கொச்சி விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொச்சி விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
Published on

திருவனந்தபுரம்:

குவைத்தில் இருந்து கேரளா வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குவைத்தில் இருந்து கொச்சிக்கு வந்த விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் 1978.89 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.85 லட்சம் ஆகும்.

கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com