என் மலர்
நீங்கள் தேடியது "death young man"
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த ஓதவந்தான்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி அருகில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தில் ஒரு வாலிபர் பிணம் மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுபற்றி புதுப்பட்டினம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து குளத்தில் மிதந்த வாலிபர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்த வாலிபர் , சீர்காழி அடுத்த திருநீலகண்டம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரது மகன் ராஜசேகர் (வயது 20). என தெரியவந்தது. இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ராஜசேகர் உடலை பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வாலிபர் ராஜசேகர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஓதவந்தான்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சாராயம் குடித்து விட்டு குளத்தில் குளிக்கும் போது அவர் இறந்து இருக்கலாமோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இருப்பினும் உடல் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே ராஜசேகரின் சாவுக்கான உண்மை காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சர்க்கரை மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ரஞ்சித் (வயது 20). விவசாய தொழிலாளி. இந்த நிலையில் நேற்று மாலை வடபாதிமங்கலம் புனவாசல் கிராமத்தில் உள்ள தனது அக்காள் அன்பரசி வீட்டுக்கு ரஞ்சித் புறப்பட்டு சென்றார்,
அப்போது அன்பரசி வீட்டு அருகே சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பி கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் ரஞ்சித் மின்கம்பியை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரஞ்சித் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி வடபாதி மங்கலம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சுகந்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருதிறார்.
மதுரை:
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தனசேகரன் (வயது23). இவர் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது பிளாக்கில் வசித்து வந்தார்.
நேற்று இரவு 7 மணி அளவில் அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசிக் கொண்டே பால்கனி பகுதிக்கு வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அப்பகுதியினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தனசேகரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






