search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "friends"

    நண்பர்கள் தினத்தை ஒட்டி தனது தந்தை வைத்திருந்த ரூ.46 லட்சத்தை எடுத்து பள்ளி நண்பர்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு மாணவன் அள்ளிக்கொடுத்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபால்புர் பகுதியை சேர்ந்த கட்டுமான தொழில் செய்து வரும் நபரின் மகன் சமீபத்தில் வித்தியாசமாக நண்பர்கள் தினத்தை கொண்டாடியுள்ளார். 

    தனது தந்தை பீரோவில் வைத்திருந்த ரூ.60 லட்சம் பணத்தில் ரூ.46 லட்சம் திருடிய அந்த மாணவன், தனது பள்ளி மற்றும் டியூசன் நண்பர்களுக்கு நண்பர்கள் தினத்தை ஒட்டி பரிசுகளை அள்ளி கொடுத்துள்ளார். தினக்கூலி ஒருவரின் மகனுக்கு ரூ.15 லட்சம், தனது வீட்டுப்பாடத்தை முடிக்க உதவி செய்த நண்பனுக்கு ரூ.3 லட்சம் என வாரி இறைத்துள்ளார்.

    வெறுங்கையோடு அனைவரும் போய் விடக்கூடாது என்பதற்கான வகுப்பில் உள்ள அனைவருக்கும் ஸ்மார்ட்போன் வாங்கி பரிசளித்துள்ளார். மேலும், டியூசன் நண்பர்கள் அனைவருக்கும் வெள்ளி கைசெயின் வாங்கி கொடுத்து தனது அன்பை காட்டியுள்ளார்.

    இவரிடம் பரிசாக பெற்ற தொகையில் ஒரு மாணவன் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். பீரோவில் இருந்த பணத்தை காணாததால் தந்தை போலீசில் புகாரளித்துள்ளார். வெளியில் இருந்து யாரும் திருடிய தடயங்கள் இல்லாததால் போலீசார் வீட்டில் உள்ள நபர்களை சந்தேக வளையத்தில் கொண்டு வந்தனர்.

    அப்போதுதான், வாரி வழங்கிய வள்ளளின் செயல்பாடுகள் பற்றி போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து, அந்த மாணவனிடம் பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரையும் பட்டியல் போட்டு அவர்களிடம் இருந்த பரிசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ரூ.15 லட்சம் பரிசாக பெற்ற மாணவன் மட்டும் தற்போது தலைமறைவாக உள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் மரணத்துக்கு பழிவாங்குவதற்காக அவரது நண்பர்கள் 50 பேர் ராணுவம் மற்றும் போலீசில் இணைய ஆயத்தமாகி வருகின்றனர். #JammuKashmir #RevengeforFriend
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் மெந்தார் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் அவுரங்கசீப். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூன் மாதத்தில் ரமலான் விடுமுறையின் போது, தனது சொந்த கிராமத்துக்கு வந்த அவுரங்கசீப் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மட்டுமின்றி நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. தனது நண்பரின் மரணத்தில் தீரா துயரடைந்த அவுரங்கசீப்பின் நண்பர்கள் அந்த பயங்கரவாதிகளை பழிவாங்குவது என முடிவு செய்தனர். மேலும், இந்தியாவில் உலவும் பயங்கரவாதத்தையும் அடியோடு அழிக்க அவர்கள் உறுதிகொண்டனர்.



    இதனால், சவூதியில் தாங்கள் பார்த்த வேலையை கைவிட்டு 50 பேர் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். நண்பரை கொன்ற பயங்கரவாதிகளை அடியோடு அழிப்பதையே உயர்ந்த லட்சியமாக கொண்ட அவர்கள் தற்போது ராணுவம் மற்றும் காவல்துறையில் இணைய ஆயத்தமாகி கொண்டிருக்கின்றனர்.

    நண்பரின் உயிர் இழப்புக்கு காரணமான கொடியவர்களை பழிவாங்க முறையான பாதையை கையில் எடுத்து போராட இருக்கும் இந்த 50 பேருக்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து பாராட்டும், ஆதரவும் குவிந்தவண்ணம் உள்ளது. #JammuKashmir #RevengeforFriend
    பாகிஸ்தானில் ஆகஸ்ட் 11-ம் தேதி இம்ரான் கான் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த மாதம் 25-ம் தேதி நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முதன்முறையாக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இருப்பினும் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கைவசம் இல்லாததால், சுயேட்சை மற்றும் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பதவியேற்பு விழாவில் இந்திய பிரதமர் மோடி உட்பட பல்வேறு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

    மோடிக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.



    இந்நிலையில், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு ஊடகங்களில் பேசிய தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஃபவத் சவுத்ரி, முன்னர் இம்ரான் கானின் நண்பர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், நவ்ஜோத் சித், மற்றும் இந்தி நடிகர் அமீர் கான் ஆகியோருக்கும், இந்தியா, சீனா உட்பட சார்க் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது.

    இதையடுத்து தற்போது அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளதாவும், வெளிநாட்டு தலைவர்களை விடுத்து, நண்பர்களை மட்டும் அழைத்து, தனது பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த இம்ரான் கான் விரும்புவதாவும் ஃபவத் சவுத்ரி தெரிவித்துள்ளார். #Pakistan #ImranKhan
    ஐ.டி.ஐ.யில் சேர்ந்ததற்கு நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்த மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி கே.கே.நகரை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் சக்திவேல் (வயது 22). 10-ம் வகுப்பு வரை படித்திருந்த இவர் இந்த ஆண்டு ஐ.டி.ஐ.யில் சேர்ந்துள்ளார்.

    இவருடைய நண்பர்கள் ஜீவாநகரை சேர்ந்த வெற்றிவேல் (18), கே.கே.நகரை சேர்ந்த நவீன்குமார் (19). வெற்றிவேல் வேலூரில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டும், நவீன்குமார் 2-ம் ஆண்டும் படித்து வருகிறார்கள். ஐ.டி.ஐ.யில் சேர்ந்ததற்காக சக்திவேல் அவரது நண்பர்களுக்கு பார்ட்டி வைப்பதாக கூறியுள்ளார்.

    நேற்று இரவு 7 மணி அளவில் சக்திவேல், வெற்றிவேல், நவீன்குமார் மற்றும் 3 பேர் என மொத்தம் 6 பேர் வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றனர். அங்குள்ள பாரில் அவர்கள் மதுகுடித்தனர்.

    அ.தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான அந்த பாரில் வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (38) என்பவர் சிக்கன், முட்டை விற்பனை செய்து வந்தார்.

    நேற்று அவரது நண்பர் சதுப்பேரியை சேர்ந்த சதீஷ்குமார் (29) வந்து மது குடித்தார். அப்போது சக்திவேலின் நண்பர்களுக்கும் சதீஷ் குமாருக்கும் இடையே போதையில் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர்.

    பின்னர் சக்திவேல் அவரது நண்பர்கள் 6 பேரும் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். 3 பேர் ஒரு மோட்டார்சைக்கிளில் முதலில் சென்றுவிட்டனர். சக்திவேல், வெற்றிவேல், நவீன்குமார் ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    அப்போது மீண்டும் சதீஷ்குமாருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், ஆறுமுகம் ஆகியோர் சக்திவேல், வெற்றிவேல், நவீன்குமார் ஆகிய 3 பேரையும் மதுபாட்டில் மற்றும் கத்தியால் சரமாரியாக குத்தினர்.

    இதில் 3 பேருக்கும் வயிற்றில் குத்து விழுந்து சக்திவேலுக்கு குடல் வெளியே வந்துவிட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

    மற்ற 2 பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சி.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பார் தொழிலாளி ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர் சதீஷ்குமாருக்கு மது பாட்டில்களை எடுத்து கொடுத்தது தெரியவந்துள்ளது.

    சதீஷ்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×