என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » jagapati babu
நீங்கள் தேடியது "Jagapati Babu"
சிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் விநியோக உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #Viswasam #AjithKumar
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன் சாதனைகளையும் படைத்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளுக்கான விநியோக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக படத்தின் கர்நாடக திரையரங்க உரிமையை ஸ்டுடியோ ஹாரிசான் நிறுவனம் கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
We are very proud to be associated with @SathyaJyothi_ for #Thala Ajith's #Viswasam directed by @directorsiva sir releasing this pongal! We have acquired the distribution Rights of #Viswasam for TT area , assuring a grand release!#SFFreleasesViswasamTTareapic.twitter.com/G9E1ca7A2X
— Sakthi Film Factory (@SF2_official) January 2, 2019
அஜித் இந்த படத்தில் `தூக்கு துரை' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ரஜினி நடித்துள்ள பேட்ட படமும் அதே தேதியில் வெளியாக இருப்பதால் இரு படங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ViswasamTrailer #Viswasam #ViswasamThiruvizha #RoaringViswasamTrailer #AjithKumar #Nayanthara
Viswasam Trailer Viswasam Ajith Kumar Siva Vivekh Dileep Subbarayan Robo Shankar Thambi Ramaiah Yogi Babu Ajith Thala Ajith Nayanthara D Imman Ravi Awana Jagapati Babu விஸ்வாசம் அஜித் சிவா நயன்தாரா டி.இமான் யோகி பாபு தம்பி ராமையா ரோபோ சங்கர் திலீப் சுப்புராயன் விவேக் ரவி அவானா ஜெகபதி பாபு விஸ்வாசம் டிரைலர்
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் டிரெண்டாவதுடன், சாதனைகளையும் படைத்து வருகிறது. #ViswasamTrailer #Viswasam
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலரை நம்மாழ்வார் மறைவையொட்டி படக்குழு நேற்று வெளியிட்டது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சில நிமிடங்களிலேயே விஸ்வாசம் படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களை ஆட்கொண்டது. தற்போது வரை யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. டிரைலரில் இடம்பெற்ற `பங்காளிங்களா அடிச்சு தூக்கலாமா', `என் வாழ்க்கைல நான் வில்லன்டா', `ஒத்தைக்கு ஒத்த வாடா' உள்ளிட்ட வசனங்களும், ஆக்ஷன் காட்சிகளும் பொங்கல் விருந்தாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஸ்வாசம் படத்தின் டிரைலரை தற்போது வரை 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் 10 லட்சம் `லைக்ஸ்' பெற்ற முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமை விஸ்வாசம் படத்திற்கு கிடைத்துள்ளது. தற்போது வரை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிரைலரை லைக் செய்துள்ளனர்.
#ThookkuDurai enters 1M likes for #RoaringViswasamTrailer trending #1 in @YouTube. A NEW TRAILER RECORD. Thank you for the earth shattering response 😊
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) December 30, 2018
⏩ https://t.co/XdoiDYZDt4pic.twitter.com/gLc5LKPy83
`பேட்ட' படத்தின் டிரைலர் 24 மணிநேரத்தில் 1 கோடி பார்வையாளர்களை பெற்றிருந்த நிலையில், `விஸ்வாசம்' டிரைலர் 9 மணிநேரத்திலே 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.
படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடித்துள்ள பேட்ட படமும் அதே தேதியில் வெளியாக இருப்பதால் இரு படங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ViswasamTrailer #Viswasam #ViswasamThiruvizha #RoaringViswasamTrailer #AjithKumar #Nayanthara
விஸ்வாசம் படத்தின் டிரைலர் பார்க்க:
Viswasam Trailer Viswasam Ajith Kumar Siva Vivekh Dileep Subbarayan Robo Shankar Thambi Ramaiah Yogi Babu Ajith Thala Ajith Nayanthara D Imman Ravi Awana Jagapati Babu விஸ்வாசம் அஜித் சிவா நயன்தாரா டி.இமான் யோகி பாபு தம்பி ராமையா ரோபோ சங்கர் திலீப் சுப்புராயன் விவேக் ரவி அவானா ஜெகபதி பாபு விஸ்வாசம் டிரைலர்
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X