search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 போட்டி: 234 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்காவை மிரள வைத்த இங்கிலாந்து
    X

    டி20 போட்டி: 234 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்காவை மிரள வைத்த இங்கிலாந்து

    • அதிரடியாக விளையாடி மொயின் அலி 16 பந்தில் அரை சதம் அடித்தார்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி என்கிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராய் - பட்லர் களமிறங்கினர்.

    ஜேசன் ராய் 8, பட்லர் 22 ரன்னில் லுங்கி என்கிடி பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்ததாக டேவிட் மலான் - பேர்ஸ்டோவ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 23 பந்தில் 43 ரன்கள் எடுத்த நிலையில் மலான் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த வந்த மொயின் அலி தொடக்க முதலே அதிரடியாக விளையாடினார். அவர் 16 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இதில் 6 சிக்கர்கள் அடங்கும். 52 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலியும் 90 ரன்கள் எடுத்த நிலையில் பேர்ஸ்டோவும் லுங்கி என்கிடி பந்தில் அவுட் ஆனார்கள்.

    இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி என்கிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா ஆடியது. 7 ரன்கள் எடுப்பதற்க்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டிகாக் 2, ரிலீ ரோசோவ் 4 ரன்னில் ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ட்ரிக்ஸ் 57 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மில்லர் 8, கிலாசன் 20 என விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்காக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போராடினார். அவர் 28 பந்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 8 சிக்சர் அடங்கும்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    Next Story
    ×