search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold seized"

    • சென்னையில் இருந்து நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ தங்கமும், சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரெயில், பஸ், கார்கள் மூலம் தங்கம் கடத்தப்படுகிறது.

    இதனை தடுக்க ஆந்திர மாநில சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தள்ளம்பள்ளி என்ற இடத்தில் நாயுடு பேட்டை போலீசார் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னையில் இருந்து நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.

    காரில் 5 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கெட்டுகள் இருந்தன. தங்கத்தை அவர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் காரில் இருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தங்கம் கடத்தி வந்த 4 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. காருடன் தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ தங்கமும், சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. யாருக்காக கடத்தி வரப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் ஆந்திராவில் சென்னையில் இருந்து கடத்தப்பட்ட 14.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கடந்த ஏப்ரல் மாதம் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு கடத்தி வந்த 7.3 கிலோ தங்க கட்டிகள் ஆந்திராவில் பிடிப்பட்டது.

    தொடர் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.58 லட்சம் ஆகும்.
    • தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிக்கிய பயணியிடம் தங்கம் யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு வளைகுடா நாடான மஸ்கட்டில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் அந்த பயணியின் உடமைகளை பரிசோதித்தனர்.

    அப்போது அவரிடம் ஒரு கிலோ 182 கிராம் எடையுள்ள தங்கம் இருந்தது தெரியவந்தது. அதனை அவர் கேப்ஸ்யூல் வடிவில் உடலுக்குள் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.58 லட்சம் ஆகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிக்கிய பயணியிடம் தங்கம் யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    • அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை கண்காணித்தனர்.
    • சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த மின்மோட்டாரை உடைத்து பார்த்தனர்.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை கண்காணித்தனர். அதில் வந்த சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரிடம் விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

    ஆனால் அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தபோதும் எதுவும் இல்லை. மீண்டும் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் மின்சார மோட்டார் இருந்தது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக அந்த மோட்டார் சற்று கனமாக இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த மின்மோட்டாரை உடைத்து பார்த்தனர். அதில் தங்கத்தை உருளை போல் மாற்றி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.95 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 796 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக அந்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பயணிகளிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கத்தை விமான சுங்கப் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • தங்கம் பறிமுதல் தொடர்பாக 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் கரீப்பூரில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ தங்கத்தை விமான சுங்கப் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சவுதி அரேபியா, ஜெட்டாவிலிருந்து வந்த மலப்புரத்தைச் சேர்ந்த ரஹ்மான் (43) என்பவரிடமிருந்து 1,107 கிராம் எடையுள்ள தங்கத்தை நான்கு கேப்சூல்களில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவத்தில், மலப்புரம் கருளையைச் சேர்ந்த முகமது உவைசில் (30) என்பவர் உடலில் நான்கு கேப்சூல்களில் தங்கம் வைத்து கடத்த முயன்றபோது காவலர்களிடம் சிக்கியுள்ளார்.

    மேலும், அபுதாபியில் இருந்து வந்த கோழிக்கோடு கூடரஞ்சியைச் சேர்ந்த உன்னிச்சல் மெத்தல் விஜித் (29) என்பவரிடம் இருந்து, 1,061 கிராம் எடையுள்ள தங்கம் கொண்ட நான்கு கேப்சூல்கள் உடல் மற்றும் காலுறைக்குள் மறைத்து வைக்து கடத்த முயன்றபோதுஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    நான்காவது வழக்கில் துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த மலப்புரத்தைச் சேர்ந்த ஒசங்குன்றம் ஷபிக் (27) என்பவர் தனது கைப்பையில் 9.01 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கைப்பற்றப்பட்ட தங்கத்தை பிரித்தெடுத்த பிறகு, பயணிகளைக் கைது செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் மட்டும் 1,317 கிலோ சிக்கியது.
    • தமிழ்நாட்டில் 2,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    புதுடெல்லி :

    அங்கத்தை அழகு செய்யும் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அசுர வேகத்தில் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

    இருப்பினும் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதன் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை.

    தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது ஒரு புறம் இருக்க தங்கம் இல்லாமல் வணிகம் இல்லை என்கிற நிலையிலேயே உலகப்பொருளாதாரம் உள்ளது.

    பண்டைய காலத்தில் இருந்தே இதே நிலைதான். தங்கம் நுகர்வில் உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் முன்னிலை வகிக்கிறது.

    கடந்த 2021-2022-ம் ஆண்டில் சுமார் ரூ.3.44 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதுமட்டுமின்றி கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்திய பெரும் பணக்காரர்கள் பலர் அதனை தங்கமாக மாற்ற ஆசைப்படுவதாலும் தங்கத்தின் மீதான நுகர்வு இந்தியாவில் அதிகமாக உள்ளது.

    இப்படி தங்கத்தின் தேவை இந்தியாவில் அதிகமாக இருப்பதால் துபாய், சிங்கப்பூர் போன்ற தங்கம் விலை குறைவாக உள்ள நாடுகளில் இருந்து கடத்தல்காரர்கள் தங்கத்தை இந்தியாவுக்கு கடத்தி வருகிறார்கள். இந்தியாவில் விலை அதிகமாக இருப்பதால் கடத்தல்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. இதற்கிடையே தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரிப்பது, கடத்தல்காரர்களை கடத்தலுக்கு மேலும் தூண்டுகிறது.

    இப்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் தங்கத்தை சுங்க அதிகாரிகள் அவ்வப்போது பறிமுதல் செய்து வருகிறார்கள். சில நேரங்களில் விமான நிலையத்தில் இருந்து தங்கம் வெளியேறினாலும் ரெயில் நிலையங்களில் பிடிபட்டு விடுகிறது.

    இதுபோன்ற கடத்தலில் கடந்த 3 ஆண்டுகளில் பிடிபட்ட தங்க விவரங்களை பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர், பத்ம விபூஷண் விருது பெற்ற நடனக்கலைஞர் சோனல் மான்சிங் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்டு இருந்தார்.

    இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    அதில், 'கடந்த 3 ஆண்டுகளில் (2020 முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை) நாடு முழுவதும் சுமார் 9 ஆயிரம் கிலோ, அதாவது 8 ஆயிரத்து 956 கிலோ 490 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நாட்டிலேயே அதிக அளவு கடத்தல் தங்கம் கடந்த 3 ஆண்டுகளில் கேரளாவில்தான் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு ஆயிரத்து 869 கிலோ 290 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் ஆயிரத்து 317 கிலோ 430 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இதனையடுத்து மராட்டிய மாநிலத்தில் ஆயிரத்து125 கிலோ 380 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

    வழக்குகளை பொறுத்தவரை நாடு முழுவதும் 9 ஆயிரத்து 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் 2,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    தங்கம் கடத்தலை தடுக்கும் பணிகளை புலனாய்வு அமைப்புகள் ரகசிய தகவல்களின் அடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன' என்று மத்திய மந்திரி தெரிவித்து உள்ளார்.

    • பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
    • விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

    அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.28 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 572 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த பெண்ணின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.40 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 815 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 பெண்களிடம் இருந்து ரூ.69 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 387 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பெண்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரூ.74 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் சிக்கியுள்ளது.
    • ரூ.63 லட்சம் இந்திய பணம் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி :

    இந்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டி.ஆர்.ஐ.) நேபாள எல்லை வழியாகச் நடந்த சூடான் நாட்டினரின் தங்கக்கடத்தலை முறியடித்துள்ளது. பாட்னா, புனே மற்றும் மும்பை ஆகிய இடங்களில் வெவ்வேறு வழித்தடங்களில் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். டி.ஆர்.ஐ. அதிகாரிகள் கடந்த 19-ந் தேதி இரவு மும்பைக்கு வரவிருந்த சூடான் நாட்டினரை பாட்னா ரெயில் நிலையத்தில் பிடித்தனர். அவர்களிடம் 40 பாக்கெட்டுகளில் 37.126 கிலோ எடையுள்ள தங்கம் மீட்கப்பட்டது.

    20-ந் தேதி ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு பஸ்சில் சென்ற 2 சூடான் நாட்டு பெண்களை புனேயில் பிடித்தனர். அவர்களிடமிருந்து 5.615 கிலோ கடத்தல் தங்கமும், அதே நாள் பாட்னாவிலிருந்து மும்பைக்கு பயணித்த 2 சூடான் நபர்கள் மும்பை ரெயில் நிலையத்தில் பிடிபட்டனர். அவர்களிடம் 40 பாக்கெட்டுகளில் 38.76 கிலோ தங்கம் மீட்கப்பட்டது

    மேலும் 20.2 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் ரூ.74 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், ரூ.63 லட்சம் இந்திய பணம் மும்பையில் பிடிபட்டது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதுபோன்ற நடவடிக்கையில் (கோல்டன் டான் ஆபரேஷன்) மொத்தம் ரூ.51 கோடி மதிப்புள்ள சுமார் 101.7 கிலோ தங்கம் மற்றும் ரூ.74 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், ரூ.63 லட்சம் இந்திய பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன. இதுவரை 7 சூடான் மற்றும் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சமீபத்தில் தமிழக கடலோரப்பகுதியில் கடலுக்குள் வீசப்பட்ட தங்கம் கடலோர காவல் துறையால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

    • சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
    • சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விமானத்தில் இருந்து வந்திறங்கிய பயணிகளை கண்காணித்தனர். அப்போது மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில் மிக்சி கிரைண்டர் இருந்ததால் அதை சந்தேகத்தின் பேரில் கழற்றி சோதனை செய்தனர். அப்போது கிரைண்டரில் தங்கத்தை வளைய வடிவத்தில் மாற்றி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டனர். இவரிடம் இருந்து ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 200 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். அதேபோல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் டிராலி சூட்கேசில் தங்கத்தை கம்பி போல் மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.19 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 383 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    துபாயில் இருந்து சென்னைக்கு வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் டிராலி சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்ட தங்க கம்பிகளையும் கண்டுபிடித்து, அவரிடமிருந்து ரூ.70 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 370 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.நேற்று ஒரே நாளில் மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் வந்த 3 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 2 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 953 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக 3 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

    • ரூ.40½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது.
    • 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டனர்.

    அவரிடம் இருந்து ரூ.74 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 460 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த 2 வாலிபர்களின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த கைப்பையில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் இருந்தன. அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள யூரோ, பவுண்டு, திர்காம்ஸ் ஆகிய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
    • பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடமிருந்து ரூ.25 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 510 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    மேலும் சிங்கப்பூரில் இருந்து வந்த பெண்ணின் கைப்பையில் இருந்த ரூ.27 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 550 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். இதையடுத்து சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த வாலிபரின் காலில் இருந்த 'ஷூ'வில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.24 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 484 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    அதேபோல் கொழும்பில் இருந்து விமானத்தில் வந்த வந்த வாலிபரின் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.31 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள இருந்து 625 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    இதைத்தொடர்ந்து பெண் உள்பட 4 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 8 லட்சத்தி 15 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 169 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் கடத்தலில் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

    • விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
    • பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    மீனம்பாக்கம்

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

    அவரது காலில் அணிந்திருந்த ஷூ சாக்ஸை கழற்றியபோது, தங்கத்தை பேஸ்ட் போல் மாற்றி அதை கறுப்பு நிற பாலித்தீன் பையில் மறைத்து கால் பாதத்தில் பேஸ்ட் போட்டு ஒட்டி அதன் மேல் சாக்சை அணிந்து நூதன முறையில் கடத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.66 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 340 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் இருந்த லேப்டாப் சார்ஜர் பின்னில் உருளை வடிவ தங்க கம்பிகளை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ.27 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள 548 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.94 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 888 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    குவைத்தில் இருந்து கேரளா வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது குவைத்தில் இருந்து கொச்சிக்கு வந்த விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் 1978.89 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.85 லட்சம் ஆகும்.

    கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×