search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DIMITHI FESTIVAL"

    • மாவுரெட்டி யில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி நேற்று தீமிதி விழா நடைபெற்றது.
    • ஏராள மான ஆண்கள் மற்றும் பெண்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே மாவுரெட்டி யில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி நேற்று தீமிதி விழா நடைபெற்றது. இதில் ஏராள மான ஆண்கள் மற்றும் பெண்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    தீமிதி திருவிழா கடந்த 9-ந் தேதி, கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 15-ந் தேதி மறுக்காப்பு கட்டி அம்மனுக்கு நாள்தோ றும் சிறப்பு அபிஷேக ஆரா தனைகளும், அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி யும் நடைபெற்றது.

    நேற்று காலை பொது மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்த டைந்தனர். மாலை அம்மன் கோவில் முன்பு இருந்த தீ குண்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இன்று மாலை பொங்கல், மாவிளக்கு மற்றும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து நள்ளிரவு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவ டைகிறது. விழாவிற்கான ஏற்பாடு களை மாவுரெட்டி மகா மாரியம்மன் கோவில் திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்

    • முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது.
    • பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    புதுக்கோட்டை:

    ஆவுடையார்கோவில் அருகே பாண்டிபத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பொது முடக்கத்தால் 2 ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, முத்துமாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெற்று வருகிறது. 10-ம் நாள் திருவிழாவான நேற்று விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், காவடிகளை சுமந்து கோவிலை 3 முறை சுற்றி வந்தனர். அதன்பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் பாண்டிபத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்."

    • புதுவை ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரில் பத்ரகாளியம்மன் கோவிலில் 28-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திரளான ஆண், பெண் பக்தர்கள் பயபக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரில் பத்ரகாளியம்மன் கோவிலில் 28-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷே கமும், இரவில் தீமிதி திருவிழாவும் நடை பெற்றது. திரளான ஆண், பெண் பக்தர்கள் பயபக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செ லுத்தினர். (வெள்ளிக்கிழமை ) காலை அபிஷே கமும், மதியம் 12 மணிக்கு சக்திகிரகம் வீதி உலா, கூழ் வார்த்தலும், இரவில் கும்ப படை யலும் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை ) அம்மன் வீதியுலாவும், 21-ந்தேதி மஞ்சள் நீராடலும் நடக்கிறது.

    • சோழர்களின் தலைநகராக இருந்தது. அக்காலக்கட்டத்தில் முற்காலச் சோழர்களால் எடுக்கப்பட்ட கோவில்தான் வல்லம் ஏகவுரியம்மன் கோவில்.
    • தடைப்பட்ட திருமணம், பிள்ளை பாக்கியம் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக இந்தக் கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் ஏகவுரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை–யொட்டி நாளை 12-ந்தேதி பால்குடம், காவடி தீமிதி உற்சவம் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர் என்ற நகரம் தோன்றுவதற்கு முன்பு வல்லம் சோழர்களின் தலைநகராக இருந்தது. அக்காலக்கட்டத்தில் முற்காலச் சோழர்களால் எடுக்கப்பட்ட கோவில்தான் வல்லம் ஏகவுரியம்மன் கோவில்.

    சோழர்களின் வழிபடு தெய்வமாகவும், குல தெய்வமாகவும் அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய வல்லத்து காளியாகவும் விளங்கியவள்தான் இந்த ஏகவரியம்மன். தடைப்பட்ட திருமணம், பிள்ளை பாக்கியம் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக இந்தக் கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

    திருமணத் தடை உள்ள பெண்கள், இங்கே வந்து அம்மனுக்கு புடவை சாத்தி அம்மனின் திருப்பாதத்தில் குண்டு மஞ்சளை (குளியல் மஞ்சள்) வைத்து வணங்குகின்றனர். அதில் இருந்து ஒரேயொரு மஞ்சளை எடுத்து வந்து, தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, ஐதீகம்.

    இதனால் கன்னிப் பெண்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து இங்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கே எலுமிச்சைப் பழத்தை அம்மனின் திருப்பாதத்தில் வைத்து பூஜை செய்து, அதன் சாறை கோவிலிலேயே சாப்பிட்டுச் செல்ல, விரைவில் குழந்தைப் பிறப்பது உறுதி என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. அதுபோல பலனடைந்த பெண்கள் தங்களது குழந்தைக்கு இக்கோயிலில் மொட்டை அடித்து, மாவிளக்கு மாவு படைத்து நேர்த்திக் கடனைச் செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.

    தீராத நோய் அல்லது திடீர் விபத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகி விட்ட கணவருக்காக வேண்டிக் கொண்டு வரும் பெண்கள் அதிகம். தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பெண்கள், தங்களது கணவரை எமனிட–மிருந்து காக்க வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் நேர்த்திக் கடனாக எருமைக் கன்றை காணிக்கைச் செலுத்தி வழிபடுகின்றனர்.

    மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாள்களில் அம்மனுக்குச் சிறப்பு ஹோமங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது இந்தக் கோயிலின் இன்னுமொரு சிறப்பம்சம்.

    இங்கு நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டு அம்மனை வழிபட, சகல சங்கடங்களும் தீர்ந்து மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர். கருவறையில் ஏகவரி அம்மனைச் சுற்றியபடி இரு நாகங்கள் இருப்பதைக் காணலாம். ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து அம்மனைத் தரிசித்தால் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தஞ்சாவூரிலிருந்து திருச்சி சாலையில் 12 கி.மீ. தொலைவிலுள்ள வல்லம் என்ற பேரூரிலிருந்து, வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடிச் சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை 12-ந்தேதி கடைசி ஆடி வெள்ளிக்கிழமை திருவிழாவையொட்டி காவடி, பால்குடம், தீமியுடன் விமர்சையாக நடைபெற உள்ளது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • எழுமூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீமிதி திருவிழா நடைபெற்றது.
    • மாரியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, எழுமூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதில், விரதமிருந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இதில் எழுமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதியை கண்டதோடு, அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். முன்னதாக மதியம் பக்தர்களின் பால்குடம் ஊர்வலம் நடந்தது. பாதுகாப்பு பணியில் மங்களமேடு போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    • கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
    • ஒவ்வொரு நாளும் மகாபாரதம் படிக்கும் நிகழ்ச்சி மற்றும் விநாயகர் வனம், அட்சய பாத்திரம், அர்ச்சுனன் தவசு, பூவெடுப்பு, குறவஞ்சி நாடகம், திணை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தீமிதி திருவிழா நடத்துவது என கிராமமக்கள் முடிவு செய்தனர்.

    இதையொட்டி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மகாபாரதம் படிக்கும் நிகழ்ச்சி மற்றும் விநாயகர் வனம், அட்சய பாத்திரம், அர்ச்சுனன் தவசு, பூவெடுப்பு, குறவஞ்சி நாடகம், திணை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான அரவான் களப்பலி, மாடு திருப்புதல் மற்றும் தீமிதி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

    • திரௌபதி அம்மன் கோவில் தீமிதி விழா நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்பு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் 2019ல் கும்பாபிஷேகம் நடைபெற்று அதன் பிறகு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக கோவிலில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. அதன் பிறகு தற்போது ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருவிழா நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டு, துரோபதி அம்மனுக்கு கொடியேற்றி காப்பு கட்டி விழாவை தொடங்கினர்.

    அதன் பின் 3 மாதம் காலமாக மகாபாரதம் பாடி அதைச் சுற்றியுள்ள 8 கிராம பொதுமக்கள் அவர்களுடைய குடும்ப வழிபாடான மண்டாபிடி என்னும் நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். மேலும் அரவான் களபலி நிகழ்ச்சி நடத்தி மேலும் இறுதி நாளான திரௌபதி அம்மனை பல வண்ண மலர்களால் அலங்கரித்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து அம்மனின் அருளால் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து அவர்களுடைய வேண்டுதலை நிறைவேற்றி அம்மனின் அருளை பெற்று சென்றனர். மேலும் இந்த திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் தங்களுடைய குடும்பத்தோடு அம்மனை வழிபட்டு அருளை பெற்று சென்றனர்.

    ×