என் மலர்
நீங்கள் தேடியது "trampled"
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் அருகே உள்ள குண்டையாந்தாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் (வயது 65). கூலி தொழிலாளி. இவர் தினமும் காலையில் மேனலூர் கிராமத்திற்கு சென்று டீ குடிப்பது வழக்கம்.
இன்று காலை டீ கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். வழியில் காலை கடன் கழிக்க சாலையை விட்டு இறங்கினார்.
அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார். தூசி போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பியை மாற்றியமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சர்க்கரை மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ரஞ்சித் (வயது 20). விவசாய தொழிலாளி. இந்த நிலையில் நேற்று மாலை வடபாதிமங்கலம் புனவாசல் கிராமத்தில் உள்ள தனது அக்காள் அன்பரசி வீட்டுக்கு ரஞ்சித் புறப்பட்டு சென்றார்,
அப்போது அன்பரசி வீட்டு அருகே சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பி கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் ரஞ்சித் மின்கம்பியை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரஞ்சித் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி வடபாதி மங்கலம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சுகந்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருதிறார்.






