என் மலர்

  நீங்கள் தேடியது "balcony"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செல்போனில் பேசியபடி பால்கனியில் நின்ற வாலிபர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

  மதுரை:

  மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தனசேகரன் (வயது23). இவர் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது பிளாக்கில் வசித்து வந்தார்.

  நேற்று இரவு 7 மணி அளவில் அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசிக் கொண்டே பால்கனி பகுதிக்கு வந்தார்.

  அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

  ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அப்பகுதியினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தனசேகரன் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  ×