search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Comment"

    • திடீரென தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டிற்கு சென்றார்.
    • அண்ணாமலையும் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு சால்வை அணிவித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டியை பூர்வீகமாக கொண்டவர் மறைந்த துளசி அய்யா வாண்டையார். இவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். கிருஷ்ணசாமி வாண்டையார் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் சம்பந்தி.

    இந்நிலையில், நேற்று மாலை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவையாறில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் மாலையில் தஞ்சையில் தான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து திடீரென தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டிற்கு சென்றார்.

    அவருக்கு கிருஷ்ணசாமி வாண்டையார் ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். அப்போது அண்ணாமலையும் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு சால்வை அணிவித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    பின்னர் கிருஷ்ண சாமியும், அண்ணாமலை மட்டும் தனி அறைக்கு சென்று சில நிமிடங்கள் பேசி கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து வெளியே வந்த அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீண்ட காலமாக கிருஷ்ணசாமி வாண்டையாரை பார்க்க ஆசை. சென்னையில் சந்தித்தபோது, நான் தஞ்சாவூருக்கு வரும்போது, உங்களது வீட்டுக்கு வந்து காபி அருந்துகிறேன் என கூறினேன். அதன்படி வந்துள்ளேன்.

    இவர்களது குடும்பத்தின் மீது எங்களது தலைவர்கள் எல்லோருக்கும் பெரிய மரியாதை உண்டு. நான் தேர்தல் பிரசாரத்துக்கு வரும்போது மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளேன். இந்த சந்திப்பை எல்லாம் அரசியல் வட்டத்துக்குள் போட்டு அடைக்க வேண்டாம். இதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து கிருஷ்ணசாமி வாண்டையார் கூறுகையில்:-

    நான் காங்கிரஸ் கட்சியை விட்டு, பா.ஜனதாவில் இணையமாட்டேன். எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் சந்திக்க வந்துள்ளனர். இதில் வேறு ஏதும் உள்நோக்கம் கிடையாது என்றார். இந்த சந்திப்பின்போது பா.ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்.
    • கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் விவரங்கள் கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30-ந் தேதி ( புதன்கிழமை ) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்க ழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை மட்டும் சுருக்கமாக தெரிவிக்க வேண்டும்.

    கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை கூட்டம் நடைபெறும் நாளில் காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்ற பின் மனுக்களை வழங்க வேண்டும் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • புதுச்சேரி முதல் மந்திரியுடன் சகோதரியாக இணைந்து பணியாற்றுகிறேன்.
    • அனைவரும் உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் நடைபெற்ற ஒரு சமுக சேவை விருது வழங்கும் விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது,

    தஞ்சை மண் மிகுந்த சிறப்புக்குரியது. நான் வாழ்க்கை பாடத்தை தஞ்சையில் தான் கற்றுக் கொண்டேன். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்கள் மிகுந்த அன்பு செலுத்துபவர்கள். அவர்களைப் பார்த்துதான் எனக்கு பொது வாழ்வின் மீது பற்றுதல் ஏற்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

    புதுவையிலும் அன்போடு மக்கள் பழகி வருகிறார்கள். பலர் நான் ஆளுநராக இருந்து அரசியல் செய்வதாக சொல்லுகிறார்கள். அதே நேரத்தில் புதுவை முதல்வர் என்னிடம் சகோதர உணர்வோடு பழகி வருகிறார். புதுச்சேரியில் முதல்வருக்கு, நான் சகோதரியாக இருந்து ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறோம்.

    தெலுங்கானாவில் முதல்வர் என்னை எதிரியாக பார்க்கிறார். அனைவரும் உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும். உழைப்பு இருந்தால் எவரும் முன்னுக்கு வரலாம். அதே நேரத்தில் ஏழைகளுக்கும் சேவை செய்ய வேண்டும். ஏழைகளுக்கு சேவை இறைவனுக்கு செய்யும் சேவை.

    இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

    நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக மாவட்டச் செயலாளர் இரா.காமராஜ் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்ததால் வைரலாக பரவியது.
    • இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    உத்திரபிரதேசம்:

    இன்ஸ்டாகிராமில் லைக்ஸ், கமெண்ட்ஸ், பெற்று அனைவரிடமும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் எந்த சாகசத்தையும் செய்யத் தயங்குவதில்லை. சிலர் மலைகளில் ஏறி வீடியோ எடுக்கிறார்கள்.

    ரெயில் தண்டவாளத்தில் ஆபத்தான நிலையில் வீடியோ பதிவு செய்கிறார்கள். ஒரு சிலர் ரெயில்வே பிளாட்பாரத்தில் நடனம் ஆடுகின்றனர்.

    இதுபோல பிரபலமாகும் ஆசையில் இளம்பெண் ஒருவர் ரூ.15 ஆயிரம் இழந்துள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், வர்ணிகா பிரயாக் மாவட்டத்தில் உள்ள சிவிலியன் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண்.

    இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என ஆசைப்பட்டார். மணப்பெண் போல் உடை அணிந்து சொகுசு கார் மீது முன்னால் அமர்ந்து பிரபலமான பாடலுக்கு நடனமாடினார். முக்கிய சாலைகளில் சென்று வீடியோவை பதிவு செய்தார்.

    இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டார். இதனை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்ததால் வைரலாக பரவியது.

    ஒரு சிலர் இது குறித்து போக்குவரத்து போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

    இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். வீடியோவில் இளம்பெண் அமர்ந்து சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து இளம்பெண்ணின் விவரங்களை கண்டுபிடித்தனர்.

    போக்குவரத்து விதிகளை மீறி இளம்பெண் முக்கிய சாலைகளில் காரின் மீது அமர்ந்து வீடியோ பதிவு செய்ததாக ரூ.15,500 அபராதம் விதித்தனர். இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என இளம்பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

    • பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா பள்ளியில் உலக புத்தக தினவிழா நடந்தது.
    • தாம் படித்த புத்தகங்கள், அதன் மூலம் கற்றுக்கொண்ட கருத்துக்களை சக மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் உலக புத்தக நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி குழுமத் தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா மற்றும் ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்கள் பள்ளி நூலகம் சென்று தமக்குப்பிடித்த நாளிதழ், பிரபல எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள், உலக அதிசயங்கள் குறித்த புத்தகங்கை படித்தனர்.

    தாம் படித்த புத்தகங்கள், அதன் மூலம் கற்றுக்கொண்ட கருத்துக்களை சக மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில், நாளை 429 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்கிறது.
    • இதில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்யலாம்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான நாளை (26-ந் தேதி) அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும். கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தை ஒப்பிட்டு விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிரதமரின் குடியிருப்பு திட்ட பயனாளிகள் குறித்து விவாதித்தல். அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் போன்ற பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘நாக்கை அறுத்து விடுவேன்’ என்று நான் தவறுதலாக உச்சரித்து விட்டேன் என்று அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம் அளித்துள்ளார். #ADMK #MinisterDuraikannu
    கபிஸ்தலம்:

    தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 25-ந்தேதி தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் ஒரு வார்த்தை கூறி விட்டேன். “தமிழகத்தில் நல்லதொரு பொற்கால ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் பற்றியும், இந்த அரசை பற்றியும் தவறாக கூறுபவர்களின் நாக்கு அழுகி விடும் என்று கிராமத்து பாணியில் கூறுவதற்கு பதிலாக ‘நாக்கை அறுத்து விடுவேன்’ என்று தவறுதலாக உச்சரித்து விட்டேன்”. இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterDuraikannu

    ×