என் மலர்
செய்திகள்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு - 6 பேர் பலி, 10 பேர் மாயம்
இந்தோனேசியாவின் சுலவேசிய மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளனர். #IndonesiaLandslide
ஜகார்த்தா:
இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் இன்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த துயரச் சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவினால் கோவாஸ் மாவட்டம் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் அனைவரும் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள். சிலர் நிலச்சரிவால் புதைந்தும், சிலர் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றி முகாம்களுக்கு அழைத்து செல்லும் பணி நடைபெறுகிறது. நிலச்சரிவினால் இப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. #IndonesiaLandslide

Next Story