search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ENGvSA"

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 191 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 101 ரன்களில் சுருண்டது.

    சவுத்தாம்ப்டன்:

    தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    இதையடுத்து நடந்த டி20 தொடரின் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது.

    அந்த அணியின் ஹென்ரிக்ஸ் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 70 ரன்களை எடுத்தார். மார்க்ரம் 51 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 17 ரன், கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் 14 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், இங்கிலாந்து 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 90 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஷம்சி 5 விக்கெட்டும், மகராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 2-1 என டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது ஷம்சிக்கும், தொடர் நாயகன் விருது ஹென்ரிக்சுக்கும் அளிக்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்க உள்ளது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 207 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 149 ரன்களை எடுத்து தோற்றது.

    கார்டிப்:

    தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கார்டிப்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை குவித்தது. அந்த அணியின் ரிலே ருசோவ் அதிரடியாக ஆடி 55 பந்துகளில் 5 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட 96 ரன்களை குவித்தார். ஹென்ரிக்ஸ் 53 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி விரைவில் அவுட்டானார். அவர் 14 பந்தில் 29 ரன் எடுத்தார்.

    மொயீன் அலி 28 ரன்னும், ஜேசன் ராய் 20 ரன்னும் எடுத்து வெளியேறினர். சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், இங்கிலாந்து 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் பெலுகுவாயோ, ஷம்சி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், நிகிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் இரு அணிகளும் அணி 1-1 என சமனிலை வகிக்கிறது.

    • அதிரடியாக விளையாடி மொயின் அலி 16 பந்தில் அரை சதம் அடித்தார்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி என்கிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராய் - பட்லர் களமிறங்கினர்.

    ஜேசன் ராய் 8, பட்லர் 22 ரன்னில் லுங்கி என்கிடி பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்ததாக டேவிட் மலான் - பேர்ஸ்டோவ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 23 பந்தில் 43 ரன்கள் எடுத்த நிலையில் மலான் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த வந்த மொயின் அலி தொடக்க முதலே அதிரடியாக விளையாடினார். அவர் 16 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இதில் 6 சிக்கர்கள் அடங்கும். 52 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலியும் 90 ரன்கள் எடுத்த நிலையில் பேர்ஸ்டோவும் லுங்கி என்கிடி பந்தில் அவுட் ஆனார்கள்.

    இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி என்கிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா ஆடியது. 7 ரன்கள் எடுப்பதற்க்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டிகாக் 2, ரிலீ ரோசோவ் 4 ரன்னில் ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ட்ரிக்ஸ் 57 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மில்லர் 8, கிலாசன் 20 என விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்காக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போராடினார். அவர் 28 பந்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 8 சிக்சர் அடங்கும்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    • இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
    • இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் பிரிஸ்டல் மைதானத்தில் நாளை நடக்கிறது.

    பிரிஸ்டல்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 62 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து 118 ரன் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றது. 3-வது போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

    அடுத்து இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடர் நடக்கிறது. இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் பிரிஸ்டல் மைதானத்தில் நாளை (27-ந் தேதி) நடக்கிறது. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இரு அணிகளும் உள்ளன. இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தென்னாப்பிரிக்க அணி சார்பாக 32 பவுண்டரிகள் விலாசபட்டது.
    • 2011-ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 333/6 ரன்களை எடுத்திருந்தது.

    இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. அதன்படி முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 333 ரன்கள் குவித்தது.

    தென்னாப்பிரிக்கா அணி சார்பாக வேண்டர்டுசைன் சிறப்பாக விளையாடி 133 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 77 ரன்களும், துவக்கவீரர் மலான் 57 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் 334 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக நல்ல துவக்கத்தை பெற்றது.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்த நிலையில் நிச்சயம் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துவக்க வீரர்கள் இருவரை தொடர்ந்து ஜோ ரூட் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் கை கொடுக்காததால் இறுதியில் இங்கிலாந்து அணி 46.5 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த போட்டி இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ்க்கு கடைசி ஒருநாள் போட்டி என்பதால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதே வேளையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கின் போது ஒரு வினோதமான நிகழ்வும் நடந்துள்ளது.

    ஏனெனில் 50 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 333 ரன்கள் குவித்தும் அந்த அணியின் வீரர்கள் ஒருவர் கூட ஒரு சிக்சரை கூட அடிக்கவில்லை. தென்னாப்பிரிக்க அணி சார்பாக 32 பவுண்டரிகள் விலாசபட்டதே தவிர ஒரே ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை.

    இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி எந்த ஒரு சிக்சரும் அடிக்காமல் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. 2011-ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 333/6 ரன்களை எடுத்திருந்தது. 2020-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கை அணி 345/8 ரன்களை எடுத்தது. ஒரு சிக்சர் கூட அடிக்காமல் அதிக ரன்கள் எடுத்த அணியாக இலங்கை அணி முதல் இடத்தில் உள்ளது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 333 ரன்களை குவித்தது.
    • தென் ஆப்பிரிக்காவின் நோர்ஜே 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

    செஸ்டர் லீ ஸ்ட்ரீட்:

    தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. வான் டெர் டுசன் சிறப்பாக ஆடி சதமடித்து 133 ரன்னில் அவுட்டானார். மார்கிரம் 77 ரன்னிலும், ஜேன்மன் மலான் 57 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து, 334 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய், பேர்ஸ்டோ சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. ராய் 43 ரன்னில் வெளியேறினார்.

    பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 63 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜோ ரூட் பொறுப்புடன் ஆடினார். அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

    முதலில் நிதானமாக ஆடிய ஜோ ரூட் அரை சதமடித்தார். அதன்பின் அதிரடியாக ஆடினார். அவர் 86 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இங்கிலாந்து 46.5 ஓவரில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஆன்ரிச் நோர்ஜே 4 விக்கெட்டும், ஷம்சி, மார்கிரம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது வான் டெர் டுசனுக்கு அளிக்கப்பட்டது.

    • இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடிய ரிச்சர்ட் க்ளீசன் தொடர்ந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.
    • பென் ஸ்டோக்ஸ்-க்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து தற்போது இந்தியாவுடனான தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. நாளை இந்தியாவுடனான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இந்த தொடரை வெல்ல இங்கிலாந்து அணி கடுமையாக போராடும்.

    இந்தியாவுடானான தொடர் நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20, 3 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

    இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் தனது புனித யாத்திரை இடைவேளைக்குப் பிறகு அணியில் இணைய உள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியில் இவர் இடம் பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் இடம் பெறாத பேர்ஸ்டோவ் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடிய ரிச்சர்ட் க்ளீசன் தொடர்ந்து அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் மற்றொரு வீரரான பென் ஸ்டோக்ஸ்-க்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் அணி:

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, பேர்ஸ்டோ, பிரைடன் கார்ஸ், சாம் கரன், லிவிங்ஸ்டன், கிரேக் ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், ஆடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி.

    டி20 அணி:

    ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆடில் ரஷித், ஜேசன் ராய், பில் சால்ட், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி.

    • இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஒருநாள் தொடரில் ஆடவில்லை.

    தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளது. ஜூலை 19 முதல் போட்டிகள் தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்து ஒயிட் பால் கேப்டனான பவுமா விலகி உள்ளார். மணிகட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இங்கிலாந்து எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    ஜூலை 27 முதல் 31 வரை நடக்கவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அயர்லாந்துக்கு எதிராக ஆகஸ்டு 3 முதல் 5 வரை நடக்கும் 2 போட்டிகள் கொண்ட தொடரிலும் டேவிட் மில்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடர் ஜூலை 19 முதல் 24 வரை நடைபெறுகிறது.

    இந்தியாவுக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்ட நிலையில் பவுமாவுக்கு எட்டு வாரங்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அயர்லாந்திற்கு எதிரான டி20 ஐத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. லார்ட்ஸில் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்டு 17-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் அணியின் கேப்டனாக டீன் எல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிராக அறிமுகமான இளம் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் டி20 அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

    வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி டி20 அணிக்கான முதல் போட்டியில் ஆட உள்ளார். அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறார்.

    டெஸ்ட் அணி:

    டீன் எல்கர் (C), சரேல் எர்வீ, கீகன் பீட்டர்சன், ரியான் ரிக்கெல்டன், ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டுசென், கயா சோண்டோ, கைல் வெர்ரேய்ன் (WK),டுவான் ஆலிவியர், ககிசோ ரபாடா, மார்கோ ஜான்சன், சைமன் ஹார்மர், கெளத்தோ சிபம்லா, க்ளென்டன் ஸ்டூர்மேன், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, கேசவ் மகாராஜ்

    ஒருநாள் அணி:

    கேசவ் மகராஜ் (c), குயின்டன் டி காக் (WK), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், ஜான்மேன் மலான், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ராஸ்ஸி வான் டெர் டுசென், கயா சோண்டோ, கைல் வெர்ரைன், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ட்வைன் ப்ரிடோரியஸ், மார்கோ ஜான்சன், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி, லிசாட் வில்லியம்ஸ்.

    டி20 அணி:

    டேவிட் மில்லர் (c), குயின்டன் டி காக் (WK), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், ஐடன் மார்க்ரம், ரிலீ ரோசோவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென், வெய்ன் பார்னெல், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, டுவைன் ப்ரிடோரியஸ், கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ஜெரால்ட் கோட்ஸி.

    ×