search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garuda Seva"

    • 2-ந் தேதி காலை தேர் திருவிழா நடக்கிறது.
    • 4-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீரராகவ பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோபுர தரிசனம் நடைபெற்றது.

    கோபுர தரிசனத்தை காண சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டு வழிபட்டனர்.

    இதைத்தொடர்ந்து 5.30 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் 7-ம் நாளான வருகிற 2-ந் தேதி காலை தேர் திருவிழாவும், 4-ந் தேதி காலை கோவில் குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • 12 கோவில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளினர்.
    • பக்தர்களுக்கு மோர்,மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டன.

    ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியை நாளாகும் இதனையொட்டி கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோவில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு நேற்று அட்சய திருதியையொட்டி 12 கருட சேவைக்காக கும்பகோணம் டி.எஸ்.ஆர். பெரியதெருவில் உள்ள அகோபில மடம் வாயிலில் பிரமாண்டமான அலங்கார பந்தல் அமைக்கப்பட்டது.

    இதில் காலை 10 மணி அளவில் கருட வாகனங்களில் உற்சவ பெருமாள், அங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி 12 பெருமாள் பொதுமக்களுக்கு காட்சியளித்தனர். இதில் சாரங்கபாணி சாமி, சக்கரபாணிசாமி, ராமசாமி, ஆதிவராகசாமி, ராஜகோபாலசாமி, கொட்டையூர் நவநீத கிருஷ்ணசவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள் சாமி, அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சாமி உள்ளிட்ட 12 கோவில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளினர்.

    பெருமாளுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் காலை முதல், பகல் 1 மணி வரை அலங்கார பந்தலில் எழுந்தருளி அருள்பாலித்தனர். உற்சவ பெருமாளை ஒரே இடத்தில் கருட வாகனத்தில் பார்ப்பது மிகவும் அரிதான நிகழ்ச்சி என்பதால் இதனை காண கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் காலை முதல் குவியத் தொடங்கினர்.

    பக்தர்கள் அதிக அளவில் கூடியதால் பெரிய கடை வீதிக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டு வேறு வழியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. பெரிய தெருவில் பக்தர்களுக்கு மோர்,மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டன.

    இதற்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். கருட சேவைக்கான ஏற்பாடுகளை கும்பகோணம் காசுக்கடை தர்ம வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
    • பல்வேறு வாகனங்களில் மாடவீதி மற்றும் ரதவீதிகளில் வீதி புறப்பாடு நடைபெறுகிறது.

    நவதிருப்பதி கோவில்கள் ஏழாவது திருப்பதியாகவும், சுக்கிரனுக்கு அதிபதியாகவும் விளங்கும் தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாநாட்களில் சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்து வந்தது. முக்கிய திருவிழாவான கருடசேவை நேற்று முன்தினம் இரவு நடந்தது.

    இதை முன்னிட்டு நேற்றுமுன்தினம் காலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 11 மணிக்கு பந்தல்மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சனமும், கோஷ்டியும் நடைபெற்றது. இரவில் சுவாமி நிகரில்முகில்வண்ணன் கருடவாகனத்திலும், திருப்பேரை நாச்சியார் அன்னவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனா்.

    இந்தநிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி நிகரில்முகில்வண்ணன், அம்பாள்களுடன் பல்வேறு வாகனங்களில் மாடவீதி மற்றும் ரதவீதிகளில் வீதி புறப்பாடு நடைபெறுகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் மற்றும் உபயதாரா்கள் செய்து வருகின்றா்.

    • கல்கருட பகவான் அலங்கார தரிசனம் நடைபெற்றது.
    • 6-ந்தேதி உற்சவர் பெருமாள் தாயார் கோ ரதத்தில் பிரகார உலா நடைபெறுகிறது.

    கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவத்தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி திருவிழா 11 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது.

    இக்கோவிலில் குடமுழுக்கு திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவுக்கு பதிலாக பிரகார உலாவாக நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று மாலை 6 மணிக்கு பிரசித்தி பெற்ற கல்கருட சேவை நடைபெற்றது. அப்போது கோவிலுக்குள் திரளான பக்தர்கள் கருட பகவானை தரிசனம் செய்ய காத்து நின்றனர்.

    கருட பகவான் வாகன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சியின் போது பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வருவது போன்று காட்சியளித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இரவு கல்கருட பகவான் அலங்கார தரிசனம் நடைபெற்றது. வருகிற 6-ந்தேதி உற்சவர் பெருமாள் தாயார் கோ ரதத்தில் பிரகார உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பிரபாகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • திருவிழாவின் 5-ம் நாளான நேற்று கருட சேவை விழா நடந்தது.

    களக்காடு:

    களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினசரி காலையில் சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடந்து வருகிறது.

    திருவிழாவின் 5-ம் நாளான நேற்று கருட சேவை விழா நடந்தது. இதனை முன்னிட்டு வரதராஜ பெருமாள், வெங்கடாஜலபதி மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் வரதராஜபெருமாளும், வெங்கடாஜலபதி சுவாமிகளும் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க ரத வீதிகளில் உலா வந்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், 8-ம் நாளான 3-ந் தேதி (திங்கட்கிழமை) பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளிகிறார். 10-ம் நாளான 5-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தீர்த்தம் மஞ்சள் கயிறு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீவைகுண்டம் நவதிருப்பதி கோவில்களின் அருகில் அமைந்துள்ள சுவாமி நம்மாழ்வார் பிறந்த அப்பன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு 5 நாட்கள் உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவோண நட்சத்திர உற்சவத்தை முன்னிட்டு கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், காலை 7 மணிக்கு திருமஞ்சனம், 8.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமி முன்மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமி திருவேங்கடத்தப்பன் தாயார் ஸ்ரீ தேவி பூதேவியுடன் திருக்கல்யாணம் நடந்தது. தீர்த்தம் மஞ்சள் கயிறு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6மணிக்கு சுவாமி திருவேங்கடத்தப்பன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சுவாமி கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 9-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது
    • 10-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் 9-வது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நடைபெறுகிறது. 5-ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், கோஸ்டி வினியோகம் நடந்தது. மாலையில் கருட வாகனத்தில் சுவாமி பொலிந்துநின்ற பிரானும், ஹம்ச வாகனத்தில் சுவாமி நம்மாழ்வாரும் எழுந்தருளும் வீதி உலா நடந்தது.

    நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், செயல் அலுவலர் அஜித், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகின்ற 9-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ந் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் வீணை மோகினி திருக்கோலத்திலும், சுவாமி பொலிந்துநின்ற பிரானும் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 11-ந் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளும் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    • 5-ந்தேதி ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடக்கிறது.
    • தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருள்கிறார்.

    சேஷாசலம் மலைத்தொடரில் 3 கோடி தீர்த்தங்கள் உள்ளது. அதில் 7 முக்கிய தீர்த்தங்களான ஏழுமலையான் கோவில் புஷ்கரணி, ஆகாச கங்கை, பாபவிநாசனம், தும்புரு தூர்த்தம், குமாரதாரா, பாண்டவர் மற்றும் ராமகிருஷ்ண தீர்த்தம் ஆகியவை ஆகும்.

    ராமகிருஷ்ண தீர்த்தம் திருமலை கோவிலில் இருந்து 6 மைல் தொலைவில் உள்ளது. அங்கு 5-ந்தேதி ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடக்கிறது. அங்குள்ள ராமர் மற்றும் கிருஷ்ணர் சிலைகளுக்கு கோவில் அர்ச்சகர்கள் சிறப்புபூஜைகளை செய்து அங்கிருந்து திருமலைக்கு திரும்புவர்.

    அன்று பவுர்ணமியையொட்டி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    • கருட சேவை உற்சவம் இன்று இரவு நடக்கிறது.
    • மேளம் தாளம் முழங்கிட திரளான பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டார்.

    சீர்காழி அருகே நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் 11 பெருமாள் கருட சேவை உற்சவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் 11 பெருமாள்களைப்பற்றி திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்கள் பட்டாச்சாரியார்களால் பாடப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெறும். இதுவே கருட சேவை விழாவாகும். இந்த விழாவில் பங்கேற்பதற்காக குமுதவல்லி நாச்சியார் சமேத திருமங்கை ஆழ்வார் குமுதவல்லி திருநகரி கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலில் இருந்து நேற்று அதிகாலை மேளம் தாளம் முழங்கிட திரளான பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டார்.

    காலை நேரடியாக திருமங்கையாழ்வார் அவதரித்த திருக்குரவலூர் கிராமத்திற்கு வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து அவர் உக்கிர நரசிம்ம பெருமாள் கோவிலில் எழுந்தருளினார். அப்போது கோவில் பட்டாச்சாரியார் பார்த்தசாரதி தலைமையில் வேத மந்திரங்கள் முழங்கிட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நரசிம்மரை வழிபட்ட பின்னர் மங்கை மடம் வீர நரசிம்ம பெருமாள் கோவில், காவலம்பாடி கண்ணன் கோவில், திருமேனி கூடம் வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்ற ஆழ்வார் மேல்நாங்கூர் மஞ்ச குளிமண்டபத்தில் எழுந்தருளி உள்ளார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன

    இதனை அடுத்து நாங்கூர் பகுதிக்கு வருகை தந்த திருமங்கையாழ்வாருக்கு பட்டாசுகள் வெடித்து பக்தர்கள் வரவேற்றனர். பின்னர் நாங்கூர் பகுதியில் உள்ள 6 பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபட்ட பின்னர், இன்று நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார். இதில் நாகை மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், கிராம பொது நல சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    11 பெருமாள் கருட சேவை உற்சவ ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.
    • சுவாமி புறப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

    ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் வைகுண்டபதி அவதார தின கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நவதிருப்பதி கோவில்களில் முதல் தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் மூலவர் வைகுண்டபதி அவதார தினத்தை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 9 மணிக்கு திருமஞ்சனம், 10 மணிக்கு உற்சவர் கள்ளப்பிரான் தாயார்களுடன் சயன குறட்டிற்கு எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. அத்யாபகர்கள் சீனிவாசன். ராமானுஜம் வாசன் சீனிவாச தாத்தம் பார்த்த சாரதி பெரிய திருவடி ஜெகநாதன் ஆகியோர் நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவித்தனர்.

    மாலை 5 மணிக்கு சாயரட்சை, 6 மணிக்கு சுவாமி கள்ளபிரான்வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். கருட வாகனத்தில் அலங்காரம் செய்து இரவு 7.30 மணிக்கு சுவாமி கள்ளபிரான் காட்சி தந்தார். பின்னர் சுவாமி புறப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், வாசன், திருவேங்கடத்தான், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி உபயதார் சந்திரசேகர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    • 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 6-ந்தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்திஇசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இந்தநிைலயில், 5-ம் திருவிழாவான நேற்று அதிகாலையில் கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவிலிலில் இருந்து ரிஷப வாகனத்தில் உமா மகேஸ்வரர், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன், கருட வாகனத்தில் பெருமாள் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்களுடன் வேளிமலை முருகன், மருங்கூர் சுப்பிரமணிய சாமியும், விநாயகரும் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கோவிலை வலம் வந்தனர். பிறகு வீரமார்த்தாண்ட கோவில் முன் மேற்கு நோக்கி உமா மகேஸ்வரர், பெருமாள், அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகிய மூன்று பேரும் நின்றனர். அப்போது அத்திரி முனிவரும், அனுசுயா தேவியும் வானத்தில் கருட வடிவில் வந்து தாணுமாலய சாமியை வணங்கினர். இந்த கருட தரிசனம் நிகழ்ச்சியை காண திரண்டிருந்த திரளான பக்தர்கள் பார்த்து வணங்கினர்.

    விழாவில் வருகிற 5-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • புஷ்ப அலங்காரத்தில் கல்கருடபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கும் முக்கோடி தெப்ப திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று கல்கருட சேவை நடைபெற்றது. தொடர்ந்து மாலை சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கல்கருடபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கருட பகவானை தோளில் சுமந்தவாறு வாகன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோவில் வளாகத்திற்குள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    கருட பகவான் பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தி வருவது போல் நடந்த கருட சேவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. விழாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு கோ. கிருஷ்ணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    ×