search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Explanation"

    • சின்ன வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
    • வெங்காய விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. இந்த பகுதி விவசாயிகளின் முக்கிய விவசாயமாக சின்ன வெங்காய சாகுபடி உள்ளது.இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சின்ன வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் வெங்காய விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.

    இந்தநிலையில் மழையால் சின்னவெங்காயத்தில் ஏற்படும் பூஞ்சை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து வேளாண்மை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தற்போது 40 - 50 நாள் வயதுடைய சின்னவெங்காய பயிர்கள் சாகுபடியில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் குளிர்ந்த காற்றுடன் தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதனால் ஒரு சில இடங்களில் சின்னவெங்காய பயிர்களில் பூஞ்சை நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.நோய் தாக்குதல் ஆரம்ப கட்டமாக இருந்தால் 10 லிட்டர் நீரில் டிரைக்கோடெர்மா விரிடி, பேசிலஸ் சப்டிலிஸ் 50 மி.லி. என்ற அளவில் கலந்து வேர் பாகம் நனையுமாறு தெளிக்கவேண்டும்.

    கார்பெண்டாசிம், மாங்கோசெப் பூஞ்சாணக்கொல்லி கலவையை 20 மி.லி. ஐ, 10 லிட்டருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். இதற்கு மாற்றாக, புரோபிகோனசோல், 25 ஈசி, 20 மி.லி., ஐ 10 லிட்டர் வீதம் தெளிக்கலாம். ஏழு நாட்கள் இடைவெளியில், இருமுறை தெளிக்க வேண்டும். நோய் தாக்குதல் தீவிரம் அடைந்திருந்தால் ஏக்கருக்கு, 500 கிராம் கார்பெண்டாசிம் மற்றும் மாங்கோசெப் பூஞ்சாணக்கொல்லி கலவையை, 25 கிலோ அமோனியம் சல்பேட் உடன் கலந்து அடி உரமாக போட வேண்டும். இவ்வாறு வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மானாமதுரை அருகே அரசுத்துறை புகைப்பட கண்காட்சி நடந்தது.
    • அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது? யாரை அணுகி பெறவேண்டும்? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், எம்.கரிசல்குளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடந்தது.

    இதில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன. அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது? யாரை அணுகி பெறவேண்டும்? என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அலுவலர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

    தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘நாக்கை அறுத்து விடுவேன்’ என்று நான் தவறுதலாக உச்சரித்து விட்டேன் என்று அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம் அளித்துள்ளார். #ADMK #MinisterDuraikannu
    கபிஸ்தலம்:

    தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 25-ந்தேதி தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் ஒரு வார்த்தை கூறி விட்டேன். “தமிழகத்தில் நல்லதொரு பொற்கால ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் பற்றியும், இந்த அரசை பற்றியும் தவறாக கூறுபவர்களின் நாக்கு அழுகி விடும் என்று கிராமத்து பாணியில் கூறுவதற்கு பதிலாக ‘நாக்கை அறுத்து விடுவேன்’ என்று தவறுதலாக உச்சரித்து விட்டேன்”. இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterDuraikannu

    ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு அந்நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கையில், மார்ச் 27-ம் தேதியில் இருந்து முதல் உலை இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.#bansterlite #sterliteprotest
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த 1993-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பின் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு அப்போது இருந்தே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிறுவனத்திலிருந்து வெளிவந்த கழிவுகள் காரணமாக அப்பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிகப்பட்டனர்.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக ஒப்புதல் வேண்டி விண்ணப்பித்திருந்தது. இதனை எதிர்த்து கடந்த 100 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் மக்களின் போராட்டம் கலவரமாக வெடித்ததில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

    இந்நிலையில், பங்கு முதலீட்டாளர்கள் வேதாந்தா குழுமத்தின் பங்குகளை வாங்குவதில் தயக்கம் காட்ட துவங்கியுள்ளனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகளுக்கு எழுத்துப்பூர்வமான விளக்கம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த மார்ச் 27-ம் தேதி இருந்து முதல் உலை இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு முதல் உலை மூடப்பட்டதாகவும், மூடப்பட்ட உலையின் தற்போதைய மதிப்பு ரூ.2100 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வெளியான பின்பே முடிவு தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #bansterlite #sterliteprotest
    ×