search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indonesia"

    இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் இன்று இரவு ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. #IndonesiaEarthquake
    ஜெகார்த்தா:

    இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் உள்ள கடலின் ஆழத்தில் இன்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவான இந்த நிலநடுக்கத்தை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர்.

    இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. சேதம் குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகவில்லை. #IndonesiaEarthquake

    இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaFloods
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
     
    இந்த துயரச் சம்பவத்தில் சிக்கி 6 பேர் பலியானதாகவும், 10 பேர் காணாமல் போனதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது. இதற்கிடையே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக நேற்று அதிகாரிகள் கூறினர்.

    இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஒரே நாளில் 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 24 பேரை தேடி வருகின்றனர். சுமார் 3 ஆயிரத்து 400 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaFloods
    இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaFloods
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
     
    இந்த துயரச் சம்பவத்தில் சிக்கி 6 பேர் பலியானதாகவும், 10 பேர் காணாமல் போனதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2 குழந்தைகளும் அடங்குவார்கள்.

    மேலும், காணாமல் போன 24 பேரை தேடி வருகின்றனர். சுமார் 3 ஆயிரத்து 321 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 46 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. #IndonesiaFloods
    இந்தோனேசியாவின் சுலவேசிய மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளனர். #IndonesiaLandslide
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் இன்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த துயரச் சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவினால் கோவாஸ் மாவட்டம் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் அனைவரும் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள். சிலர் நிலச்சரிவால் புதைந்தும், சிலர் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றி முகாம்களுக்கு அழைத்து செல்லும் பணி நடைபெறுகிறது. நிலச்சரிவினால் இப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. #IndonesiaLandslide
    இந்தோனேசியாவின் சும்பா தீவில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. #Indonesia #Earthquake
    சும்பா:

    இந்தோனேசியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும் சும்பாவா கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ரிக்டர் அளவுகோலில் 6.0 என பதிவான இந்த நிலநடுக்கத்தை சும்பாவின் வெயின்கபு நகரத்தில் வசிக்கும் மக்கள் உணர்ந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த முதற்கட்ட தகவல்கள் ஏதும் இல்லை.



    முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலையில் சிக்கி 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Indonesia #Earthquake

    இந்தோனேசியாவில் உள்ள பாலியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இனி 10 டாலர் வரி விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. #Indonesia #Bali #tax
    மாஸ்கோ:

    பாலியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதையடுத்து அந்நாட்டின் அரசு புதிய வரியை விதித்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் உள்ளூர் பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

    பாலி தீவின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும்,  கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் இந்த வருவாய் பயன்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த வரியினை சுற்றுலா பயணிகள், விமான டிக்கெட்டுகளுடன் சேர்த்தோ அல்லது விமான நிலையத்திலோ செலுத்த நேரிடும் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

    மேலும் 2017 ஆம் ஆண்டில் சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து பிரதானமாக 5.7 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாலிக்கு வருகை தந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 6 மில்லியனை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. #Indonesia #Bali #tax

    இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் ஆற்றுக்குள் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். 2 பேர் மாயமாகி உள்ளனர். #Indonesia #carplunged
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் உள்ள மேற்கு சுமத்ரா மாகாணத்தில் மினிவேன் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லாங்க்காட் மாவட்டத்திற்குட்பட்ட ஸ்டங்கிட் கிராமத்தில், மரப்படகில் ஒரு மினிவேனை ஏற்றி வாம்பு நதியினை கடந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

    படகில் நிறுத்தப்பட்டிருந்த மினி வேனின் என்ஜினை ஆப் செய்யாமல் இருந்ததால், திடீரென படகில் இருந்து கிளம்பி, ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் வேனில் இருந்த 5 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் என்ன ஆனார்கள்? என தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். #Indonesia #carplunged







    இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு விபத்துக்குள்ளான விமானத்தின் குரல் பதிவுக் கருவி அடங்கிய 2-வது கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. #IndonesianLionAirJet #BlackBox
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி தலைநகர் ஜகார்த்தாவில் புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஜாவா கடலில் வீழ்ந்து நொறுங்கியது.

    இதில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை தேடும் பணியும் நடந்தது. விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளில் ஒன்று ஏற்கனவே மீட்கப்பட்டது.

    இந்த நிலையில் குரல் பதிவுக் கருவி அடங்கிய விமானத்தின் 2-வது கருப்பு பெட்டி கடலுக்கு அடியில் இருந்து நேற்று மீட்கப்பட்டது. 
    இந்தோனேசியா நாட்டின் டெர்னட்டே நகரின் அருகே இன்று அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு ஓட்டம் பிடித்தனர். #6magnitude #Indonesiaquake
    ஜகர்தா:

    பசிபிக் பெருங்கடல் பகுதியில் புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    டெர்னட்டே நகரில் வடக்கே-வடமேற்கே 175 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவானது.

    அப்பகுதியில் உள்ள பல வீடுகள் நிலநடுக்கத்தால் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் உயிர் பயத்தில் தங்களது வீடுகளைவிட்டு ஓட்டம் பிடித்தனர். வீதிகள் மற்றும் திறந்தவெளிகள் அவர்கள் சில நிமிடங்கள்வரை திரளாக கூடி நின்றனர்.

    இன்றையை நிலநடுக்கத்தால் உண்டான சேதம் மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.



    இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு இடையில் கடந்த மாதம் எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 400-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம். #6magnitude #Indonesiaquake 
    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். #Indonesialandslide
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் இடிபாடுகளில் சிக்கி புதையுண்டன. அந்த பகுதிகளில் மீட்புக்குழுவினர் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.



    நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். 20 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 63 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சுகபூமி மாவட்டம் சினாரேஸ்மி கிராமத்தில் மட்டும் 30 வீடுகள் நிலச்சரிவின்போது மண் மற்றும் பாறைகளால் சூழப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் சிக்கியுள்ளவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.  #Indonesialandslide

    இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளை தாக்கிய சுனாமி பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளது. #Indonesiatsunami #tsunamideathtoll
    ஜகர்தா:

    இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா தீவில்  உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை கடந்த 22-ம் தேதி இரவு வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து கரும்புகையும், நெருப்புக் குழம்பும் வெளியானது. இதனால், அப்பகுதி முழுவதும் அதிர்ந்து குலுங்கியதால் சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது.


     
    பின்னர் சிறிது நேரத்தில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து எழுந்த ராட்சத சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. சுமார் 65 அடி உயரத்தில் சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின.

    சாலைகள், ஓட்டல்களுக்குள் கடல்நீர் புகுந்ததால் பீதியடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
     
    சுனாமி தாக்குதலில் 43 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. சுனாமியின் வேகம் குறைந்து தண்ணீர் வடியத் தொடங்கியதும் மீட்பு பணியை தொடங்கியபோது ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டன. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
     
    இந்நிலையில், மீட்கப்பட்ட பிரேதங்கள் மற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று வெகுவாக உயர்ந்துள்ளது.

    நேற்றிரவு நிலவரப்படி 429 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 1500 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முகமையை சேர்ந்த அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

    மேலும், காணாமல்போனதாக கருதப்படும் 128 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

    சுனாமியால் வீடுகளை இழந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கியவாறு சோகத்துடன் நாட்களை நகர்த்தி வருகின்றனர். #Indonesiatsunami #tsunamideathtoll
    இந்தோனேசியாவை தாக்கிய சுனாமிக்கு சுமார் 300 பேர் பலியாகி உள்ள நிலையில், இசை நிகழ்ச்சியில் சுனாமி புகுந்து மக்களை அடித்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. #Tsunami #IndonesiaTsunami
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை நேற்று முன்தினம் இரவு வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது. பின்னர் சிறிது நேரத்தில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து எழுந்த ராட்சத சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    சுமார் சுமார் 65 அடி உயரத்தில் (20 மீட்டர்) சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. ஏராளமான மக்கள், அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். இன்று காலை நிலவரப்படி சுனாமிக்கு 281 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

    இந்நிலையில், இசை நிகழ்ச்சி ஒன்றில் சுனாமி அலை புகுந்து மக்களை அடித்துச் செல்லும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.



    டான்செங் லெசங்க் கடற்கரையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய டெண்ட் அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் இதில் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டுகளித்துக்கொண்டிருந்தனர். பாடகர் மிகுந்த உற்சாகத்துடன் பாடிக்கொண்டிருந்த சமயம், திடீரென இசை நிகழ்ச்சிக்குள் சுனாமி அலைகள் புகுந்தது. மேடையை உடைத்துக்கொண்டு தண்ணீர் புகுந்ததால் மேடை சரிந்து, அனைவரும் கீழே விழுகின்றனர். இசைக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகின்றனர்.

    இதில், இசைக்குழுவின் மேலாளர் மற்றும் ஒரு பாடகர் இறந்துவிட்டதாகவும், சிலரை காணவில்லை என்றும் அந்த இசைக்குழு சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு இசைக்குழு சார்பில் இரங்கலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tsunami #IndonesiaTsunami



    ×