search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "double murder"

    சித்தூர் அருகே இரட்டை கொலை வழக்கில் சென்னையை சேர்ந்த 5 பேர் சித்தூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
    சித்தூர்:

    கடந்த 10-ந் தேதி சித்தூர் குடிபாலா, நரஹரிபேட்டை செக்போஸ்ட் அருகே அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

    இது குறித்து, குடிபாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அவர்களில் ஒருவர் சென்னை கே.கே.நகரை சேர்ந்த அசோக்குமார் என்றும், மற்றொருவர் குன்றத்தூரை சேர்ந்த கோபி என தெரிந்தது.

    இது குறித்து, 3 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கசித்தூர் போலீஸ் நிலையத்தில் 5 பேர் சரண் அடைந்தனர்.

    விசாரணையில், அவர்கள் சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ரமேஷ் (எ) குட்டி (வயது 35), தாம்பரத்தை சேர்ந்த கார்த்திக் (23), குன்றத்தூரை சேர்ந்த குழந்தைவேல் (23), சிவா (26), நந்தம்பாக்கம் சுமேஷ் (32) என்பது தெரியவந்தது.

    சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் சீசிங் ராஜா, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர். இவருக்கும் அசோக்குமாருக்கு நட்பு ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சனைக்குரிய நிலம் ஒன்று அசோக்குமாரிடம் விற்பனைக்கு வந்தது. அவர் சீசிங் ராஜாவிற்கு தெரிவித்து, இருவரும் சேர்ந்து ரூ.3 கோடிக்கு அந்த நிலத்தை வாங்கி உள்ளனர். பின்னர், அந்த நிலத்தை அசோக்குமார் கடந்த மாதம் ரூ.10 கோடிக்கு வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். சீசிங் ராஜாவுக்கு பங்கு தொகை வழங்காமல் ஏமாற்றி உள்ளார்.

    இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சீசிங் ராஜா, அசோக்குமாரை கொலை செய்யதிட்டமிட்டார்.

    கடந்த 9-ந் தேதி அசோக்குமார், சீசிங் ராஜா, அசோக்குமாரின் நண்பர் கோபி உட்பட 7 பேர் ஒரு கொலை வழக்கில் திருவள்ளூர் கோர்ட்டுக்கு சென்றனர். பின்னர், அனைவரும் சேர்ந்து மது குடித்தனர். இரவு 11 மணியளவில் ஆந்திர மாநில எல்லைப்பகுதிக்கு வந்த அவர்கள் அசோக்குமாரிடம் பணம் தருமாறு கேட்டுள்ளனர்.

    அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த அசோக்குமாரின் நண்பர் கோபி, சீசிங் ராஜாவிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

    சீசிங் ராஜா மீது சென்னையில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது, அவர் தான் செய்த குற்றங்களை மறைக்க போலியான ஆட்களை சரணடைய வைத்து தப்பி வருவதும் தெரியவந்தது.

    முக்கிய குற்றவாளியான சீசிங் ராஜாவை கைது செய்ததால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும்.

    இந்த வழக்கை விசாரிப்பதற்காக சென்னை சென்ற ஆந்திரா போலீசாரை தமிழக போலீசார் அலைக்கழித்துள்ளனர்.

    சீசிங் ராஜா குறித்து விசாரித்த போது அதற்கு போலீசார் சரியாக பதில் அளிக்காமல் தட்டி கழித்துள்ளனர். தலைமறைவாக உள்ள சீசிங் ராஜாவை பிடிக்க முயன்ற போது, அவர் சில போலீசாரின் உதவியால் தப்பி செல்வது தெரியவந்தது என சித்தூர் குற்றவியல் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணா குற்றம் சாட்டியுள்ளார்.#tamilnews
    திண்டுக்கல் இரட்டை கொலையில் உறவினர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கேகம்பூர் யூசுப்பியா நகரை சேர்ந்தவர் சாகுல்அமீது (வயது55). இவரது மனைவி கொலுசன் பீபி (50). இவர்களது மகன் சேக்பரீத் (27) என்பவருக்கும் மதினாபேகம் (19) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது.

    உடல் நலக்குறைவால் மதினாபேகம் கடந்த மாதம் இறந்து விட்டார். தனது தங்கையை சரியாக கவனிக்காததால்தான் அவர் இறந்து விட்டதாக மதினாபேகத்தின் சகோதரர்கள் கோபத்தில் இருந்தனர்.

    மேலும் இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சேக்பரீத் வீட்டிற்கு சென்ற கும்பல் கத்தியால் கொலுசன்பீபி, அவரது தங்கை பரக்கத்நிஷா ஆகியோரை குத்தி கொலை செய்தனர். சாகுல்அமீதுக்கும் கத்தி குத்து விழுந்தது.

    இது குறித்து நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மதினாபேகத்தின் சகோதரர்கள் இஸ்மாயில், சதாம்உசேன் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×