search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer died"

    சிறுகனூர் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே உடல் நகுங்கி பலியானார்.
    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் சிறுகனூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). விவசாயி. இவர் இன்று காலை சொந்த வேலை காரணமாக கொணலைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பினார்.சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சிறுகனூர் பிரிவு ரோட்டில் நடந்து சென்ற போது, சென்னையில் இருந்து  திருச்சி நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக கனகராஜ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீசார் விரைந்து சென்று கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுகனூர்  போலீசார் வழக்குபதிவு செய்து கார் டிரைவர் அஸ்வினை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    கயத்தாறு அருகே நடந்து சென்ற விவசாயி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளத்தை சேர்ந்தவர் சாமுவேல்.  இவரது மகன் ஆபிரகாம் (வயது 55). விவசாயியான இவர் கடந்த 4-ந் தேதி ஆத்திகுளம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். இந்நிலையில் அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. 

    இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் இறந்தார். இது குறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கண்டமங்கலம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கண்டமங்கலம்:

    கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிபுதுப்பட்டு சின்ன காலனியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 45) விவசாயி. இவர் நேற்று இரவு திடீரென வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பழனியாண்டி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பழனியாண்டிக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த பழனியாண்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
    தா.பழூர் அருகே பைக் விபத்தில் பலத்த காயம் அடைந்த விவசாயி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழ மிக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாறன், விவசாயி. இவர் சம்பவத்தன்று ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மைத்துனர் மனைவியை பார்ப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி - ஜெயங்கொண்டம் சாலை சூசையப்பர்பட்டினம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த கல்லில் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு  தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். 

    இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மாறன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாடானை அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து அவரது சகோதரர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொண்டி:

    திருவாடானை அருகே கருங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது53), விவசாயி. இவருக்கும், மனைவி கலா(50)வுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி அதிகாலை அழும் சத்தம் கேட்டு சுப்பிரமணியத்தின் சகோதரர் வேலு பார்த்தபோது கலா மற்றும் அவரது உறவினர்கள் சுப்பிரமணியன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    அருகில் சென்று பார்த்த போது சுப்பிரமணியத்தின் தலை மற்றும் கை-கால்களில் ரத்தக் காயம் இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த வேலு (55) திருவாடானை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    தகவலின்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

    வாடிப்பட்டி:

    வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி பங்களா சோழவந்தான் சாலையைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 52), விவசாயி.

    நேற்று இவர், மோட்டார் சைக்கிளில் அய்யன் கோட்டை சென்றார். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அணுகு சாலையில் சென்ற இளங்கோவன், அங்கிருந்த வேகத்தடையை கவனிக்கவில்லை.

    இதனால் வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. அதில் இருந்த இளங்கோவன் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலேயே இளங்கோவன் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேப்பூர்:

    வேப்பூர் அருகே உள்ள விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல்(வயது 50) விவசாயி. இவர் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூர் சென்றார். பின்னர் அங்கு வேலை யை முடித்துவிட்டு அங்கிருந்து விளம்பாவூருக்கு அதே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    பெரியநசலூர் பஸ் நிறுத்தம் அருகே சேலம்-விருத்தாசலம் சாலையில் வந்தபோது பின்னால் வந்த வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் தூக்கிவீசப்பட்ட ராஜவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விபத்து குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×