search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thorana ganapathi"

    கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், கொடுத்த கடன் வசூல் ஆகாமல் திண்டாடுபவர்கள் ஸ்ரீதோரண கணபதிக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யலாம்.
    'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
    சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
    ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

    ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.

    வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்படுவோரும், கொடுத்த கடனை திரும்ப பெற முடியாமல் திண்டாடி வருவோருக்கும் ஒரு நல்ல வழியை ஏற்படுத்தி தருவார் தோரண கணபதி.
    மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி விரத வழிபாடு கை கொடுக்கும்.

    செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை விரதம் இருந்து வழிபடலாம்.

    இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் விரதம் இருந்து ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும்.

    மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.
    அகஸ்தியர் நாடி நூலில், பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ தோரண கணபதி பிரசன்ன துதியை தினமும் மூன்று முறை படித்துவர, கடன் பிரச்சினைகள் யாவும் நீங்கும்.
    ஸ்ரீ தோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், ருணம் எனும் கடன் தீரும். சக்தி தேவியர் தனியாகக் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப்புறமாக சன்னதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச-பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீ தோரண கணபதி.

    ஸ்ரீ தோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன. செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீ தோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து 6 வாரங்கள் குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீ தோரண விநாயகரை தரிசித்து அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.

    அத்துடன் கணபதியின் மேகலை-பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜெபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐந்து வகை பழங்களை படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து நிம்மதி பிறக்கும்.

    ஆறு ஞாயிற்றுக் கிழமைகள் தோரண கணபதி சன்னதிக்கு சென்று அவருடைய சன்னதிக்கு பின் புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, ஐந்து வகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களை பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் ஸ்ரீ சாரதாம்பாள் சன்னதியில் காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீ தோரண கணபதி, தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.

    ஆலயங்களுக்கு சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீ தோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ தோரண கணபதி பிரசன்ன துதியை தினமும் மூன்று முறை படித்துவர, கடன் பிரச்சினைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.
    ×