இன்ஸ்டாகிராமில் பிரபலமாகும் ஆசையில் ரூ.15 ஆயிரம் இழந்த இளம்பெண்

பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்ததால் வைரலாக பரவியது.இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
ஓடும் கார் மீது அமைந்து சென்ற இளம்பெண்ணை படத்தில் காணலாம்.
ஓடும் கார் மீது அமைந்து சென்ற இளம்பெண்ணை படத்தில் காணலாம்.
Published on

உத்திரபிரதேசம்:

இன்ஸ்டாகிராமில் லைக்ஸ், கமெண்ட்ஸ், பெற்று அனைவரிடமும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் எந்த சாகசத்தையும் செய்யத் தயங்குவதில்லை. சிலர் மலைகளில் ஏறி வீடியோ எடுக்கிறார்கள்.

ரெயில் தண்டவாளத்தில் ஆபத்தான நிலையில் வீடியோ பதிவு செய்கிறார்கள். ஒரு சிலர் ரெயில்வே பிளாட்பாரத்தில் நடனம் ஆடுகின்றனர்.

இதுபோல பிரபலமாகும் ஆசையில் இளம்பெண் ஒருவர் ரூ.15 ஆயிரம் இழந்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், வர்ணிகா பிரயாக் மாவட்டத்தில் உள்ள சிவிலியன் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண்.

இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என ஆசைப்பட்டார். மணப்பெண் போல் உடை அணிந்து சொகுசு கார் மீது முன்னால் அமர்ந்து பிரபலமான பாடலுக்கு நடனமாடினார். முக்கிய சாலைகளில் சென்று வீடியோவை பதிவு செய்தார்.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டார். இதனை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்ததால் வைரலாக பரவியது.

ஒரு சிலர் இது குறித்து போக்குவரத்து போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். வீடியோவில் இளம்பெண் அமர்ந்து சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து இளம்பெண்ணின் விவரங்களை கண்டுபிடித்தனர்.

போக்குவரத்து விதிகளை மீறி இளம்பெண் முக்கிய சாலைகளில் காரின் மீது அமர்ந்து வீடியோ பதிவு செய்ததாக ரூ.15,500 அபராதம் விதித்தனர். இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என இளம்பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com