search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gambling"

    • இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
    • ரொக்கம் ரூ. 5,340 பறிமுதல் செய்தனர்.

     பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட, கரடிவாவியைச் சேர்ந்த ரவி (30),கார்த்தி (36),ஸ்ரீதர் (24), அம்மாசை (24), வடிவேல் (34) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரொக்கம் ரூ. 5,340 பறிமுதல் செய்தனர்.

    • கொடுவாய் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது.
    • காங்கயத்தை அடுத்த கொடுவாய் பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஊதியூா் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    காங்கயம்:

    காங்கயத்தை அடுத்த கொடுவாய் பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஊதியூா் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கொடுவாய் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது.இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட திருப்பூா் பகுதியை சோ்ந்த மணிகண்டன் (50), லோகநாதன் (61), ஆறுமுகம் (50), வாசுதேவன் (63), பிரபாகரன் (41), சரவணகுமாா் (38) உள்பட 13 பேரை கைது செய்த போலீசாா், அவா்களிடமிருந்த ரூ.1.80 லட்சத்தை பறிமுதல் செய்தனா். 

    • புதுவை உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாஹிர் உசேன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாஹிர் உசேன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாணர பேட்டை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஜாகிர் உசேன் மற்றும் போலீசார் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பெரியார் நகரை சேர்ந்த சாலமன் கொளத்தூர் பேட் சேர்ந்த முனியப்பனின் மகன் ராஜா என்கிற பொக்கை ராஜா , எல்லையம்மன் தோப்பு பகுதியில் சேர்ந்த சந்திரனின் மகன் சுதாகர் , நகராட்சி குடியிருப்பில் சேர்ந்த கணேஷ் , எல்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்த கண்ணனின் மகன் ஸ்ரீதர் , எல்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஜோசப்பின் மகன் சூசை என்கிற சூசைராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்திய சீட்டுகள் ரூ.5 ஆயிரத்து 690 ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    • வடசிறுவள்ளூர் பகுதியில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
    • வட சிறுவள்ளூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே 5 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடசிறுவள்ளூர் பகுதியில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது வட சிறுவள்ளூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே 5 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அப்போது போலீசார் வருவதைப் பார்த்து அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் விரட்டிச்சென்று 5 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 27), முருகன் (40), தேவபாண்டலத்தை சேர்ந்த கிருஷ்ணன் (29), சங்கராபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (48), முத்துசாமி (60) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் ேபாலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    • பணம் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த பெருமுகையில் பணம் வைத்து சூதா டுவதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பெருமுகை குடிநீர் தொட்டியின் பின்பகுதியில் மலையடிவாரத்தில் 6 பேர் சூதாடி கொண்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.
    • 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த பி. முட்லூர் பகுதியில் ஒரு கும்பல் சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக பரங்கி ப்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 10 பேர் கொண்ட கும்பல் தங்களது மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்திலேயே விட்டு விட்டு அனைவரும் தப்பித்து ஓடினார்கள்.

    இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்ற போது யாரும் சிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த 10 மோட்டார் சைக்கிள், 13 ஆயிரத்து 230 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்கால் நகர் பகுதியில், பணம் வைத்து சூதாட்டத்தில்(சீட்டுகட்டு) ஈடுபடுவதாக, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு ரகசியத்தகவல் சென்றது.

    புதுச்சேரி:

    சூதாட்டத்தில்(சீட்டுகட்டு) ஈடுப்படுவதாக, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அப்பகுதியைச்சேர்ந்த விக்னேஸ் (வயது23), சிவபாலன்(24),ராஜேஷ்(22), ராமன்(20), ஐயப்பன்(24) ரஞ்சித்(24) 6 பேர், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1000 மற்றும் சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • திருக்கோவிலூர் அருகே உள்ளமுருக்கம்பாடி கிராமத்தின் வனப் பகுதியில் காசு வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது சூதாடி கொண்டிருந்த 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதே சமயம் சூதாடியவர்களில் ஒருவரான திருவண்ணாமலை மாவட்டம் பெருமணம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மகன் மணிகண்டன் (வயது 26) என்பவர் மட்டும் போலீசில் சிக்கினார்.
    • 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்,அதில் மணிகண்டன் (வயது 26) என்பவர் மட்டும் போலீசில் சிக்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை அடுத்த முருக்கம்பாடி கிராமத்தின் வனப் பகுதியில் காசு வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் மதன்மோகன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்

    அப்போது போலீஸ் வருவதை கண்ட சூதாடி கொண்டிருந்த 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதே சமயம் சூதாடியவர்களில் ஒருவரான திருவண்ணாமலை மாவட்டம் பெருமணம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மகன் மணிகண்டன் (வயது 26) என்பவர் மட்டும் போலீசில் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் அங்கு சூதாடிய 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் சூதாடிய இடத்தில் இருந்து ரூ.150 பணமும் 6 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீழக்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம்-கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் கீழக்கரை அருகே முள்ளுவாடி தனியார் ஆசிட் கம்பெனி அருகில் சென்றபோது பொது இடத்தில் சிலர் கும்பலாக அமர்ந்திருந்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது 16 பேர் 3 குழுக்களாக அமர்ந்து பணம் வைத்துசீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

    போலீசாரை பார்த்ததும் தப்பி ஒட முயற்சித்தவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 300 ரொக்கம், 2 கார்கள், 106 பிளாஸ்டிக் டோக்கன், 12 செல்போன்கள், வெள்ளை மற்றும் சிமெண்ட் கலர் தரை விரிப்பு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக கீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சதக் நிஜாம் (38), அப்பாஸ் அலி (52), ஆர்.எஸ்.மங்கலம் சனவெளி கலைச்செல்வன் (31), கீழக்கரை லெப்பை தெரு ஹசன் (42), ஓ.கரிசல்குளம் ராஜு (32), கீழக்கரை ஆடறுத்தான் தெரு இஸ்மாயில் (50), பருத்திக்கார தெரு உசேன் (50) சாயல்குடி சத்துரவல்லி நகர் நாகராஜ் (41), மண்டபம் ரெயில்வே தெரு முத்துராமன் (53), வேதாளை தெற்கு தெரு முகமது அலி ஜின்னா (42), ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் ராமர் (33), ஆர் எஸ் மங்கலம் நிஜந்தன் (26), உச்சிப்புளி வேலுச்சாமி (43), கடலாடி ராஜாங்கம் (42), சுந்தரமடையான் குமரேசன் ஆகிய 16 பேரை ஏர்வாடி தர்கா போலீசார் கைது செய்தனர்.

    • மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை 100 அடி சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஜான்பால் நகர் உள்ளது. இப்பகுதியில் ஒரு மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவது உறுதியானது. மனமகிழ் மன்றத்தில் போலீசார் நுழைவது தெரிந்தவுடனே அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

    ஆனால் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதையடுத்து மனமகிழ் மன்ற உரிமையாளர் அருள் மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் என மொத்தம் 25 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் கைதானவர்களிடம் இருந்து 23 செல்போன்கள், 13 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட ரூ.2 லட்சம் ரொக்க பணத்தையும் கைப்பற்றினர். கைதான நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    புதுவையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடத்திய நபர் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
    • சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அத்திக்குளம் தெருவில் வசித்து வந்தவர் ரவி (வயது47) ஆவார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி சுப்பிரமணி நகர் பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவருடன் ரவி தனது வீட்டின் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்பொழுது ஏற்பட்ட தகராறில் மோகன் ரவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாராம். இதில், மயங்கி விழுந்த ரவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கிருந்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரவி பரிதாபமாக பலியானார்.

    இந்தச் சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீட்டு கட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத செயல்பாடுகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, புதுச்சேரியி்ல் இருந்து கடத்தி வரும் மது விற்பனை, கஞ்சா விற்பனை, சூதாட்டம் போன்றவைகளில் ஈடுபடும் நபர்களால் பண்ருட்டி பகுதியின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறது.

    இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், பண்ருட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சபியுல்லா ஆகியோர் பண்ருட்டி போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி பண்ருட்டி பகுதிகளில் மேற்கண்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பண்ருட்டி நகரில் தங்கும் விடுதிகளில் சூதாட்டம் நடப்பதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், புஷ்பராஜ், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் பண்ருட்டி நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் ஆய்வு செய்தனர். இதில் அங்கு ரூம்களை வாடகைக்கு எடுத்து பணத்தை வைத்து சீட்டு கட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணம், சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×