search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dussehra festival"

    • இந்த வருடத்திற்கான தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலையடி வாரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த வருடத்தி ற்கான தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைதொடர்ந்து தினந்ேதாறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்த ப்பட்டு விதவிதமான அலங்காரங்களில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.

    முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. கேரள செண்டை மேளத்துடன் அம்மன் சிறப்பு அலங்கார த்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். அப்போது ஏராள மான பக்தர்கள் விதவித மான அலங்காரங்களில் கோவிலுக்கு வந்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதனைதொடர்ந்து சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் கண்ணைக்கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சி களும் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • தூத்துக்குடி தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாதாரனைகள் நடைபெற்று வருகின்றன.
    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று இருந்ததால் இது போன்ற தசரா நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாதாரனைகள் நடைபெற்று வருகின்றன. சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் 9-ம் நாள் நடைபெற்ற சிறப்பு பூஜையில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு தேர்வு முறையில் சிறப்பு பரிசை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று இருந்ததால் இது போன்ற தசரா நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு எல்லா பகுதிகளிலும் சிறப்பாக நடைபெறுகிறது. இதை கண்டு அனைத்து தரப்பினரும் மனமகிழ்ச்சி யோடு உள்ளனர். சில கவலைகளை போக்கு வதற்கும் இதுபோன்ற இன்னிசை கச்சேரிகளும் தேவைப்படுகின்றன. எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும், தொழில்வளம் பெருகி அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையோடு

    ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பேசினார்.

    விழாவில் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாநகர மாணவரணி அமைப்பாளர் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பிரபு, கவுன்சிலர் பேபி ஏஞ்சலின், வட்டச்செயலாளர் பொன்ராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா மற்றும் சுப்பையா, கணேசன், சிவக்குமார், ராஜசேகர், வரதன், முத்துமாரியப்பன், ஜெயக்குமார், கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தி.மு.க. பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

    • 6-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் மகிஷாசூர மர்த்தினி திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
    • பரதநாட்டிய குழுவினருக்கு கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருகோவில் தசரா பெருந்திருவிழாவில் 6-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் மகிஷாசூர மர்த்தினி திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    நேற்று இரவு பரதநாட்டியம் நடைபெற்றது. இந்த பரதநாட்டிய குழுவினருக்கு கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அருகில் பாரத திருமுருகன் திருச்சபை நிறுவனரும் சமய சொற்பொழிவாளருமான ஏ.வி.பி.மோகனசுந்தரம் உடன் இருந்தார்.

    இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்குபல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    கோவிலில் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி உதவிய ஆணையர் சங்கர் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விரதம் இருந்து வந்த பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கைவசூல் செய்து வருகின்றனர். தற்போது குலசேகரன்பட்டினம். உடன்குடி, பகுதியில் தசரா திருவிழாவில் எழுச்சி அதிகமாகவே காணப்படுகிறது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது.
    குலசேகரன்பட்டினம்:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்தனர். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவில் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் தங்கியிருந்து வழிபட்டு வருகின்றனர். அவர்கள் தினமும் ஒரு வேளை மட்டும் பச்சரிசி உணவு சாப்பிட்டு விரதம் இருந்து வருகின்றனர்.

    விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, சிவன், விஷ்ணு, பிரம்மன், விநாயகர், முருகபெருமான், கிருஷ்ணர், ராமர், லட்சுமணர், சுடலைமாடன், அனுமார் போன்ற பல்வேறு சுவாமிகளின் வேடங்களையும், முனிவர், அரசர், போலீஸ்காரர், செவிலியர், நரிக்குறவர், அரக்கன், சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிந்தனர்.



    ஒவ்வொரு ஊரிலும் வேடம் அணிந்த பக்தர்கள் குழுக்களாக வாகனங்களில் ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூலித்து வருகின்றனர். தசரா குழுக்கள் சார்பில் கரகாட்டம், மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. விரதம் இருந்து காப்பு அணிந்த சில பக்தர்கள் தசரா திருவிழாவின் கடைசி சில நாட்கள் மட்டும் வேடம் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, கோவிலில் செலுத்துவார்கள். இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    10-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். #tamilnews
    ×