search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harmanpreet Kaur"

    இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டனாக உள்ள ஹர்மன்பிரீத் கவுர், போலி சான்றிதழை சமர்பித்ததாக கூறி அவருக்கு வழங்கப்பட்ட டிஎஸ்பி பதவியை பஞ்சாப் அரசு திரும்பபெற்றுள்ளது. #HarmanpreetKaur
    சண்டிகர்:

    இந்திய மகளிர் கிரிக்கெட் டி20 அணியின் கேப்டனாக உள்ள ஹர்மன்பிரீத் கவுர், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலக கோப்பை தொடரின்  நாக் அவுட் போட்டியில் 171  ரன்களை குவித்தார். மேலும் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம்  இந்திய அணியை இறுதி போட்டிக்கு வரை எடுத்துச்சென்றார்.

    இவரது செயலை பாராட்டும் விதமாக பஞ்சாப் மாநில முதல்வர் அமிர்ந்தர் சிங் இவருக்கு டிஎஸ்பி பதவியை வழங்குவதாக தெரிவித்தார், இதையெடுத்து கடந்த மார்ச் 1ஆம் தேதி இவர் பஞ்சாப் போலீசில் டிஎஸ்பியாக பொறுப்பெற்றுக்கொண்டார்.

    இந்நிலையில் இவரது கல்வி சான்றிதழ்களை சரிபார்க்கும் போது இவர் மீரட்டில் இருக்கும் சவுதாரி சரன் சிங் பல்கலைகழகத்தில் பயின்றதாக கூறி சமர்பிக்கபட்ட சான்றிதழ் பொய்யானவை என தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது பஞ்சாப் மாநில அரசு இவரை டிஎஸ்பி பதிவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்துள்ளனர். 

    பட்டப்படிப்பு போலி என கண்டறியப்பட்டுள்ளதால், அவரது 12-ம் வகுப்பு கல்வித்தகுதிக்கு ஏற்ப அவர் கான்ஸ்டபிள் நிலையில் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் இவர் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிவரும் காரணத்தால் இவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க போவதில்லை என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. ஒருவேளை போலியான சான்றிதழ்களை வழங்கிய காரணத்தால்  இவர் மீது வழக்கு தொடுத்தால் இவரது அர்ஜூனா விருதும் பறிபோகும் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
    இந்திய கிரிக்கெட்டில் மிகவும் மதிப்பு மிக்க விருதாக கருதப்படும் பாலி உம்ரிகர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. #ViratKohli #PollyUmrigarAward #HarmanpreetKaur #SmritiMandhana #BCCIAwards

    பெங்களூரு:

    பெங்களூருவில் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் ஆண்கள், பெண்கள் அணிகள் மற்றும் உள்ளூர் அணிக்காக விளையாடிய வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சர்வதேச போட்டி, உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்பட்டது. 



    2016-17, 2017-18 ஆகிய இரண்டு சீசன்களில் இந்திய ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் அணிகள் தொடர்ச்சியாக மிக சிறப்பாக விளையாடியுள்ளன. இந்திய ஆண்கள் அணி பல தொடர்களை வென்றது. அதே போல பெண்கள் கிரிக்கெட் அணி உலககோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 



    இந்த இரு சீசன்களில் மிக சிறப்பாக செயல்பட்ட வீரராக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல் பெண்கள் அணியில் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் சர்வதேச அளவில் சிறந்த வீராங்கனைகள் என்ற விருதை முதன்முறையாக பெற்றனர். 



    அதே போல் இந்திய கிரிக்கெட்டை மிக உயரத்திற்கு கொண்டு சென்ற ஜெக்மோகன் டால்மியா பெயரிட்டு 4 விருதுகள் வழங்கப்பட்டன. அதில் அதிக ரன் எடுத்த வீரர், விக்கெட் எடுத்த வீரர், U-16 விஜய் மெர்சண்ட் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஆண் மற்றும் பெண் வீரருக்கான விருது வழங்கப்பட்டன. 



    அதே போல் பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பாக 2016-17 சீசனில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் பிசிசிஐ சார்பாக வழங்கப்படும் விருதுக்கான பண பரிசுத் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 



    இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கலந்துகொண்டார். தினேஷ் கார்த்திக் தனது மனைவி தீபிகா பல்லிகல் உடன் கலந்துகொண்டார். மேலும் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி வீரர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். #ViratKohli #PollyUmrigarAward #HarmanpreetKaur #SmritiMandhana #BCCIAwards
    இந்திய கிரிக்கெட்டில் மிகவும் மதிப்பு மிக்க விருதாக கருதப்படும் பாலி உம்ரிகர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். #ViratKohli #PollyUmrigarAward #HarmanpreetKaur #SmritiMandhana

    பெங்களூரு:

    பிசிசிஐ சார்பிலான விருதுகள் வழங்கும் விழா வருகிற 12-ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்தியா அளவில் சிறந்த சிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாலி உம்ரிகர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 12-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் விழாவில் கோலிக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    2016-17, 2017-18 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இந்திய ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் அணிகள் தொடர்ச்சியாக மிக சிறப்பாக விளையாடியுள்ளன. இந்த காலகட்டத்தில் இந்திய ஆண்கள் அணி பல தொடர்களை வென்றது. அதே போல பெண்கள் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

    இந்த காலகட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்ட வீரராக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல் பெண்கள் அணியில் ஹர்மன்பிரீத் கவுர் (2016-17) மற்றும் ஸ்மிரிதி மந்தனா (2017-18) ஆகியோர் சர்வதேச அளவில் சிறந்த வீராங்கனைகள் என்ற விருதை முதன்முறையாக பெருகின்றனர். 



    அதே போல் இந்திய கிரிக்கெட்டை மிக உயரத்திற்கு கொண்டு சென்ற ஜெக்மோகன் டால்மியா பெயரிட்டு 4 விருதுகள் வழங்கப்பட உள்ளன. அதில் அதிக ரன் எடுத்த வீரர், அதிக விக்கெட் எடுத்த வீரர், U-16 விஜய் மெர்சண்ட் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஆண் மற்றும் பெண் வீரருக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    அதே போல் பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பாக 2016-17 சீசனில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் பிசிசிஐ சார்பாக வழங்கப்படும் விருதுக்கான பரிசுத்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  #ViratKohli #PollyUmrigarAward #HarmanpreetKaur #SmritiMandhana
    ஐபிஎல் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்பு நடைபெறும் பெண்கள் டி20 காட்சி கிரிக்கெட்டில் ஸ்மிரிதி, ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். #IPL2018
    ஐபிஎல் 11-வது சீசனின் லீக் ஆட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவடைந்த பின்னர், முதல் குவாலிபையர் மும்பை வான்கடே மைதானத்தில் வருகிற 22-ந்தேதி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கு முன்னதாக பெண்கள் டி20 காட்சி கிரிக்கெட் போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாகம் முன்வந்துள்ளது.

    இதில் விளையாடும் இரண்டு அணிகளின் கேப்டன்களாக ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து அணி கேப்டன் சுசி பேட்ஸ், சோபி டெவின், ஆஸ்திரேலியாவின் எலிசே பெர்ரி, அலிசா ஹீலி, மேகன் ஸ்கட், பெத் மூனி, இங்கிலாந்தின் டேனி வியாட், டேனியல் ஹசன் போன்றோர் இதில் கலந்து கொள்கிறார்கள்.


    ஸ்மிரிதி மந்தனா

    இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் பெண்கள் டி20 கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
    ×