search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Duraikannu"

    தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ‘நாக்கை அறுத்து விடுவேன்’ என்று நான் தவறுதலாக உச்சரித்து விட்டேன் என்று அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம் அளித்துள்ளார். #ADMK #MinisterDuraikannu
    கபிஸ்தலம்:

    தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 25-ந்தேதி தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் ஒரு வார்த்தை கூறி விட்டேன். “தமிழகத்தில் நல்லதொரு பொற்கால ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் பற்றியும், இந்த அரசை பற்றியும் தவறாக கூறுபவர்களின் நாக்கு அழுகி விடும் என்று கிராமத்து பாணியில் கூறுவதற்கு பதிலாக ‘நாக்கை அறுத்து விடுவேன்’ என்று தவறுதலாக உச்சரித்து விட்டேன்”. இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterDuraikannu

    ஆட்சி கவிழ்ந்து விடும் என்று தினமும் குடுகுடுப்பைக்காரன் போல் தினகரன் பேசி வருகிறார் என்று வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறினார். #MinisterDuraikannu
    தஞ்சாவூர்:

    ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் சிங்கள ராணுவத்துக்கு உதவி புரிந்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இலங்கையில் நடந்த இறுதிப்போருக்கு இந்தியா உதவி செய்தது என்று ராஜபக்சே வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரை போர் குற்றவாளி ஆக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தவர் ஜெயலலிதா. இதேபோல, போர் குற்றத்திற்கு துணைபோன தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரையும் போர் குற்றவாளிகளாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

    ஊழலை கண்டு பிடித்தவர்கள் தி.மு.க.வினர் தான். மக்களுக்கு வழங்கப்பட்ட கோதுமையில் ஊழல், விவசாயத்திற்காக பூச்சி மருந்து வழங்கியதில் ஊழல், மின்சாரம், நிலக்கரி பேரத்தில் ஊழல் என அனைத்திலும் ஊழல் செய்தவர்கள்

    தி.மு.க.வினர். லஞ்சத்தில் திளைத்தவர்கள் தி.மு.க.வினர். இதனை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடக்கிறது.

    வேளாண்மைத்துறை, உள்ளாட்சித்துறை என அனைத்திலும் வளர்ச்சி. வறட்சியிலும் வளர்ச்சி கண்டு வருகிறது தமிழக அரசு.

    இந்த ஆட்சி இன்றைக்கு கவிழ்ந்து விடும், நாளைக்கு கவிழ்ந்து விடும் என்று தினமும் குடுகுடுப்பைக்காரன் போல் தினகரன் பேசி வருகிறார். இந்த ஆட்சியை, கட்சியை எவராலும் அசைக்க முடியாது. இந்த ஆட்சியை லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #MinisterDuraikannu
    பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பேரணி தஞ்சை பழைய பஸ்நிலையம் முதல் திலகர் திடல் வரை இன்று காலை நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி, சுகாதாரத்துறை, பேரூராட்சி மற்றும் ஊராட்சி வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் சார்பில் பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பேரணி தஞ்சை பழைய பஸ்நிலையம் முதல் திலகர் திடல் வரை இன்று காலை நடைபெற்றது.

    இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலைவகித்தார். அமைச்சர் துரைக்கண்ணு சிறப்புரை ஆற்றினார்.

    பேரணியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட பால்வள தலைவர் காந்தி, முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பகுதி செயலாளர்கள் அறிவுடை நம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியையொட்டி பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியேற்பு நடைபெற்றது.

    பேரணியையொட்டி பிளாஸ்டிக் உறைகளில் வைக்கப்பட்ட உணவுப்பொருட்களை வாங்கி உண்பதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட குடிநீரை பருகுவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் வண்ண கொடிகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் விரிப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட 8 உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியின் போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் திரட்டப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் 2 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தியும், துண்டு பிரசுரம் வழங்கியும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வெள்ளம் சூழ்ந்த காவிரி கரையோர கிராமங்களை அமைச்சர் துரைக்கண்ணு பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

    கபிஸ்தலம்:

    கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கடந்த 4 நாட்களாக கொள்ளிட ஆற்றில் அதிகளவில் நீர் திறந்துவிடப்பட்டதையடுத்து கொள்ளிட கரையோர பகுதிகளான வீரமாங்குடி, தேவங்குடி, பட்டுக்குடி, கூடலூர், புதுக்குடி, வாழ்க்கை, திருவைகாவூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் குடியிருந்து வந்த குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

    இதனை அறிந்த அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி., கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி தாழ்வான பகுதிகளில் குடியிருக்க வேண்டாம் என அறிவுறுத்தி அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக சமுதாயக்கூடம், பள்ளிக்கூடங்களில் தங்கவைத்து அவர்களுக்கு உணவு வழங்கினர். தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    மேலும் கொள்ளிட கரையோர பகுதிகளில் தாழ்வாக உள்ள இடங்களில் தண்ணீர் வெளியேறாமல் இருக்க பொதுப்பணித்துறை மூலம் மணல் அடுக்கும் பணியை செய்ய அறிவுறுத்தினர்.

    அமைச்சருடன் முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், திட்ட இயக்குனர் மந்திராசலம், முன்னாள் ஒன்றியகுழு தலைவர் கோபிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் கண்ணன், ஆணையர்கள் நாராயணன், அறிவானந்தம், பொறியாளர்கள் விஜயகுமார், கருணாநிதி, மற்றும் வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    தஞ்சையில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

    சுவாமிமலை:

    தஞ்சை வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் திருபுவனம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் கடைவீதியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நகர செயலாளரும், திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவருமான சிங் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

    மயிலாடுதுறை எம்.பி ஆர்.கே.பாரதிமோகன், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய தலைவருமான ஏ.வி.கே.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான இரா.துரைக்கண்ணு கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு, நீர் மோர், தர்பூசணி, இளநீர், ரஸ்னா, பலாப்பழம் வழங்கினார்.

    இந்த விழாவில் திருபுவனம் நகர துணைச்செயலாளர் எல்.எஸ்.ஜோதி, தலைமை கழக பேச்சாளர் கோகி.பாஸ்கர், திருபுவனம் வேளாண்மைக் கூட்டுறவு வங்கி தலைவர் முத்துக்குமார், திருவள்ளுவர் பட்டுக்கூட்டுறவு சங்க தலைவர் ஜி.பன்னீர்செல்வம், மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் வரலெட்சுமி, நகர பேரவை இணைச்செயலாளர் ஜி.மயில்வேல், ஆட்டோசங்கர், தியாகராஜன், நகர பாசறை செயலாளர் ராஜன், ராஜசேகரன், வெங்கடேஷ், தேவசகாயம், ஆனந்தன், ஜெயராமன், பழவண்டி நாகராஜன், குமரேசன், சிங் ரமேஷ் மற்றும் திருபுவனம் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் வறட்சி காலத்திலும் வளர்ச்சி திட்டங்களை அறிவிப்பவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் துரைக்கண்ணு கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் அமைச்சர் துரைக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகா மாநிலத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் வருமா? என்பதற்கெல்லாம் யூகமாக பதில் கூற முடியாது. தமிழக முதல்வர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு இதுவரை எந்த வகையில் அழுத்தம் கொடுத்தாரோ, அதே போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அழுத்தம் கொடுப்பார்.

    மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கும் செல்வார். மத்தியஅரசு அமைத்துள்ள வரைவு திட்டத்தை ஏற்று கொண்டதா? இல்லையா? என்பதில் பிரச்சினை இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்துக்குரிய 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் கொடுத்தே ஆக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான் தமிழக முதல்வரின் கோரிக்கை. எங்களுடைய கோரிக்கையும், செயல்பாடும் அது தான்.

    குறுவை சாகுபடி கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தான் பொய்த்துள்ளது. அப்படியும் உணவு தானிய உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது.

    தமிழகத்தில் கடந்த 144 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடந்தாண்டு வறட்சி ஏற்பட்டது. அந்த வறட்சியிலும் தமிழக முதல்வர் வளர்ச்சி காண்கின்ற வகையில் வளர்ச்சி திட்டங்களை செய்திருந்தார்.குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் குறித்து இதுவரை விவாதிக்கவில்லை. குறுவை சாகுபடிக்கான கால அவகாசம் இருக்கிறது, பருவ மழை தொடங்க இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தண்ணீர் பெற இருக்கிறோம்.

    குடிமராமத்து பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்வது பற்றி ஆயத்த பணி நடைபெற்று வருகிறது. உரிய நிதியை ஒரிரு நாட்களில் முதல்வர் அறிவிப்பார். அதன்மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×