search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake degree"

    இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டனாக உள்ள ஹர்மன்பிரீத் கவுர், போலி சான்றிதழை சமர்பித்ததாக கூறி அவருக்கு வழங்கப்பட்ட டிஎஸ்பி பதவியை பஞ்சாப் அரசு திரும்பபெற்றுள்ளது. #HarmanpreetKaur
    சண்டிகர்:

    இந்திய மகளிர் கிரிக்கெட் டி20 அணியின் கேப்டனாக உள்ள ஹர்மன்பிரீத் கவுர், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலக கோப்பை தொடரின்  நாக் அவுட் போட்டியில் 171  ரன்களை குவித்தார். மேலும் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம்  இந்திய அணியை இறுதி போட்டிக்கு வரை எடுத்துச்சென்றார்.

    இவரது செயலை பாராட்டும் விதமாக பஞ்சாப் மாநில முதல்வர் அமிர்ந்தர் சிங் இவருக்கு டிஎஸ்பி பதவியை வழங்குவதாக தெரிவித்தார், இதையெடுத்து கடந்த மார்ச் 1ஆம் தேதி இவர் பஞ்சாப் போலீசில் டிஎஸ்பியாக பொறுப்பெற்றுக்கொண்டார்.

    இந்நிலையில் இவரது கல்வி சான்றிதழ்களை சரிபார்க்கும் போது இவர் மீரட்டில் இருக்கும் சவுதாரி சரன் சிங் பல்கலைகழகத்தில் பயின்றதாக கூறி சமர்பிக்கபட்ட சான்றிதழ் பொய்யானவை என தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது பஞ்சாப் மாநில அரசு இவரை டிஎஸ்பி பதிவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்துள்ளனர். 

    பட்டப்படிப்பு போலி என கண்டறியப்பட்டுள்ளதால், அவரது 12-ம் வகுப்பு கல்வித்தகுதிக்கு ஏற்ப அவர் கான்ஸ்டபிள் நிலையில் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் இவர் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிவரும் காரணத்தால் இவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க போவதில்லை என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. ஒருவேளை போலியான சான்றிதழ்களை வழங்கிய காரணத்தால்  இவர் மீது வழக்கு தொடுத்தால் இவரது அர்ஜூனா விருதும் பறிபோகும் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
    ×