search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL T20"

    • லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோதும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை எதிர்கொள்கிறது.

    சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூருவுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 6 புள்ளிகள் பெற்றுள்ளது. பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ரஹானே, ஷிவம் துபேவும், பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, தீக்ஷனா, பதிரானாவும் சென்னை அணிக்கு வலுசேர்க்கிறார்கள். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

    ஐதராபாத் அணி மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதல் 2 ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோவிடம் பணிந்தது. அடுத்த 2 ஆட்டங்களில் பஞ்சாப், கொல்கத்தா அணிகளை அதட்டியது. கடந்த லீக் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது.

    மொத்தத்தில் 4-வது வெற்றியை பெற சென்னை அணியும், வெற்றிப்பாதைக்கு திரும்ப ஐதராபாத் அணியும் வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13-ல் சென்னையும், 5-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    • கொல்கத்தா அணி 20 ஓவரில் வெறும் 127 ரன்களே எடுத்தது.
    • 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

    தலைநகர் டெல்லியில் இன்று இரவு நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நிதானமாக ஆடினார். அவர் 43 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். யாரும் நிலைத்து நிற்கவில்லை.

    கடைசி கட்டத்தில் ஆண்ட்ரு ரசல் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் வெறும் 127 ரன்களே எடுத்தது.

    இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக டேவிட் வார்னர் 57 ரன்களும், மனிஷ் பாண்டே 21 ரன்களும், ப்ரித்வி ஷா 13 ரன்களும், பிலிப் சால்ட் 5 ரன்களும், மிட்செல் மார்ஷ் 2 ரன்களும் எடுத்தனர்.

    அசார் படேல் 17 ரன்கள் மற்றும் லலித் யாதவ் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில், 19.2 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐபிஎல் டி20 தொடரில் தனது முதல் வெற்றியை பதித்தது.

    • ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை மும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது.
    • ஆப்பிள் நிறுவனத்தின் 2-வது நேரடி விற்பனை நிலையத்தை, டெல்லியில் இன்று டிம் குக் தொடங்கி வைத்தார்.

    உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை மும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் திறப்பு விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(சி.இ.ஓ) டிம் குக் பங்கேற்றார்.

    இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் 2-வது நேரடி விற்பனை நிலையத்தை, டெல்லியில் இன்று டிம் குக் தொடங்கி வைத்தார்.

    இதனிடையே இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிவரும் ஐபிஎல் ஆட்டத்தை காண குக், டெல்லி மைதானத்திற்கு வந்தார். பின்னர் அவர் ரசிகர்களுடன் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு களித்தார்.

    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
    • போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது மைதானத்தில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

    16வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வரும் 21ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளது.

    இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 18ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும், மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுண்டர்களிலும் நேரடியாக பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட் வீழ்த்தினார்.
    • 178 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

    ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சஹா 4 ரன்னில் வெளியேறினார்.

    சாய் சுதர்சன் 20 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்னிலும் அவுட்டாகினர். பொறுப்புடன் ஆடிய ஷுப்மன் கில் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அபினவ் மனோஹர் அதிரடியாக ஆடி 13 பந்தில் 3 சிக்சர் உள்பட 27 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 30 பந்தில் 46 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை சேர்த்தது. ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 178 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 32 பந்துகளின் அரை சதம் அடித்து 60 ரன்களின் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, ஷிம்ரன் ஹெட்மெயர் அரை சதம் அடித்து 56 ரன்களின் அவுட்டானார். தேவ்தத் படிக்கல் 26 ரன்களும், துருவ் 18 ரன்களும், ரவிச்சந்திரன் அஷ்வின் 10 ரன்களும், ரியான் பராக் 5 ரன்களும், யாஷவி ஜெய்ஸ்வால் ஒரு ரன்கள் எடுத்தனர்.

    குஜராத் அணி சார்பில், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா மற்றும் நூர் அகமது தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த ஆட்டத்தின் இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

    • லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது.
    • அதிகபட்சமாக சிகந்தர் ராசா அரை சதம் எடுத்து 57 ரன்களில் வெளியேறினார்.

    16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லக்னோவில் இன்று நடைபெற்ற 2வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

    கைல் மேயர்ஸ் 29 ரன்னில் அவுட்டானார். தீபக் ஹூடா 2 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்ட்யா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    ஸ்டாய்னிஸ் 15 ரன்னில் அவுட்டானார். கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 74 ரன்னில் அவுட்டானார்.

    பஞ்சாப் அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக சிகந்தர் ராசா அரை சதம் எடுத்து 57 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து, மேத்யூ ஷார்ட் 34 ரன்களும், ஹர்பீத் சிங் பாட்டியா 22 ரன்களும், சாம் குர்ரன் மற்றும் பஹர்பீத் பிரார் தலா6 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 4 ரன்களும் எடுத்தனர். ஷாருக்கான் 13 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் விளையாடினார். இறுதியாக களமிறங்கிய ரப்பாடா ரன்கள் எதுவும் எடுக்கவில்லை.

    இறுதியில் 19.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

    • போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு ஹாரி புரூக், தனது காதலி முன் சதம் அடித்தது குறித்து பேட்டியில் தெரிவித்தார்.
    • அனைவரும் எனது சதத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 228 ரன்கள் குவித்தது.

    229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில், இந்த போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐதராபாத் அணியை சேர்ந்த ப்ரூக் 55 பந்தில் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்.

    போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு ஹாரி புரூக், தனது காதலி முன் சதம் அடித்தது குறித்து பேட்டியில் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனது காதலி இங்கே இருக்கிறார். ஆனால் எனது குடும்பத்தினர் அனைவரும் ஓய்வுக்காக சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரும் எனது சதத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    • 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 205 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
    • அதிகபட்சமாக நிதிஷ் ராணா 41 பந்துகளில் 75 ரன்களை குவித்தார்.

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் 19-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 9 ரன்னிலும், ராகுல் திரிபாதி 9 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய மார்க்ரம், அதிரடியில் மிரட்டினார். அவர் 26 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட அரை சதமடித்து அவுட்டானார்.

    3-வது விக்கெட்டுக்கு மார்க்ரம், புரூக் ஜோடி 72 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் சர்மா 17 பந்தில் 32 ரன் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.

    அவர் 55 பந்துகளில் 100 ரன்களுடனும், கிளாசன் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை குவித்தது. இதையடுத்து, 229 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக நிதிஷ் ராணா 41 பந்துகளில் 75 ரன்களை குவித்தார். அடுத்ததாக, ரங்கு சிங் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினார். பின்னர், ஜகதீசன் 36 ரன்களும், ஷர்துல் தாகூர் 12 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 10 ரன்களும், ஆண்டிரே ரூச்சல் 3 ரன்களும் எடுத்தனர்.

    இறுதியில், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 205 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    இதன்மூலம், ஐதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது.

    • சென்னையில் வரும் 30ம் தேதி சிஎஸ்கே- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே போட்டி.
    • இணையதளத்தில் ரசிகர்கள் பதிவு செய்யலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவிப்பு.

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 18 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் முன்னிலையில் உள்ளன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்ற 2 போட்டிகளில் தோல்வியடைந்து 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், சென்னையில் வரும் 30ம் தேதி சிஎஸ்கே- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியை இலவசமாக காண குமரி முதல் சென்னை வரை மீண்டும் விசில் போடு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.

    குமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சியை சேர்ந்த 750 ரசிகர்களுக்கான அனைத்து செலவும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும், இதற்காக ஏப்ரல் 14ம் தேதி (நாளை) முதல் www.chennaisuperkings.com/wgistlepoduexpress/#/ என்ற இணையதளத்தில் ரசிகர்கள் பதிவு செய்யலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது.
    • 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

    16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    இந்தப் போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200வது போட்டியாகும். டாஸ் வென்ற சி.எஸ்.கே. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 10 ரன்னில் அவுட்டானார். ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த படிக்கல் அதிரடியாக ஆடினார். இதனால் ரன் வேகம் அதிகரித்தது.

    2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ரன்கள் சேர்த்த நிலையில், படிக்கல் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சஞ்சு சாம்சன் டக் அவுட்டானார். ஜடேஜா இரு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பட்லர் அரை சதமடித்தார். அவர் 52 ரன்னில் அவுட்டானார். அஸ்வின் 30 ரன்னில் வெளியேறினார். இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்துள்ளது.

    ஹெட்மயர் 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் சிங், தேஷ் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டும், மொயீன் அலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

    போட்டியின் இறுதியில் திவன் கன்வே அரை சதம் எடுத்தார். எம்.எஸ்.தோனி 32 ரன்களும், தொடர்ந்து ரகானே31 ரன்களும், ஷிவம் துபே மற்றும் ருத்துராஜ் தலா 8 ரன்களும், அலி 7 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும், ராயுடு ஒரு ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில் சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    • டெல்லி அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • மும்பை தரப்பில் பியுஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டார்ப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது லீக் ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.

    டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் டேவிட் வார்னர் நிதானமாக ரன்கள் சேர்த்தார்.

    மறுமுனையில் அதிரடியாக ஆட முற்பட்ட பிருத்வி ஷா 15 ரன்கள், மணீஷ் பாண்டே 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் யாஷ் துல் (2), ரோவன் பாவெல் (4), லலித் யாதவ் (2) என சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால் அணியின் ரன்ரேட் சரிந்தது. மறுமுனையில் வார்னர் அரை சதம் கடந்து ஆறுதல் அளித்தார்.

    வார்னருடன் இணைந்த அக்சர் பட்டேல், மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் குவித்தார். 22 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரை சதம் கடந்த அக்சர் பட்டேல் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 19வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அவரைத் தொடர்ந்து வார்னர் 51 ரன்னிலும், குல்தீப் யாதவ் ரன் எதுவும் எடுக்காமலும், அபிஷேக் பாரெல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அந்த ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகள் சரிந்தன. கடைசி ஓவரில் அன்ரிட்ஜ் நோர்ட்ஜே 5 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் டெல்லி அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    மும்பை தரப்பில் பியுஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டார்ப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரிலே மியர்டித் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.

    தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் , ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் இனைந்து சிறப்பாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய இவர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 71 ஆக இருந்த போது இஷான் கிஷன் 31 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த திலக் வர்மா அதிரடி காட்டினார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். தொடர்ந்து திலக் வர்மா 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். தொடர்ந்து ரோகித் சர்மா 65 ரன்களில் வெளியேறினார். கடைசி 3 ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது.

    அப்போது டிம் டேவிட் , கேமரூன் கிரீன் இருவரும் பவுண்டரி , சிக்ஸர் பறக்க விட்டனர். கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி அணியின் நோர்ஜே வீசிய அந்த ஓவரில் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து மும்பை அணி முதல் வெற்றி பதிவு செய்தது.

    இந்த ஆட்டத்தின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.

    • சென்னையில் வருகிற 12ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நடக்கிறது.
    • ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது.

    ஐபிஎல் தொடர் வருகிற 31ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

    இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் கடந்த 3ம் தேதி நடந்த லக்னோவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏறக்குறைய 35 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளித்தனர்.

    அடுத்ததாக சென்னையில் வருகிற 12ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (இரவு 7.30 மணி) நடக்கிறது.

    இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி,டி, இ கீழ்தளம்) டிக்கெட் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 விலைக்கான டிக்கெட்டுகள் கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.

    ரூ,3,000 விலைக்குரிய டிக்கெட் (டி, இ மேல்தளம்) ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது. இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    டிக்கெட்டை வாங்குவதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானம் வெளியே குவிந்த ரசிகர்கள் இரவு முதலே காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    ×