search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer death"

    முதுகுளத்தூரில் பலத்த காற்று எதிரொலியால் கட்டிட சாரம் சரிந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    முதுகுளத்தூர்:

    கஜா புயல் நேற்று கரையை கடந்த பின்பு உள் மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை காற்றும் மழையுமாக இருந்தது. முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத் தூவலைச் சேர்ந்தவர் பதினெட்டாம்படியான் (வயது70).

    இவர் நேற்று மழை பெய்தபோது வெளியே சென்றார். அப்போது பலத்த காற்று வீசியது. இதில் பதினெட்டாம்படியான் வீட்டின் அருகே உள்ள கட்டிடத்தின் சாரம் சரிந்து அவர் மீது விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விராலிமலை அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    விராலிமலை:

    விராலிமலை அருகேயுள்ள தேத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 67). விவசாயி இவர் சம்பவதன்று திருச்சி -மதுரை நான்கு வழிச்சாலை  விராலிமலை கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு அருகே தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியிலிருந்து மதுரை நோக்கிசென்ற கார் கருப்பையா மீது மோதியது. இதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார்.
     
    இது குறித்து தகவல் அறிந்ததும் விராலிமலை போலீசார் விரைந்து சென்று கருப்பையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசுமருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து கார் டிரைவர் மதுரையைச் சேர்ந்தராஜ் பிரபுவை(24) கைது செய்தனர்.
    முசிறி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலியானார்.
    முசிறி:

    திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள உமையாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகமுத்து (வயது 67), விவசாயி. இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையாக காய்ச்சல் இருந்துவந்தது. இதையடுத்து அவர் முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    பின்னர் நாகமுத்துவை அவரது குடும்பத்தினர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ரத்தம் மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று நாகமுத்து சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பெரும்சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கிராமங்கள் தோறும் சுகாதார பணிகளை மேம்படுத்துவதோடு மருத்துவ குழுவினர்கள் சார்பில் முகாம் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சையும், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலியான சம்பவம், குடியாத்தம் பகுதியில் உள்ள பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது. #Swineflu

    குடியாத்தம்:

    குடியாத்தம் பீமாபுரத்தில் மேல்ஆலத்தூர் ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ராமமூர்த்தி (வயது43), விவசாயி. இவருக்கு கல்பனா என்ற மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

    இந்த நிலையில் ராமமூர்த்தி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உள்ளூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பிறகும், காய்ச்சல் தீவிரமடைந்ததால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளித்தும் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை.

    இதையடுத்து, சென்னை பெரும்பாக்கம் சேரன் நகரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, ராமமூர்த்தியின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், பன்றிக்காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பன்றிக்காய்ச்சலுக்கு விவசாயி பலியான சம்பவம், குடியாத்தம் பகுதியில் உள்ள பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது. பீமாபுரத்தில் நகராட்சி நிர்வாகம் தீவிர சுகாதார பணிகளை செய்து வருகிறது.

    மேலும், மருத்துவ குழு முகாமிட்டு கிராம மக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் பலருக்கு காய்ச்சல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    அவர்கள் எதுபோன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Swineflu

    புள்ளம்பாடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    கல்லக்குடி:

    அரியலூர் மாவட்டம் செம்பியகுடி கிராமத்தை சேர்ந்தவர் மருதை மகன் ராஜாசிதம்பரம்(வயது36) விவசாயி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை விஷயமாக திருச்சிக்கு வந்தார். பின்னர் ஊருக்கு திரும்பினார். அப்போது திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் பிரபு(27) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த ஜார்ஜ் மகன் ஆரோக்கியராஜ்(27) ஆகிய இருவரும் கோவண்டாகுறிச்சி கிராமத்தில் இருந்து புள்ளம்பாடி நோக்கி எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    இரண்டு மோட்டார் சைக்கிள்களும் வேகமாக வந்து எதிர்பாராதவிதமாக மோதியதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    இதில் ராஜா சிதம்பரத்தை அந்த வழியாக சென்ற காரில் ஏற்றி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பலத்த காயமடைந்த பிரபு லால்குடி அரசுமருத்துவமனையிலும்,ஆரோக்கியராஜ் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ராஜாசிதம்பரம் உறவினர் பாஸ்கர் கொடுத்த புகாரின்பேரில் கல்லக்குடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துகுமார், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜாசிதம்பரத்திற்கு தேவி என்ற மனைவியும், 3 வயது மற்றும் 8 மாதம் ஆன 2 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    சிவகிரி அருகே நடுவை வேலைக்கு ஆட்கள் தேடி சென்ற விவசாயி கார் மோதி பலியான சம்பவம் குறித்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகிரி:

    புளியங்குடி நீர்பாய்ச்சிமாறன் தேருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 27). விவசாயி. இவர் தனது வயல் நடுவை வேலைக்கு ஆட்கள் அழைத்துவர நேற்று இரவு சிவகிரி அருகே உள்ள ஆத்துவழி பகுதிக்கு சென்றார்.

    பின்னர் ஊர் திரும்புவதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து கொல்லம் நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார், பலியான கிருஷ்ணன் உடலை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஹரீஷ் (54) என்பவரை கைது செய்தனர்.

    நடுவை வேலைக்கு ஆட்கள் தேடி சென்ற விவசாயி கார் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    விழுப்புரம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 60) விவசாயி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ஞானசீலன் (48) என்பவரும் மொபட்டில் பிடாகத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்று இரவு 9 மணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    விழுப்புரம் ஊழியர் நகர் குடியிருப்பு பகுதிக்கு சென்றபோது மதுரையில் இருந்து ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் திடீரென்று முன்னால் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து விழுந்த புருஷோத்தமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஞானசீலன் படுகாயத்துடன் உயிர் தப்பினார். மேலும் அந்த காரை ஓட்டிவந்த சுந்தரபாண்டியன் (36) என்பவரும் காயம் அடைந்தார்.

    விபத்து நடந்த ஒரு சில வினாடிகளில் பின்னால் இருந்து வந்த ஒரு மினி வேனும் இந்த கார் மீது மோதியது. இதில் காரும் வேனும் பலத்த சேதம் அடைந்தன. வேனில் இருந்த சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (21) என்பவரும் காயம் அடைந்தார்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுந்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

    அங்கு விபத்தில் காயம் அடைந்த ஞானசீலன், பிரகாஷ், சுந்தரபாண்டியன் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ஓமலூர் அருகே தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த விவசாயை மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சக்கர செட்டியப்பட்டி  ஊராட்சி கோபிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன் (எ) சேட்டு (வயது 44). விவசாயி. இன்று காலை இவரது மஞ்சள் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார். இவரது மஞ்சள் தோட்டத்தில் உள்ள மின்சார கம்பத்தில் இருந்து மின்வயர் அறுந்து தண்ணீரில் விழுந்தது. தண்ணீர் பாய்ச்சும் போது மின்சாரம் தாக்கி சேட்டு சம்பவ இடத்தில் மயங்கி கிடந்தார். தண்ணீர் பாய்ச்ச சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது மனைவி தோட்டத்தில் சென்று பார்த்தார் அங்கு அவர் மயங்கி கிடந்தார்.  

    இதைபார்த்த அவர் மனைவி கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து டிரான்ஸ் பார்மரை ஆப் செய்து விட்டு, அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சேட்டு இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, மின் கம்பத்தில் உள்ள கம்பிகள் பழுதாகியுள்ளதாக வெள்ளாளப்பட்டி மின்சார வாரியத்தில் பல முறை முறையிட்டும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததாகவும். இதனால் பழுதான மின் கம்பி அறுந்து  விழுந்து மின்சாரம் பாய்ந்து இறந்ததாக கூறினர். 

    இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சேட்டுக்கு வெண்ணிலா என்ற மனைவியும், சண்முகி, தரணிகா என்ற இரண்டு மகள், சர்வேஷ் என்ற மகனும் உள்ளனர்.
    எடப்பாடி அருகே வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த ஆவணிப்பேரூர் கீழ்முகம் ஊராட்சிக்கு உட்பட்ட போடிநாயக்கன்பட்டி, மலையம்பழத்தான் வலவு பகுதியை சேர்தவர் செங்கோடன் (வயது 60), விவசாயி.

    இவர் இன்று காலை தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவருடன், விவசாய நிலத்திற்கு உரம் வாங்குவதற்காக அருகில் உள்ள பக்கிரி காட்டுவளவு பகுதிக்கு மொபட்டில் சென்றார்.

    அப்போது எடப்பாடி புறவழிச் சாலையை கடக்க முயன்றபோது பிரதான சாலையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காகமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செங்கோடன் சம்பவ இடத்திலேயே பலியானர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செங்கோடன் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தினை தேடி வருகின்றனர்.

    சிங்காரப்பேட்டை அருகே தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிய போது மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள மூன்றம்பட்டியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருடைய மகன் ஞானவேல்(வயது28). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்று தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் மீது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய அண்ணன் முனிராஜ் ஞானவேலை சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ஞானவேல் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் மின்சாரம் தாக்கி பலியான ஞானவேலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த ஞானவேலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது. 
    காவேரிப்பட்டணம் அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    காவேரிபட்டிணம்:

    காவேரிபட்டிணம் அடுத்த மலையாண்டள்ளியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது40). இவரது மனைவி வனிதா (வயது30) மற்றும் இவர்களது மகன் ராஜேஷ் கன்னா (வயது 14).

    இவர் நேற்று மாலை 4 மணிக்கு வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிவிட்டு மாலை 4 மணியளவில் போச்சம்பள்ளியில் இருந்து காவேரிப்பட்டணத்திற்கு தனது இருசக்கர மோட்டர் சைக்கிளில் திரும்பினார். அப்போது அவர் மலையாண்டள்ளி காலனி அருகே வரும்போது எதிரே வந்த அரசு பேருந்து (டவுன்பஸ்) எதிர்பாராத விதமாக இருசக்கர மோட்டர் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டது.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு செல்லும் வழியில் கோவிந்தசாமி உயிர் இழந்தார்.

    பின்னர் பிரேதத்தை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பண்ருட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    பண்ருட்டியை அடுத்த பண்டாரக்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 63), விவசாயி. இவர் தனது வயலில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கண்ணன் இறந்தார்.

    இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் கண்ணனுக்கு வயிற்று வலி இருந்தது இதன் காரணமாக அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    ×