search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electric wire"

    • திருமங்கலம் அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பியால் டவுன்பஸ் நிறுத்தப்பட்டது.
    • பள்ளி, கல்லூரி மாணவர்கள், கிராமமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா–விற்குட்பட்டது நேசனேரி கிராமம். சுமார் 400 வீடுகள் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு மதுரையில் இருந்து சிவரக்கோட்டை செல்லும்டவுன்பஸ் தினசரி 5 முறை வந்து செல்கிறது.

    இந்த பஸ் மூலமாக செங்கப்படை மற்றும் திருமங்கலம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சென்று மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கிராமமக்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் இந்த பஸ்சை நம்பித்தான் உள்ளனர்.

    நேசனேரி-செங்கப்படை ரோட்டில் அமைந்துள்ள மின்கம்பிகள் திடீரென உயரம்குறைந்து தாழ்வனது. இதனால் மின்கம்பிகள் பஸ்சில் உரசத் தொடங்கின. மழைக்கு மின்கம்பம் பூமிக்குள் இறங்கியதால் மின்கம்பிகள் தாழ்வானது.

    இதனால் மதுரையில் இருந்து சிவரக்கோட்டைக்கு சென்ற டவுன் பஸ்கள் நேசநேரி கிராமத்திற்குள் வரவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள், கிராமமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

    இதனை தொடர்ந்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர். தாழ்வான மின்கம்பிகளை மின்வாரியத்தில் கூறி உடனடியாக சீர்படுத்தவும், மண்சாலையை சரிசெய்தால்தான் பஸ்சை மீண்டும் இயக்கமுடியும் என தெரிவித்தனர்.

    திருமங்கலம் மின்வாரியம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றிக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். மின்கம்பிகள் சரி–செய்த பின்புதான் மீண்டும் பஸ் போக்குவரத்து நடைெபறும் என்ற தகவல் கிராமமக்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    • தென்னந்தோப்பில் இரவு நேரத்தில் மின் மோட்டார் அறையில் இருந்துபோர்வெல் பம்ப்செட் மோட்டாருக்கு செல்லும் மின்வயர்களை திருடி உள்ளனர்.
    • அப்பகுதி மக்கள் கையும் களவுமாக மின் வயர்களுடன் பிடித்து பேராவூரணி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மருங்கப்பள்ளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 19). அதே பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (20). இவர்கள் இருவரும் குருவிக்கரம்பை அருகே உள்ள முனுமா க்காடு கிராமத்தில் தனியா ருக்கு சொந்தமான தென்ன ந்தோப்பில் இரவு நேரத்தில் மின் மோட்டார் அறையில் இருந்துபோர்வெல் பம்ப்செட் மோட்டாருக்கு செல்லும் மின்வயர்களை திருடி உள்ளனர்.

    இவர்களை அப்பகுதி மக்கள் கையும் களவுமாக மின் வயர்களுடன் பிடித்து பேராவூரணி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்குபதிவு செய்து மூர்த்தி, அஸ்வின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • தேவகோட்டையில் மின் கம்பியில் தொங்கும் கல் சாலையில் செல்வோரின் மீது விழும் அபாயம் உள்ளது.
    • மின்சாரத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில் மின்சார கம்பிகள் தொய்வு ஏற்பட்டு ஒன்றோடு ஒன்று உரசாமல் இருக்க மின்சார துறையினர் கம்பியில் கல்லை கட்டி தொங்கவிட்டு உள்ளனர். இந்தச் சாலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் நடந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர்.

    கோட்டாட்சியர், ஆணையாளர், மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் இந்த சாலையில் உள்ள மின் கம்பியில் கல் தொங்கி கொண்டு இருப்பதால் அது எந்த நேரத்திலும் அந்த வழியாக செல்வோரின் தலையை பதம் பார்க்க வாய்ப்பு உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் முருகன் கூறிகையில், மின்சாரத் துறை அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.

    இதே போல் தாழ்வான மின் கம்பிகள் அதிக இடங்களில் செல்கிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மின்சார துறை அதிகாரிகள் அலட்சியத்தால் உயிர் பலிகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளோம் என்றார்.

    வெம்பாக்கம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்த முதியவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அருகே உள்ள குண்டையாந்தாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் (வயது 65). கூலி தொழிலாளி. இவர் தினமும் காலையில் மேனலூர் கிராமத்திற்கு சென்று டீ குடிப்பது வழக்கம்.

    இன்று காலை டீ கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். வழியில் காலை கடன் கழிக்க சாலையை விட்டு இறங்கினார்.

    அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார். தூசி போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பியை மாற்றியமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சர்க்கரை மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ரஞ்சித் (வயது 20). விவசாய தொழிலாளி. இந்த நிலையில் நேற்று மாலை வடபாதிமங்கலம் புனவாசல் கிராமத்தில் உள்ள தனது அக்காள் அன்பரசி வீட்டுக்கு ரஞ்சித் புறப்பட்டு சென்றார்,

    அப்போது அன்பரசி வீட்டு அருகே சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பி கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் ரஞ்சித் மின்கம்பியை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரஞ்சித் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி வடபாதி மங்கலம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சுகந்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருதிறார்.

    ஊத்துக்கோட்டை அருகே கரைகள் அமைக்கும் பகுதியில் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாக தொங்கி கொண்டிருப்பதால் கரைகள் அமைக்கும் பணிகள் தாமதமாகி உள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பினால் ‌ஷட்டர்கள் வழியாக தண்ணீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்துபடுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி, ஆற்றம்பாக்கம், ஒதப்பை, சோமதேவன்பட்டு, கொரகண்தண்டலம், மோவூர், மெய்யூர், செம்பேடு, தாமரைபாக்கம், அனைகட்டு வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.

    இப்படி தண்ணீர் வீணாக வங்கக்கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகள் பயன்படும் விதத்திலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்காகவும் தமிழக அரசு ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட முடிவு செய்து ரூ. 7 கோடி ஒதுக்கியது.

    இந்த நிதியை கொண்டு 200 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு அணை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு இரவு பகலாக நடந்து வருகிறது.

    இதுவரை 95 சதவீதப் பணிகள் முடிவு பெற்று தற்போது தடுப்பு அணை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் இரு புறங்களில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமார் 20 அடி உயரத்தில் கரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கரைகள் அமைக்கும் பகுதியில் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கின்றன. இதனால் கரைகள் அமைக்கும் பணிகள் தாமதமாகி உள்ளது.

    இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தாழ்வான உயர் அழுத்த மின் கம்பிகளை சீர் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    மின்வாரிய உயர் அதிகாரிகள் தாழ்வான மின் வயர்களை சீர் செய்ய விரைந்து நடவடிக்கை எடுத்தால் தடுப்பு அணை பணிகள் நிறைவு பெற்று பருவ மழையின் போது நீரை சேமித்து வைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

    கண்ணமங்கலம் மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அப்போது மின்வயர் அறுந்து விழுந்ததை பெண் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மின்வயர் ஒன்று அறுந்து விழுந்தது.

    அந்த வயர் அறுந்த நிலையில் ரோட்டில் கிடந்தது. இந்த நிலையில் அந்த வழியாக சென்ற ராணி, தேசிகாமணி, அஞ்சலி, ஞானவேல், பிரியா, குணசேகரன் ஆகியோர் அறுந்து கிடந்த வயரில் மின்சாரம் பாய்ந்ததை அறியாமல் அதனை மிதித்தனர்.

    அப்போது அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ராணி வழியிலேயே இறந்து விட்டார். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருக்கனூர் அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி பலியானார்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே காட்டேரிகுப்பம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரந்தாமன். விவசாயி. இவரது மனைவி சங்கரி (வயது 38).

    இவர் நேற்று காரில் தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வயல்வெளிக்கு ஓட்டி சென்றார்.

    அப்போது வயல் வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் சங்கரி மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சங்கரியை அருகில் வயல் வேலையில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்சாரம் தாக்கி பலியான சங்கரிக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பீகார் மாநிலத்தின் பானியாபுர் பகுதியில் இன்று உயரழுத்த மின்கம்பி அறுந்து கீழே சென்ற பள்ளி வேன் மீது விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
    பீகார்:

    பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தின் பானியாபுர் பகுதியில் இன்று பள்ளி சிறுவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில், வேன் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், 11 குழந்தைகள் மீது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 பேர் கவலைகிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×