search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garuda Seva"

    • பக்தர்கள் பெருமாளுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
    • கருட சேவையை முன்னிட்டு ஆங்காங்கே அன்னதானம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜ தர்சன சபை சார்பில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவோண நட்சத்திரத்தில் தஞ்சையில் 24 கருட சேவை நிகழ்ச்சி நடத்தப்படும்.அதன்படி, இந்த ஆண்டுக்கான கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    தஞ்சாவூரில் உள்ள வைணவ கோவில்களில் முதன்மையானதாக விளங்கும் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோவிலில் 89-வது ஆண்டு கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு இன்று காலை தஞ்சாவூர் நீலமேகப்பெருமாள் கோவில், மணிகுன்றப் பெருமாள் கோவில், மேல சிங்கப்பெருமாள் கோவில், வேளூர் வரதராஜர் கோவில், கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், நவநீதகிருஷ்ணன் கோவில், மேலவாசல் ரெங்கநாதர் கோவில், விஜயராமர் கோவில், கோவிந்தராஜ பெருமாள் கோவில், ஜனார்த்தன பெருமாள் கோவில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், கீழ கோதண்டராமர் கோவில், கீழ சிங்கபெருமாள்கோவில், பூலோக கிருஷ்ணர் கோவில், படித்துறை வெங்கடேசப் பெருமாள் கோவில், பஜார் ராமர் கோவில் உள்ளிட்ட 24 கோவில்களிலிருந்து கருட வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வரிசையாக கொடிமரத்து மூலை, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக வந்து பொதுமக்களுக்கு அருள்பாலித்தனர்.

    அப்போது பக்தர்கள் பெருமாளுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும், 24 பெருமாளையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்ய வெளியூர் மற்றும் உள்ளூரிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் 4 ராஜ வீதிகளிலும் பக்தர்கள் திரண்டனர்.

    கருட சேவையை முன்னிட்டு ஆங்காங்கே தன்னார்வ அமைப்புகள் சார்பில் அன்னதானம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது. இதையடுத்து முற்பகலில் பெருமாள் சுவாமிகள் மீண்டும் அந்தந்த கோவிலை அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகினர்.
    • பக்தர்கள் நிரம்பி 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்றிருந்தனர்.

    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள குடோன்களில் பக்தர்கள் நிரம்பி 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்றிருந்தனர்.

    இன்று இலவச தரிசனத்திற்கு 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர். இதனால் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகினர்.

    நேற்று அதிகாலை முதலே இலவச தரிசனத்தில் 85 ஆயிரத்து 366 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

    இதில் 48 ஆயிரத்து 183 பேர் முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் வருமானம் ரூ.4 கோடி கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று மாலை ஜோஷ்டாபிஷேகத்தையொட்டி ஏழுமலையானுக்கு முத்துக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் கோவிலின் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே முத்துக் கவசம் அலங்காரம் நடைபெறும். சாமியின் அழகை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை கருட சேவை (தங்க கருட வாகன வீதி உலா நடப்பது வழக்கம்).

    கோவிலில் ஜோஷ்டாபிஷேகம் நடப்பதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்க இருந்த பவர்ணமி கருட சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 23 ஆலயங்களின் பெருமாளும் ஒரே இடத்தில் அணிவகுத்து கருடசேவையில் காட்சி தருவார்கள்.
    • வாழ்வில் ஒருமுறையேனும் கருட சேவையைத் தரிசித்தால், பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெருகும்.

    தஞ்சையில் அரக்கர்களின் அட்டூழியத்தால் கலங்கிப்போன மக்களுக்காக, திருமாலை நினைத்து பராசர முனிவர் தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த நாராயணர், அரக்கர்களை அழித்தார். தஞ்சகாரனை அழித்த ஸ்ரீநரசிம்மர் தஞ்சை ஆளிநகர் ஸ்ரீவீர நரசிம்ம பெருமாள் கோவிலில் உள்ளார். தண்டகாசுரனை வராக மூர்த்தமாக வந்து அழித்தவர் தஞ்சை மாமணிக் கோவிலான ஸ்ரீநீலணமேகப் பெருமாள் திருக்கோவிலில் உள்ளார். அருகிலேயே ஸ்ரீமணிகுன்றப் பெருமாள் கோவிலும் உள்ளது. அருகருகே அமைந்துள்ள இந்த மூன்று ஆலயங்களையும் சேர்த்து, ஒரே திவ்விய சேத்திரமாகப் போற்றுகின்றனர்.

    இங்கே நடை பெறும் வைகாசி பிரம்மோற்சவத்தின் போது, தஞ்சை மாவட்ட மக்கள் ஒன்று திரள்வார்கள். வைகாசியின் பூச நட்சத்திர நாளில், கொடியேற்றத்துடன் துவங்குகிற பிரம்மோற்சவ விழா, வம்புலாஞ்சோலை அமிர்த புஷ்கரணியில், தீர்த்தவாரியுடன் நிறைவுபெறும். பிரம்மோற்சவம் முடிந்த ஒரே வாரத்தில் இங்கே கருடசேவை நடைபெறும்.

    அப்போது, அருகில் உள்ள ஸ்ரீகோதண்ட ராமர், ஸ்ரீகல்யாண வேங்கடேச பெருமாள், கரந்தை ஸ்ரீகிருஷ்ணர், வேலூர் ஸ்ரீவரதராஜர், படித்துறை ஸ்ரீவெங்கடேச பெருமாள், தெற்குவீதி கலியுக வெங்கடேச பெருமாள்... உள்ளிட்ட 23 ஆலயங்களின் பெருமாளும் ஒரே இடத்தில் அணிவகுத்து கருடசேவையில் காட்சி தருவார்கள். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். முதலில் இங்கு 12 கருட சேவை தான் நடந்தது. பின்னாளில் 23 கருட சேவையாக அதிகரித்துள்ளது.

    வாழ்வில் ஒருமுறையேனும் கருட சேவையைத் தரிசித்தால், பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெருகும்.

    • வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று ஆகும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் 3-வது நாளான இன்று கருடசேவை உற்வம் விமரிசையாக நடை பெற்றது. இதையொட்டி இன்று காலை வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் ஊதா நிற பட்டு உடுத்தி மலர் மாலைகள் திருவாபரணங்கள் அணிவித்து தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.

    இதைத்தொடர்ந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க, வேதப்பாராயண பாடலுடன் வரதராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில் காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் காஞ்சீபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    பல்வேறு மாநிலங்களில் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்ததால் நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நான்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. கருடசேவை விழாவையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 2-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 3-ந் தேரோட்டம் நடைபெறுகிறது.

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.திருவரங்கம் மேலை வீடு எனவும், திருவேங்கடம் வடக்கு வீடு எனவும், திருமாலிருஞ்சோலை தெற்கு வீடு எனவும், திருக்கண்ணபுரம் கீழை வீடு எனவும் போற்றப்படுகிறது.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க கருட சேவையும், சவுரிராஜ பெருமாள் ஓலை சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, வருகிற 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 3-ந் தேரோட்டமும் நடைபெறுகிறது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பிரம்மோற்சவ விழா ஜூன் 7-ந்தேதி வரை நடக்கிறது.
    • 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவிலில் சுவாமி நம்மாழ்வார் வைகாசி திருநட்சத்திரத்தில் அவதரித்ததை முன்னிட்டு ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா 15 நாட்கள் நடைபெறும்.

    விழாவின் 5-வது நாள் சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்துடன் மங்களா சாசனம் வரவேற்க பூப்பந்தல் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அன்று இரவு கருட சேவை நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது. அப்போது நவதிருப்பதி பெருமாளை வரவேற்று மங்களா சாசனம் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த ஆண்டு சுவாமி நம்மாழ்வார் அவதார விழாவை முன்னிட்டு பிரமோத்சவ விழா 24-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் சுவாமி நம்மாள்வார் அவதார திருவிழா தொடங்கியது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அஜீத், தக்கார் கோவல மணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திருவிழா நாட்களில் தினமும் காலையில் தங்கதோளூக்கினியன் வீதி புறப்பாடும், மாலையில் இந்திர விமானம், புஷ்ப பல்லக்கு, புன்னை மர வாகனம், தங்க திருப்புளி வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்திலும் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து ஜூன் மாதம் 7-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான 5-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்துடன் நவதிருப்பதி பெருமாள்கள் கொடி, குடை, ஆலவட்டம், பதாகைகள், திருச்சங்கு போன்றவைகளுடன் யானைகள் முன்வர ஊர்வலமாக நவ திருப்பதி எம்பெருமான்களை மங்களா சாசனம் வரவேற்க பூப்பந்தல் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அன்று இரவு 9 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை நிகழ்ச்சியில் நவதிருப்பதி உற்சவரான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சின வேந்தன், இரட்டை திருப்பதி அரவிந்தர லோசனர், தேவர் பிரான், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆகியோரை வரவேற்று மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நம்மாள்வார் அன்னவாக னத்திலும் மதுரகவி ஆழ்வார் தங்க பல்லக்கிலும் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஜூன் மாதம் 1-ந்தேதி (வியாழக்கிழமை) 9-ம் நாள் திருவிழாவில் காலை 8 மணிக்கு நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலமும் நடைபெறுகிறது. ஜூன் 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 10-ம் நாள் திருவிழாவான தீர்த்தவாரி தாமிரபரணி நதியில் காலையில் நடக்கிறது.

    • 2-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
    • 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    திருவரங்கம் மேலை வீடு எனவும், திருவேங்கடம் வடக்கு வீடு எனவும், திருமாலிருஞ்சோலை தெற்கு வீடு எனவும், திருக்கண்ணபுரம் கீழை வீடு எனவும் போற்றப்படுகிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி வருகிற 29-ந் தேதி தங்க கருடசேவையும், 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 3-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பவுர்ணமி அன்று இரவில் தங்கக் கருட வாகனத்தில் மலையப்பசாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
    • நாளை இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருட சேவை நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவில் தங்கக் கருட வாகனத்தில் (கருட சேவை) உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) பவுர்ணமி கருடசேவை நடக்கிறது. இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    • 2-ந் தேதி காலை தேர் திருவிழா நடக்கிறது.
    • 4-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீரராகவ பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோபுர தரிசனம் நடைபெற்றது.

    கோபுர தரிசனத்தை காண சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டு வழிபட்டனர்.

    இதைத்தொடர்ந்து 5.30 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் 7-ம் நாளான வருகிற 2-ந் தேதி காலை தேர் திருவிழாவும், 4-ந் தேதி காலை கோவில் குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    உற்சவர் வைகுண்டப் பெருமாள் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் ஜொலிக்க சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
    காஞ்சீபுரம் குண்டவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 26-ந் தேதி அதிகாலை கொடியேற்றதுடன் தொடங்கியது.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய வைபவமான கருட சேவை உற்சவம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

    அதையொட்டி உற்சவர் வைகுண்டப் பெருமாள் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் ஜொலிக்க சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    அர்ச்சகர்கள் சிறப்பு ஆராதனைகள்,கற்பூர தீபாராதனைகள் காட்டினார்கள். மேள தாளங்கள் முழங்க கோவில் வெளிபிரகாரத்தை வந்தடைந்து பின்னர் பஜனை கோஷ்டியினர் பஜனை பாடல்கள் பாட, மேள தாளங்கள் முழங்கியப்படி உற்சவர் வைகுண்டப்பெருமாள் கருட வாகனத்தில் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

    வழி நெடுகிலும் திரண்டிருந்த திரளான பக்தர்கள் பூ, வாழைப்பழம், கற்பூர தீபாராதனைகளை தாம்பூல தட்டுகளில் ஏந்தியவாறு "கோவிந்தா கோவிந்தா" என பக்தி பரவச கோஷங்களை எழுப்பினார்கள். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

    பிரம்மோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் செயல் அலுவலர் பூவழகி மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.
    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    நவதிருப்பதி கோவில்களில் 9-வது ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வருக்ஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம். அதனை தொடர்ந்து 8 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது.

    பின்னர் காலை 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கலசங்கள் திருமஞ்சனம் முடிந்து, காலை 10.30மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சுவாமி பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் ஹம்ஸ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இதில் எம்பெருமானார் ஜீயர், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். கருடசேவையில் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராம மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    ஸ்ரீவைகுண்டம் கள்ளப் பிரான் கோவிலில் கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    நவ திருப்பதி தலங்களில் முதல் திருப்பதி தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளப் பிரான் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் கும்பாபிஷேக தினத்தில் வருஷாபிஷேக விழாவில் கருடசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு விஸ்வரூபம், 10 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. 11 மணிக்கு பூர்ணாகுதி, 11.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 12 மணிக்கு தீபாராதனை, 1 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி, மாலை 6 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு சுவாமி கள்ளப்பிரான் வாகனக்குறட்டிற்கு எழுந்தருளினார். 8.30 மணிக்கு கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்நிகழ்வில் நிர்வாக அதிகாரி கோவல மணி கண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி தலத்தார்கள் சீனிவாசன், ராஜப்பா வெங்கடாச்சாரி, ஸ்ரீனிவாசன், தேவராஜன், திருவேங்கடத்தான், வேங்கட கிருஷ்ணன் ஆகி யோர் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×