search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 dead"

    இந்தோனேசியாவின் சுலவேசிய மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளனர். #IndonesiaLandslide
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் இன்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த துயரச் சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவினால் கோவாஸ் மாவட்டம் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் அனைவரும் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள். சிலர் நிலச்சரிவால் புதைந்தும், சிலர் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றி முகாம்களுக்கு அழைத்து செல்லும் பணி நடைபெறுகிறது. நிலச்சரிவினால் இப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. #IndonesiaLandslide
    ஆந்திர மாநிலம் கர்னூலில் இன்று அதிகாலை சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். #AndhraAccident
    திருமலை:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆளூரு மண்டலம் பெத்த ஓத்தூரு பகுதியை சேர்ந்தவர் ஷேக் காஜா (வயது 27). இவரது மனைவி பாத்திமா.

    இவர்களது குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக தங்களது உறவினர்கள் 21 பேருடன் 3 லோடு ஆட்டோவில் கர்னூல் அருகேயுள்ள எல்லாத்தி தர்காவுக்கு இன்று அதிகாலை சென்றனர்.

    கர்னூல் அருகே அவர்கள் சென்ற போது ஒரு ஆட்டோ திடீரென பழுதானது. ஆட்டோவை டிரைவர் சரி செய்து கொண்டிருந்தார். ஆட்டோவில் வந்தவர்கள் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியது.

    இதில் ஷேக் காஜா, பாத்திமா , உசேன் (வயது 23), ஆசிப் (7), அப்சரா (9), மெஜித் (7) ஆகிய 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 15 பேர் பலத்த படுகாயம் அடைந்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி நிற்காமல் வேகமாக சென்று விட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த கர்னூல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனர்.  #AndhraAccident
    ×