என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 97611"

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    நவதிருப்பதி கோவில்களில் 9-வது ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வருக்ஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம். அதனை தொடர்ந்து 8 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது.

    பின்னர் காலை 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கலசங்கள் திருமஞ்சனம் முடிந்து, காலை 10.30மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சுவாமி பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் ஹம்ஸ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இதில் எம்பெருமானார் ஜீயர், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். கருடசேவையில் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராம மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    விநாயகருக்கு கும்பாபிஷேகமும், முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 1,008 சங்காபிஷேகமும், வருசாபிஷேகமும் நடந்தது. பின்னர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
    திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவிலில் வருசாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், 1,008 சங்கு பூஜை, கும்ப பூஜை, ஹோமம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் விநாயகருக்கு கும்பாபிஷேகமும், முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 1,008 சங்காபிஷேகமும், வருசாபிஷேகமும் நடந்தது. பின்னர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் புஷ்பாஞ்சலி நடந்தது. நிகழ்ச்சியில், சைவ வேளாளர் ஐக்கிய சங்க தலைவர், செயலாளர் சந்தனராஜ், பொருளாளர் ஞான சுந்தரம், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள ஏகாட்சர மகாகணபதி கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
    கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள ஏகாட்சர மகாகணபதி கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 6.30 மணிக்கு விநாயகர் பூஜையும், கணபதி ஹோமமும் நடக்கிறது. பின்னர் வேதாகம பாராயணம் நடக்கிறது. காலை 8.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஏகாட்சர மகாகணபதிக்கு முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி கேந்திர வளாகத்தில் மேள- தாளம் முழங்க வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது பக்தர்கள் தேங்காய்-பழம் படைத்து வழிபடுவார்கள்.

    விழா ஏற்பாடுகளை விவேகானந்த கேந்திர துணைத்தலைவர்கள் பாலகிருஷ்ணன், நிவேதிதா, பொதுச்செயலாளர் பானுதாஸ், பொருளாளர் அனுமந்தராவ், கேந்திர மூத்த ஊழியர் கிருஷ்ண மூர்த்தி, தலைமை அலுவலக செயலாளர் ரகுநாதன் நாயர், கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீபத்மநாபன், வளாக பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்து உள்ளனர். 
    ×