search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganapathi"

    எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு தொடங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும். அது காலா காலத்திற்கும் வீட்டில் நற்பலன்களைக் கிடைக்கச் செய்யும்.
    விநாயகரே முழு முதற்கடவுள். சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது, கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும் கூட கணபதியை வணங்கிய பிறகே, எந்த செயலையும் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் தான், இந்த நிலைமை ஏற்பட்டது. சிவபெருமானின் தேர் அச்சு முறிந்ததாக சொல்லும் இடமே தற்போது ‘அச்சிறுபாக்கம்’ என்று அழைக்கப்படுகிறது. செங்கல்பட்டு அருகே இந்த ஊர் இருக்கிறது.

    எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு தொடங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் செய்வதற்கு முன்பாகவும் கணபதி ஹோமம் செய்வார்கள். அது காலா காலத்திற்கும் வீட்டில் நற்பலன்களைக் கிடைக்கச் செய்யும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் கூட கணபதி ஹோமம் செய்யலாம்.

    கணபதி ஹோமத்தை `விநாயகர் வேள்வி' என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் சொல்லி, அவரை புகழ்ந்து பக்திப் பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் எதுவாக இருப்பினும் கணபதி ஹோமம் செய்வது சிறப்பான பலனைத் தரும். புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி, மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்வது சிறப்பு.
    சிருங்கேரி ஆச்சார்ய பரம்பரையில் எல்லோருக்கும் பிரியமான மூர்த்தியாக இந்த ஸ்தம்ப கணபதி இருக்கிறார். நியாயமான வேண்டுதல்களை தட்டாமல் நிறைவேற்றியும் இருக்கிறார்.
    சிருங்கேரியில் ஆச்சார்யர் தங்கி இருக்கும் பிரதேசத்துக்கு நரசிம்ம வனம் என்று பேர். துங்கையின் ஒரு கரையில் சாரதாம்பா கோவில், இன்னொரு கரையில் நரசிம்ம வனம் உள்ளது. இரண்டு கரையையும் நரசிம்ம சேது என்று ஒரு பாலம் இணைக்கிறது. நரசிம்ம பாரதி சுவாமிகள் கால கட்டத்தில் பாலம் கிடையாது. அந்த கரைக்கு படகில் தான் போக வேண்டும். மழை காலங் களில் வெள்ளம் பெருகினால் அதுவும் முடியாது.

    ஒரு தடவை திடீரென்று சுவாமிகள் கோவிலுக்கு வந்ததால் அவரோடு பூஜையில் இருக்கும் உம்மாச்சியை கொண்டு வரவில்லை. இந்த கோவிலில் கணபதி விக்ரகம் கிடையாது. முதல் பூஜை கணபதிக்கு செய்யாமல் எப்படி பண்ண முடியும்? என்று யோசித்து விட்டு அங்கே இருந்த ஒரு கல்தூணுக்கு ஒரு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்ய சொன்னார். அந்த தூணுக்கு கணபதி உம்மாச்சியோட ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டே ஒரு மஞ்சள் துண்டால் கணபதி ரூபத்தை கோடு மாதிரி போட்டார்.

    முழு ரூபமும் போட்டு முடிச்சு சுவாமிகள் கையை எடுத்த உடனே மஞ்சள் பட்ட இடம் மட்டும் ஒரு இன்ச் புடைப்பு சிற்பம் மாதிரி வெளியில் வந்ததாம். உடனே சாங்கோபாங்கமாக உம்மாச்சி பூஜையை செய்து விட்டு அவரோட அப்பா, அம்மாவுக்கும் பூஜை பண்ணினாராம்.

    ஸ்தம்பம் என்றால் தூண் என்று அர்த்தம். ஸ்தம்பத்தில் இருந்து பிரசன்னமானதால் ஸ்தம்ப கணபதி என்று பெயர் ஏற்பட்டது. சிருங்கேரி ஆச்சார்ய பரம்பரையில் எல்லோருக்கும் பிரியமான மூர்த்தியாக இந்த ஸ்தம்ப கணபதி இருக்கிறார். நியாயமான வேண்டுதல்களை தட்டாமல் நிறைவேற்றியும் இருக்கிறார். சிருங்கேரியில் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய ஒரு அற்புதமான மூர்த்தி இவராவார்.
    அகஸ்தியர் நாடி நூலில், பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ தோரண கணபதி பிரசன்ன துதியை தினமும் மூன்று முறை படித்துவர, கடன் பிரச்சினைகள் யாவும் நீங்கும்.
    ஸ்ரீ தோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், ருணம் எனும் கடன் தீரும். சக்தி தேவியர் தனியாகக் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப்புறமாக சன்னதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச-பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீ தோரண கணபதி.

    ஸ்ரீ தோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன. செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீ தோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து 6 வாரங்கள் குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீ தோரண விநாயகரை தரிசித்து அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.

    அத்துடன் கணபதியின் மேகலை-பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜெபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐந்து வகை பழங்களை படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து நிம்மதி பிறக்கும்.

    ஆறு ஞாயிற்றுக் கிழமைகள் தோரண கணபதி சன்னதிக்கு சென்று அவருடைய சன்னதிக்கு பின் புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, ஐந்து வகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களை பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் ஸ்ரீ சாரதாம்பாள் சன்னதியில் காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீ தோரண கணபதி, தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.

    ஆலயங்களுக்கு சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீ தோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ தோரண கணபதி பிரசன்ன துதியை தினமும் மூன்று முறை படித்துவர, கடன் பிரச்சினைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.
    விநாயகர் வழிபாடு பித்ரு தோஷத்தையும் போக்கும் வல்லமை பொண்டது. தாங்கள் மூதாதையர் இறந்த நாள் தெரியவில்லை என்றாலும் ஆதி விநாயகர் கோவிலில் எப்போது வேண்டுமானாலும் பித்ருகடன் செய்யலாம்.
    விநாயகர் வழிபாடு பித்ரு தோஷத்தையும் போக்கும் வல்லமை பொண்டது.

    கோதாவரி நதிக்கரையில் போகவதி என்னும் பட்டணத்தை நற்சோமதிமகராஜா என்பவன் ஆண்டு வந்தான். அவனது சபைக்கு நாரத மகரிஷி ஒரு சமயம் வந்தார். அப்போது, இந்தப் பூவுலகில் எந்த தலம் மிகவும் சிறந்த புண்ணியஸ்தலம்?...’ என மன்னன் கேட்டான்.

    அதற்கு நாரதர், ‘‘எந்தப் புண்ணியத் திருத்தலத்தில் பித்ருக்கள் திலநீர் பிண்டதானத்தை எதிரே தோன்றி ஏற்பார்களோ, அதுவே உத்தமமான புண்ணியஸ்தலம்!... ’ என்று பதில் அளித்தார். தலத்தின் பெருமையை மன்னவனே அறியட்டும் என ஊர்ப் பெயரைக் கூடச் சொல்லாமல் விடை பெற்றார் நாரதர். நாரதர் சொன்னபடி நற்சோதி மன்னன் இந்தியாவில் உள்ள அனைத்து தலங்களிலும் தில் (எள்) தர்ப்பணமும், பிண்டதானமும் செய்து கொண்டு வந்தான். கும்பகோணம் வந்து காவிரி ஆற்றில் நீராடி தர்ப்பணமும் செய்தான்.

    ‘எவ்வளவோ புண்ணிய நதிகளில் நீராடி தர்ப்பணம் செய்து விட்டேன். இன்னமும் பித்ருக்கள் யாரும் நேரில் காட்சி தந்து பிண்டங்களை வாங்க வில்லையே நம் நாட்டுக்கே திரும்பிச் சென்று விடலாமா?....’ என்று மனம் உடைந்து வருந்தினான் மன்னன். அப்போது நாரதர், மன்னன் முன் தோன்றினார். ‘‘கலங்காதே மன்னா! நான் கூறிய புண்ணியத்தலத்தின் அருகில் நீ வந்து விட்டாய் இங்கிருந்து கிழக்கே திருநாகேஸ்வரம் தலம். அதையடுத்து திருவீழிழலை... அதற்கு அப்பால் சிலகாததூரம் சென்றால் ‘திலதைப்பதி’ என்ற புண்ணியதலம் உள்ளது.

    அங்கு ஓடும் ‘அரசி’ லாற்றில் நீராடி, தென்புலத் தாராகிய உன் பித்ருக்களுக்கு தில தர்ப்பணமும், பிண்டதானமும் செய்தால் அவர்கள் உன் முன் தோன்றி அதை வாங்கி உண்பார்கள்...’ என்று அருளாசி வழங்கினார். திலதைப்பதி வந்த நற்சோதிமன்னன் அங்கே தவம் செய்து கொண்டிருந்த காலவ முனிவரை வணங்கி ஆசி பெற்றான்.

    மன்னன் வந்த நோக்கம் அறிந்த முனிவர், சிவாலயத்துக்குள் அழைத்துச் சென்று பொற்கொடி அன்னையையும், மந்தாரவனேஸ்வரர் பெருமானையும் தரிசனம் செய்வித்தார்! அமாவாசை தினத்தன்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி நடுப்பகலில் சங்கல்பத்துடன் திலதர்ப்பணம், பிண்டம் (அன்னம்) இவற்றை படைத்தான் மன்னன் பித்ருக்கள் அவன் முன் தோன்றி தங்கள் கரங்களால் பிண்டத்தை ஏந்தி சாப்பிட்டு மகிழ்ந்து நல்லாசி அளித்து மறைந்தனர்!

    ‘திலம்’ என்றால் ‘எள்’ என்று பொருள். ‘தர்ப்பணம்’ என்றால் இறந்தவர்களுக்காக செய்யப்படும் பித்ரு கடன்கள் ‘புரி’ என்றால் தலம். எனவே ‘திலதர்ப்பணபுரி’ என்றால் எள் தர்பணம் செய்ய சிறந்த தலம் என்று பொருள். இந்த ஆதி விநாயகர் கோவிலின் வழியாகச் சென்ற ஸ்ரீராமன் இங்கு தான் தன் தந்தை தசரத மகாராஜாவுக்கு பித்ருகடன் செய்துள்ளார்.

    பித்ரு சாபம், பித்ரு தோஷம் போன்றவற்றுக்கு இங்கு நேரில் வந்து தர்ப்பணம் செய்து பரிகாரம் காணலாம். தவிர, தாங்கள் மூதாதையர் இறந்த நாள் தெரியவில்லை என்றாலும் இந்த ஆதி விநாயகர் கோவிலில் எப்போது வேண்டுமானாலும் பித்ருகடன் செய்யலாம். ஆதி விநாயகர் என்று அழைக்கப்படும் நரமுக கணபதி மனித உருவத்தோடு ஜடாமுடி ஆயுதங்களை இரு கைகளிலும், வலக்கையை இடக்காலின் மீது வைத்த படியும் காட்சி கொடுக்கிறார்.

    ஆதியில் பார்வதி தேவி பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையார் தான் இப்படி நரமுக விநாயகராகக் காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது.
    இந்த கோவிலின் ஈசன் பெயர் முக்தீஸ்வரர். இறைவி பெயர் சொர்ணவல்லி.

    திருவாரூர் - மயிலாடுதுறை செல்லும் பஸ்சில் ஏறி பூந்தோட்டம் என்ற ஊரில் இறங்க வேண்டும். பின்பு அங்கிருந்து எரவாஞ்சேரி வழித்தடத்தில் இரண்டு கிலோ மீட்டர் சென்றால் ஆதி விநாயகர் கோவிலை அடையலாம்.
    விநாயகருக்கு உகந்த சில வழிபாட்டு முறைகளை பின்பற்றி வழிபாடு செய்தால் திருமண தடை, நவகிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.
    செவ்வாய்க்கிழமையும், சனிக்கிழமையும் விநாயகருக்கு உகந்த நாட்கள். அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்க வேண்டும்.

    சுக்ல சதுர்த்தசி அன்று அருகம் புல்லை விநாயகருக்குச் சாற்றி வழிபட்டால் செயல்கள் பெற்றி பெறும்.

    வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வணங்கி நல்லருள் பெறலாம்.

    மஞ்சள் பிள்ளையாரை 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க திருமணக்காலம் விரைவில் வரும்.

    நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய்தீபம் ஏற்றிவர பீடைகள் விலகும்.

    வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றிவர குடும்பத்தில் வறுமை விலகும்.

    சதுர்த்தியன்று அரிசி நொய்யைச் சாதமாக்கி பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளைகளாய் பாவித்துத் தூவ விநாயகர் மகிழ்ந்து குழந்தை வரம் தருவார்.

    குழந்தைகளுக்குப் படிப்பு வர வேண்டும் என்றால் சுக்ல சதுர்த்தி நாளில் குழந்தை பெயரில் விநாயகர் சன்னிதியில் அர்ச்சனை செய்து பென்சில் நோட்டுக்களை 11 குழந்தைகளுக்கு இனிப்புடன் தானம் செய்ய வேண்டும்.

    நாக்குப் பிறழாத குழந்தைகளுக்குத் தமிழ் மாதத்தில் 3-ம் செவ்வாயன்று விநாயகரை வழிபட்டு இனிப்பு பழங்கள் படைத்து தானம் செய்தால் பலன் கிடைக்கும்.
    சிறப்பான ‘வடிவம்’ கொண்ட ‘கண் திருஷ்டி கணபதி’யை ஒவ்வொரு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் வைத்து வணங்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.
    ஒருவரது கண் பார்வை சாதாரணமாக, இயல்பாக இருக்கும் பட்சத்தில் அதனால் எந்தக் கெடுதலும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால். அதே கண்பார்வை பொறாமை, வயிற்றெரிச்சல், தீய எண்ணம் என்ற உணர்வுகளை தாங்கி, அதனால் எழுகின்ற எண்ண அலைகளைக் குவித்து, கண் களின் மூலம் தீர்க்கமாகப் பார்க்கப்படும் போது, அது மிகவும் வலிமையாகப் பாய்ந்து மிகக் கெடுதலான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

    அகஸ்திய மகாமுனிவர், இந்த கண் திருஷ்டி என்ற அசுரனை அழித்து சம்காரம் செய்து இந்த உலகையும், உலக மக்களையும் பாதுகாக்க ஒரு சர்வவல்லமை பொருந்திய மகாசக்தியைத் தோற்றுவித்தார். அவர் தான் ‘‘கண் திருஷ்டி கணபதி’’.

    இவர் முப்பத்து மூன்றாவது மூர்த்தமாக இந்த உலகில் உதயமான சர்வ மகாசக்தி கணபதி ஆவார்.

    இந்தக் கண் திருஷ்டி கணபதி படத்தை வீட்டில் குறிப்பாக வடக்குத்திசை நோக்கி இருக்குமாறு மாட்டி வணங்கலாம். பூஜை அறையில் வைத்தும் வணங்கலாம். வீட்டின் முன் அறையில் மற்றவர்கள் கண் பார்வை படுமாறு வைத்தும் வணங்கலாம்.

    வியாபாரஸ்தலம், அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளிலும் வைத்து வழிபடலாம். கண் திருஷ்டி கணபதியின் தோற்றம், போர்க்களம் சென்று எதிரிகளை வென்று திரும்பி வந்த போர்க்கோலத் தோற்றம்.

    இந்தச் சிறப்பான ‘வடிவம்’ கொண்ட ‘கண் திருஷ்டி கணபதி’யை ஒவ்வொரு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் வைத்து வணங்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.

    இரட்டை பிள்ளையாருக்கு தேய்பிறை சதுர்த்தியில் அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். .
    ஒரு சமயம் சிவபெருமானை பிரிந்து பார்வதி தேவி தனியாகத் தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தார். இதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடித் திருத்தலத்தில் சங்கல்ப (இரட்டை) விநாயகர் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். ‘ஆதி இரட்டை விநாயகர்’ என்று போற்றப்படுபவரும் இவரே.

    அது போலவே திருச்சி பாலக்கரைப் பக்கத்திலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார். பிள்ளையாருக்கு உரிய தேய்பிறை சதுர்த்தி திதி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும், திதிகளில் பஞ்சமியும் இவருக்குரியதாகக் கருதப்படுகிறது.

    தேய்பிறை சதுர்த்தியில் இவருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். மேலும் கார் அரிசியில் மோதகம் (கொழுக்கட்டை) செய்து நிவேதனம் செய்தால் சந்திரனால் ஏற்படும் தோஷம் விலகும்.

    திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

    திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும். ஆரோக்கியமாக வாழலாம். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வ வளம் பெருகும். விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

    பொதுவாக, செவ்வாய்க் கிழமைகளில் வழிபட நாக தோஷம் விலகும், சனிக்கிழமைகளில் கனி வகைகளில் ஏதாவது ஒன்றைச் சம்ர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.

    தஞ்சை, திருவையாறு, ஐயாறப்பன் கோவிலில் உள்ளார் இரட்டைப் பிள்ளையார். இவர் சந்நிதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். திருமணமாகாத பெண்கள் சந்தான அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்பட சங்கடஹர சதுர்த்தியில் அருகம்புல் மாலை அணிவித்து, மோதகங்கள் படைத்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும்.

    மேலும் ஸ்ரீரங்கத்திற்கு அருகிலுள்ள உத்தமர்கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் அடுத்த ஆறகலூரில் இருக்கும் கோவில், ஊட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள விநாயகர் கோவில் திருவண்ணாமலை போன்ற இடங்களிலும் இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது.

    இரட்டை விநாயகரை ஒரே சந்நிதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிடைக்கும்.
    விநாயகப் பெருமானை உரிய முறைப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் தடைபட்டு வரும் திருமணம் விரைவில் கைகூடும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
    விநாயகப் பெருமானை உரிய முறைப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். விநாயக சதுர்த்திக்கு எட்டு நாட்களுக்கு முன்பாக உப்பூரில் ஸ்ரீவெயிலுகந்த விநாயகர், பக்தர்களுக்கு மயில் வாகன ரூபமாக காட்சி தருவார். ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் ஏகாதசி அன்று மட்டும் இந்த தரிசனத்தை காணப்பெற்றவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவது உறுதி!

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே ஒரு கி.மீ தொலைவில் காவிரிக்கரையில் உள்ளது. இத்தல விநாயகருக்கு திருவலஞ்சுழி வெள்ளை வாரணர் கோவில் கமலாம்பாள், வாணி என இரு மனைவியர் உண்டு. இவரை வணங்கினால் திருமணத்தடை நீங்கும். பிள்ளைச் செல்வம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    திருவாரூரில் திருமஞ்சன வீதியும், காரைக்காட்டு தெருவும் சந்திக்கும் நாற் சந்தியில் அமர்ந்து அருள்புரிந்து வருகிறார் ஸ்ரீ பெருநாட்டு பிள்ளையார். இக்கோவில் தினமும் மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை தான் திறந்திருக்கும்.

    இந்த கோவிலின் சிறப்பே அரை மணிநேரத்திற்கு நடக்கும் அபிஷேகம் தான். அதைக்காண தொழில் அபிவிருத்தி, குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி, திருமண கைகூடுவது என்று அனைத்து வேண்டுதல்களுக்கும் சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குள் செவிசாய்த்து பெருநாட்டுப் பிள்ளையார் நிறைவேற்றி தருகிறார்.

    திண்டுக்கல்லில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள மேலக் கோட்டையின் கன்னி மூலையில் ஸ்ரீதலை வெட்டி பிள்ளையார் இருக்கிறார். கல்யாணத்தடையால் கலங்கி தவிப்பவர்கள் இங்கு வந்து, பொங்கல் படையலிட்டு ரோஜா மற்றும் சம்பங்கி மாலையை விநாயகருக்கு அணிவித்து, பச்சரிசி, எள், வெல்லம் எனக் கலந்த கலவையை கீழே சிந்தியபடி விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும்.

    பிறகு விநாயகரின் கழுத்தில் உள்ள மாலையை வாங்கி, கழுத்தில் இரண்டு முறை எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும். விநாயகரின் கழுத்திலேயே திரும்பவும் அந்த மாலையை அணிவித்து விட்டுத் திரும்பி பார்க்காமல் வந்துவிட வேண்டும். இதையடுத்து சீக்கிரமே கல்யாண வரன் தேடி வரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

    திண்டிவனம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ மேற்கே அமைந்துள்ள கிராம் தீவனூர். அந்தக் கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில் கோரையாற்றின் கரையில் அமைந்துள்ளார் மதுரவிநாயகர். திருமணத்தடை உள்ள ஆண், பெண் யாராக இருந்தாலும் இந்தக் கோவிலுக்கு வந்து கோவிலின் எதிரேயுள்ள புனித ஊற்றுக் கிணற்றில் குளித்து, புத்தாடைகள் அணிந்து விநாயகரை வணங்க வேண்டும். அரளி, சிகப்பு அரளி, அருகம்புல் மாலை போன்றவற்றால் விநாயகரை அலங்கரித்து அவருக்குப் பிடித்த தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள மரத்திற்கு தாலிகட்ட வேண்டும். அதனைத்தொடர்ந்து மூன்று அல்லது ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இதேபோல் வணங்கி வந்தால் திருமணத்தடை நீங்கி நல்வாழ்க்கை அமையும்.

    நெல்லை காந்திமதி அம்மன் ஆலயத்தில் அருள்புரியும் பொல்லாப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டு தினமும் அவரை மனதில் தியானம் செய்தால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை நிச்சயம் பிறக்கும். குழந்தை பிறந்ததும் இங்கு சந்நிதிக்கு வந்து குழந்தையை இங்குள்ள ஜன்னல் போல் உள்ள பகுதியில் உட்புறமாகத்தந்து வெளிப்புறமாக குழந்தையை வாங்கிக்கொள்ளும் சம்பிரதாயம் இன்றும் நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல் நகரின் மத்தியில் கோபாலசமுத்திரம் குளக்கரையில் 108 விநாயகர்கள் கோவில் இருக்கிறது.  எந்தவிதமான பிரச்சினையாக இருந்தாலும் இங்கு வந்து திருவுளச்சீட்டு போட்டுப்பார்த்து நன்மை அடைந்தவர்கள் ஏராளம். சங்கடஹர சதுர்த்தியில் விநாயாகருக்கு தயிர் அபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் பெறலாம். விநாயகரின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள வடிவம்தான் “உச்சிஷ்ட கணபதி” வடிவமாகும். இந்த உச்சிஷ்ட கணபதியை வணங்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    குழந்தைப்பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல அழகான குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.

    சிதம்பரம் நகரின் தெற்கு தெருவில் மிகச்சிறிய கோவிலில் நடராஜர் சன்னதியை நோக்கியவாறு சக்தி பாலவிநாயகர் உள்ளார். சிதம்பர ரகசிய ஓலைச்சுவடியில் 64-ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நடராஜர் கோவில் இருந்தபோது இவ்விநாயகர் கோவில் இருந்தது என்பதால் இவரே ஆதி விநாயகர் என்பர். குழந்தை முகமும், கோரமான பற்களும், இடது கையில் அமிர்த கலசமும், வலது கையில் மோதிரமும் அணிந்துள்ளார். மாங்கல்ய பாக்கியம், குழந்தைபேறு அருளும் விநாயகர் இவர்.
    வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல்பொரியால் அர்ச்சனை செய்து அபிஷேகங்கள் செய்து வழிபாடு செய்தால் திருமணத்தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும்.
    திருமணத் தடை நீங்க :

    வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல்பொரியால் அர்ச்சனை செய்து அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப் பெண்களுக்கு முடிந்தவரை தானங்கள் செய்வதனால் நமக்குள்ள திருமணத்தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும். அதுவும் வலம்புரி விநாயகராக இருந்தால் வளமான வாழ்வு பெறலாம்.

    தொழில் லாபம் கிட்டுவதற்கு :

    அவிட்ட நட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியைப் நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.

    ஐந்து வகை எண்ணெய் வழிபாடு :

    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கு எண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்து வகை எண்ணெய்களால் பஞ்ச தீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் மனதிற்கு ஏற்ற இல்லற வாழ்வு அமையும், செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும்.

    உதவிகள் பெறுவதற்கு :

    மேற்கு நோக்கியுள்ள அரசமரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம் மகிழ்ந்து உதவி புரிவார்கள், பணக்கஷ்டங்கள் நீங்கி செழிப்பான வாழ்க்கை வாழ வகை செய்வார் கணபதி.

    பதவி மாற்றம், இடமாற்றம் அடைய :

    மூல நட்சத்திரத்தன்று சுந்தர விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்து அந்த பால்கோவாவை தானமாக அளித்தால் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை எளிதாகும். நீங்கள் விரும்பியபடியே மாற்றங்கள் நிகழும்.

    இழந்த வேலையை, பதவியை திரும்பப் பெற :

    திருவாதிரை நட்சத்திரத்தன்று நர்த்தன விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவைக் கொண்ட காப்பிட்டு வந்தால் அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் மீண்டும் இழந்த பதவியையும் மன நிம்மதியையும் பெறுவார்கள்.

    நவக்கிரக தோஷம் போக்கும் விநாயகர் :

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் திறந்த வெளியில் சோலைகளின் நடுவில் வன்னி மரத்தடியில் காட்சி தருகிறார் விநாயகர். அவரைச் சுற்றிலும் வன்னி, வேம்பு, மந்தாரை, அத்தி, நெல்லி, அரசு, வில்வம், பவளமல்லி, நாவல் ஆகிய ஒன்பது மரங்கள் காணப்படுகின்றன. ஒன்பது விருட்சங்களுடன் கூடிய விநாயகரை தரிசிப்பதால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.
    ஜாதகத்தில் அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்களையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் பார்க்கலாம்.
    அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்:-

    அஸ்வினி: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றலாம்.
    பரணி: சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சார்த்தலாம்.
    கிருத்திகை: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்காரம் செய்விக்கலாம்.

    ரோகினி: சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை அணிவிக்கலாம்.
    மிருகசீரிடம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகு படுத்தி, அருகம்புல் மாலையைச் சாற்றலாம்.
    திருவாதிரை: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கலாம்.
    புனர்பூசம்: சந்தன அலங்காரத்துடன் அருகம்புல் மாலையும் சாற்றலாம்.

    பூசம்: தங்கக் கிரீடத்தால் அழகுபடுத்தி, அருகம்புல் மாலையை அணிவிக்கலாம்.
    ஆயில்யம்: அருகம்புல் மாலை போதும்.
    மகம்: தங்கக் கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து, அருகம்புல் மாலையை அணிவிக்கவும்.
    பூரம்: கஸ்தூரி மஞ்சளால் அலங்கரித்து, தங்கக் கிரீடம் சார்த்தவும்.

    உத்திரம்: அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
    ஹஸ்தம்: குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
    சித்திரை: வெள்ளிக்கவசம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
    சுவாதி: தங்கக் கிரீடம் அணிவித்து அழகு பார்ப்பதுடன், அருகம்புல் மாலையும் சாற்றலாம்.

    விசாகம்: திருநீறு அலங்காரம் போதும்.
    அனுஷம்: கஸ்தூரி, மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை, ரோஜா மாலை சாற்றலாம்.
    கேட்டை : தங்கக்கிரீடத்தால் அழகுபடுத்தி திருநீறு அலங்காரம் செய்வதுடன் அருகம்பு-ல் மாலையும் சாற்றவும்.
    மூலம்: சந்தன அலங்காரமும், அருகம்புல் மாலை சாற்றலுமே போதுமானது.

    பூராடம்: தங்கக்கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றுங்கள்.
    உத்திராடம்: அருகம்புல் மாலையே போதும்.
    திருவோணம்: சுவர்ணத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சார்த்தவும்.
    அவிட்டம்: வெள்ளிக்கவசம் சார்த்தி, மலர் அங்காரம் செய்யலாம்.

    சதயம்: குங்கும அலங்காரத்தால் அலங்கரித்து, வெள்ளிக்கவசம் அணிவியுங்கள்.
    பூரட்டாதி: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
    உத்திரட்டாதி: ரோஜா மாலை அங்காரமே போதும்.
    ரேவதி: மலர்களால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக்கவசம் அணிவிக்கவும்.
    பிள்ளையார் பல்வேறு மரத்தின் அடியில் இருந்து பலவிதமாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார். எந்தெந்த மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் என்னென்ன சிறப்பு உண்டாகும் என்று பார்க்கலாம்.
    பிள்ளையார் பல்வேறு மரத்தின் அடியில் இருந்து பலவிதமாக பக்தர்களுக்கு அருள் புரிகிறார். எந்தெந்த மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் என்னென்ன சிறப்பு உண்டாகும் என்பது இங்கே:-

    வில்வமர விநாயகர்:
    தெற்கு நோக்கியவாறு இருந்தால் சிறப்புடையது. சித்திரை நட்சத்திரத்தன்று குடும்பத் தேவைக்கேற்ப மளிகைப் பொருட்களை, ஏழைக்குடும்பங்களுக்கு தானமாக அளித்து வில்வமர விநாயகரைச் சுற்றி வந்து வணங்கினால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர்.

    அரசமர விநாயகர்: மேற்கு நோக்கி இருப்பது சக்தி வாய்ந்ததாகும். பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்தால் நிலம் மற்றும் தோட்டத்தில் விளைச்சல் பெருகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். பணக்கஷ்டம் நிவர்த்தியாகும்.

    ஆலமர விநாயகர்: வடக்கு நோக்கி இருந்தால் சிறப்புடையது. நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று ஐந்து வகை சித்திரான்னங்களை (எலுமிச்சை, தயிர், பால், புளி, தேங்காய்) படைத்து தானமளித்தால் கடுமையான நோய்கள் விலகிவிடும்.

    வேப்பமரத்து விநாயகர்: கிழக்கு முகப்பிள்ளையார் விசேஷம் நிறைந்தவர். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஐந்து வித எண்ணெய்த் தீபமான பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் மனதுக்கேற்ற வரன் அமையும்.

    மாமர விநாயகர்: கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு மூன்று சுமங்கலிப் பெண்களுக்கு உடை, உணவு, அளித்து வந்தால் பகைமை, கோபம், பொறாமையால் பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர்பெறும்.

    புன்னைமர விநாயகர்: ஆயில்ய நட்சத்திரத்தில் இளநீர் அபிஷேகமும் செய்து நெசவுத்துணிகளை பிள்ளையாருக்கு அணிவித்து அதனை ஏழை நோயாளிகளுக்கு அளித்து வந்தால் கணவன்-மனைவியிடையே உள்ள மனக்கசப்பு நீங்கி தாம்பத்திய உறவு சீர்பெறும்.

    மகிழமர விநாயகர்: அனுஷ நட்சத்தித்தில் இந்த மகாகணபதிக்கு மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்து வந்தால் ராணுவம், வெளிநாடுகளில் உள்ளோர் நலம் பெறுவர். மகிழ மரப்பிள்ளையாரை முறைப்படி தொழில் செய்வினைகள் மற்றும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் பொறாமை, கண்திருஷ்டி நீங்கி, கவுரவமான வாழ்வு மலரும்.

    வன்னிமர விநாயகர்:
    அவிட்டம் நட்சத்திரந்தோறும் வன்னி விநாயகரை நெல்பொரியினால் அர்ச்சித்து அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண காரியத்தில் வரும் தடை நீங்கி, மகிழ்ச்சியான குடும்பம் அமையும். ஜாதகப் பொருத்தம் சரியாக இருந்தும், மணவாழ்க்கையில் தம்பதிகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மனக்கசப்போடு பிரிந்து வாழ்பவர்கள் சஞ்சலம் அகன்று சுகவாழ்வு காண்பார்கள். வன்னிமரப் பிள்ளையாரைக் காண்பதே அரிது. வன்னிமரத்திற்கு விசேஷ அம்சங்கள் உண்டு. வன்னி மரத்தடிப் பிள்ளையாரை வணங்கி நள தமயந்தி முன் வினை நீங்கி நலன்பெற்றதாக வரலாறு இருக்கிறது.
    எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்பாக கணபதி ஹோமம் செய்து அக்காரியத்தைத் தொடங்கினால் காரியங்கள் தடைகளின்றி சிறப்பாக நடைபெறும் என்பது ஐதீகம்.
    எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்பாக கணபதி ஹோமம் செய்து அக்காரியத்தைத் தொடங்கினால் காரியங்கள் தடைகளின்றி சிறப்பாக நடைபெறும் என்பது ஐதீகம்.

    கணபதி ஹோமத்தை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை நேரத்தில் செய்வது இன்னும் கூடுதல் பலன்களைத்தரும். தேன், பால், நெய் கலந்த கலவையை கணபதி ஹோமத்தில் இட்டால் ராஜ வசியம், அரசு பதவிகளைப் பெறலாம்.

    திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெற்று வளமோடு வாழ நெல் பொரி, திருமதுரம் கொண்டு வேள்வி செய்ய வேண்டும். தேன் கொண்டு ஹோமம் செய்தால் கடன் தொல்லைகள் நீங்குவதுடன், செல்வச் சிறப்போடு சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

    எடுத்துக் கொண்ட மந்திரம் சித்தி பெற வேண்டுமானால் நெய் அப்பத்தினால் ஹோமம் செய்ய வேண்டும். கொழுக்கட்டையினால் ஹோமம் செய்தால் தொட்டதெல்லாம் ஜெயம் தான். பொருள் வளம் பெற வேண்டுமெனில் கரும்புத் துண்டால் ஹோமம் செய்ய வேண்டும். நெய், தேங்காய்த்துண்டு, சத்துமாவு, அப்பம், மோதகம், கரும்புத்துண்டு, எள்ளுருண்டை, நெல் பொரி, அவல், வாழைப்பழம், வில்வ சமித்து, அருகம்புல், சர்க்கரைப் பொங்கல் இவைகளால் ஹோமம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    கடன் தொல்லையாலும், வறுமையாலும் வாடுபவர்கள் கருங்காலிக் குச்சியால் வேள்வி செய்தால் அவற்றிலிருந்து விடுபடலாம். கணபதி ஹோமத்தை பவுர்ணமி, மாதப் பிறப்பு, சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்தால், நாம் வேண்டும் பலன்கள் நிச்சயம் கிட்டும்.

    உங்களால் கணபதி ஹோமம் நடத்த முடியாவிட்டால் கணபதி ஹோமம் நடைபெறுகிற இடங்களுக்குச் சென்று ஹோமத்துக்குத் தேவையான முழுத்தேங்காய், பழவகைகள், மஞ்சள் கிழங்கு, குங்குமம், மலர் வகைகள், தாமரை மலர், சிவப்பு வஸ்திரம் போன்றவற்றை அவரவர் சக்திக்குத் தகுந்தவாறு வழங்கலாம். இது கணபதியின் கடைக்கண் பார்வைபட வழிவகுக்கும்.
    ×