவர் மீண்டும் கைவரிசை காட்டுவதற்காக கோவிலுக்கு வருவார் என்று காத்திருந்தனர். அதன்படி மீண்டும் கோவிலுக்கு வந்த பெண்ணை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் விஜயசாந்தி, கடலூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    விஜயசாந்தியை கைது செய்த போலீசார் 4 பவுன் நகையை மீட்டனர். இவர் 2006-ம் ஆண்டில் இருந்து இதுபோன்று கோவில்களில் திருமண நிகழ்ச்சியில் புகுந்து நகை திருடி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது எந்தெந்த போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூரில் கடை உரிமையாளர் வீட்டில் நகை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூரில் கடை உரிமையாளர் வீட்டில் நகை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    திருப்பூர் கே.பி.என்.காலனியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 39). இவர் தனது வீட்டின் மாடியில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவருடைய கடையில் திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த முகமது உசைன்(38) என்பவர், வெளியே சென்று பணம் வசூலிக்கும் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 7-ந் தேதி சந்தானத்தின் மனைவி வீட்டின் முன்புறம் துணி துவைக்கும்போது தனது 3 பவுன் தங்க வளையல்களை கழற்றி வைத்து துவைத்துள்ளார்.

    அந்த நேரம் முகமது உசைன் அங்கு வந்து விட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு நகையை காணவில்லை. இதுகுறித்து சந்தானம் முகமது உசைனிடம் கேட்டபோது அவர், தான் நகையை எடுக்கவில்லை என்று மறுத்தார். பின்னர் மறுநாள் முதல் அவர் வேலைக்கு வரவில்லை. இதுகுறித்து சந்தானம் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் முகமது உசைன் திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் நின்றபோது போலீசார் அவரை பிடித்தனர். விசாரணையில் அவர் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் திருடிய நகையை விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 3 பவுன் வளையல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது உசைனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 
    கோவை பீளமேட்டில் அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 33 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    கோவை:

    கோவை காளப்பட்டி ரோடு, பி.எஸ்.ஜி. லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராம மூர்த்தி (வயது 58). இவர் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு மனைவி, மகளுடன் வெளியே சென்றார்.

    மாலையில் வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 33 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    ராமமூர்த்தி குடும்பத்துடன் வெளியே செல்வதை கண்காணித்து மர்மநபர்கள் வீடு புகுந்து கைவரிசை காட்டி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என பட்டியல் சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    காரிமங்கலம், அரூரில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மல்லிக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 60). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு நேற்று வீட்டுக்கு வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதேபோல் பொம்மஅள்ளி எம்.ஜி. ஆர். நகர் மேட்டுப் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (32). பெட்டிக்கடைக்காரர். நேற்று முன்தினம் மர்ம ஆசாமிகள் இவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.28,500 திருடி சென்றுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் 2 பேரும் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    அரூர் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர் திரு.வி.க. நகரில் ஐஸ்கிரீம் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை கண்ணன், அவருடைய மனைவி ஜீவா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டனர். மதியம் சாப்பிடுவதற்காக அவர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 6 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கண்ணன் அரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
    நாமக்கல்லில் ஆவின் பாலக விற்பனையாளரின் வீட்டில் நகைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல்-திருச்செங்கோடு சாலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 7-ந் தேதி கணேசன் பால் விற்பனை பணத்தை வங்கியில் செலுத்த சென்றிருந்தார். அவரது மனைவி மல்லிகா ரேஷன் கடைக்கு சென்று இருந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போனது.

    இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் தாரமங்கலத்தை சேர்ந்த மாதேஸ் மகன் ரமேஷ் (25) என்பவர் கணேசனின் வீட்டில் 10 பவுன் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று ரமேஷை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் திருட்டுக்கு அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரமேஷ் மீது தாரமங்கலம், நாமக்கல் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
    குடவாசல் அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 5½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    குடவாசல்:

    குடவாசல் அருகே உள்ள மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மனைவி மஞ்சுபாரதி (வயது 33). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஸ்கூட்டரில் வடகண்டம் பாலம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், மஞ்சுபாரதி கழுத்தில் கிடந்த 5½ பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுபாரதி, திருடன், திருடன் என்று கத்தினார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து மஞ்சுபாரதி குடவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
    தக்கலை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5¼ பவுன் தாலி செயினை திருடிய மர்ம நபர் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    தக்கலையை அடுத்த வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண பிள்ளை. இவரது மனைவி ராதா (வயது 63).

    ராதா தக்கலை செல்வதற்காக பஸ் ஏற வில்லுக்குறி பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். அங்கிருந்து மார்த்தாண்டம் செல்லும் பஸ்சில் ஏறினார்.

    தக்கலை பஸ் நிலையம் வந்ததும், பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது ராதா அணிந்திருந்த 5¼ பவுன் தாலி செயினை காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த ராதா, இது பற்றி கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறி அழுதார். அவர்கள் சம்பவம் பற்றி தக்கலை போலீசில் புகார் செய்தனர். அதில் ஓடும் பஸ்சில் யாரோ மர்ம நபர்கள் ராதாவின் நகையை திருடிவிட்டதாகவும், அவர்களை கண்டுபிடித்து நகையை மீட்டு தரவேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.

    இதுபோல செங்கோடி பகுதியை சேர்ந்த கங்காதரன் தம்பியின் மனைவி சுலோச்சனாம்மா (68) என்பவர் மண்டைக்காடு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

    அங்கு தரிசனம் முடிந்து திரும்பிய போது சுலோச்சனாம்மா அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    அதியமான்கோட்டை அருகே ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    நல்லம்பள்ளி:

    தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டை சத்யா நகரை சேர்ந்தவர் தனபால் (வயது 34). இவர் தொப்பூர் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (30). இவர் எலுமிச்சனஅள்ளி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டை பூட்டி விட்டு பள்ளிகளுக்கு சென்று விட்டனர். மாலை தனபால் வீட்டுக்கு வந்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்த போது அதில் வைத்திருந்த 5 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் மொட்டை மாடி வழியாக உள்ளே சென்று நகையை திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
    பெரம்பலூரில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அண்ணாமலையார் தெருவை சேர்ந்தவர் வரதராஜ். இவருக்கு விக்டோரியா மகாராணி (வயது 40) என்கிற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றிய வரதராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். விக்டோரியா மகாராணி பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    கணவர் இறந்து விட்டதால் தனது மகன்களுடன் அண்ணாமலையார் தெருவில் உள்ள தனக்கு சொந்தமான 2 தளங்களை கொண்ட வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி விக்டோரியா மகாராணி வீட்டை பூட்டிவிட்டு பள்ளியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு தனது மகன்களையும் அழைத்து கொண்டு சென்று விட்டார். பின்னர் சுற்றுலா முடிந்து நேற்று அதிகாலை தான் அவர்கள் திரும்பினர்.

    அதிகாலை நேரம் என்பதால் விக்டோரியா மகாராணி மகன்களுடன் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கினார். இதையடுத்து நேற்று காலையில் அவர் தனது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு விக்டோரியா மகாராணி அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறைகளின் கதவுகள் அனைத்தும் திறந்து கிடந்தது. மேலும் அறைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. ஒரு அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 4½ பவுன் நகை மற்றும் ரூ.23 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் விரல்ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் விரல் ரேகைகள் தெரியாமல் இருப்பதற்காக, அதனை தண்ணீர் ஊற்றி அழித்து விட்டு தப்பி சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அந்தப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருட்டு சம்பவம் நடந்த வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களும் சிதறி கிடந்தன. மேலும் குளிர்சாதன பெட்டியும் திறந்திருந்தும், அதில் வைக்கப்பட்டிருந்த கேக் ஆகியவை காணாமல் போயிருந்தது. கியாஸ் அடுப்பை பற்ற வைத்தற்கான அறிகுறிகளும் காணப்பட்டது. எண்ணெய் கீழே தரையில் கொட்டியிருந்தது.

    இதனால் மர்ம நபர்கள் நகை-பணத்தை திருடிவிட்டு வீட்டில் சமைத்து சாப்பிட்டு சென்றிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    இளையான்குடி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய்-மகளிடம் நகைகளை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (வயது 57). இவர்களது மகள் அனிதா (28). இவரது கணவரும், தந்தை கேசவனும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இதனால் அனிதா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு நிவேதா என்ற மகள் உள்ளாள்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு தமிழ்ச்செல்வி, தனது மகள், பேத்தியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை மற்றும் அனிதா அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்தனர். அப்போது கண்விழித்த 2 பேரும் நகையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடர்கள் என்று கூச்சல் போட்டனர். இதனால் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம ஆசாமிகள் நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.

    மர்ம ஆசாமிகள் நகைகளை பறித்ததில் தாயும், மகளும் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் பறித்த நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இளையான்குடி பகுதியில் சமீப காலமாகவே வழிப்பறி, நகை பறிப்பு, வீடுபுகுந்து திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

    எனவே திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
    திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 20 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கே.கே.நகர்:

    திருச்சி சுப்பிரமணியபுரம் ஹைவேஸ் காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் கிரிபெமன்தாஸ். இவர் சம்பவத்தன்று இரவு சாப்பிட்டு முடித்துவிட்டு வீட்டில் குடும்பத்துடன் தூங்கினார். பின்னர் மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறையில் வைத்து இருந்த அவருடைய தாயாரின் கைப்பை திருட்டு போய் இருந்தது. அந்த பையில் 20 பவுன் தங்க நகைகள் இருந்தன.

    உடனே இது குறித்து அவர் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து, வீட்டுக்குள் புகுந்து கைப்பையில் இருந்த 20 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். 
    ×